12:42:00 PM
விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தலைப்பு விவகாரம் இன்னும் முடியவில்லை. அதற்குள் டிவி உரிமை, ஏரியா உரிமை என வியாபாரம் வரிசையாக களைக் கட்ட தொடங்கி இருக்கின்றன.
விஜய் நடித்த 'நண்பன்' படத்தினை ஒளிபரப்பிய அன்று விஜய் டிவிக்கு அதிக TRP வந்தது. சமீபத்தில் எந்த ஒரு படத்திற்கும் அவ்வளவு TRP கிடைக்கவில்லை.
'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் கடும் போட்டிக்கு இடையே விஜய் டிவி வாங்கி இருக்கிறது. ஆனால் எவ்வளவு விலைக் கொடுத்து வாங்கியது என்பது இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் 'துப்பாக்கி' படத்தின் கேரளா உரிமைக்கு கடும் போட்டி நிலவியதாம். இறுதியில், படத்தின் உரிமையை 'நண்பன்' படத்தினை விட சுமார் 50% அதிகமாக கொடுத்து வாங்கியிருக்கிறது தமீன்ஸ் நிறுவனம்.
'துப்பாக்கி' படத்தின் தலைப்பு பற்றிய வழக்கு 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 24ம் தேதி பிரச்னை ஒத்தி வைக்கப்பட்டால் தலைப்பை மாற்றி விடலாம் என்று முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
12:44:00 PM
தமிழில் விஜயகாந்த், இந்தியில் ரஜினிகாந்த், மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி என நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளியான எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்றது எஸ்.ஏ.சந்திரசேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை'. இப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காகிறது.
இம்முறை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பு மற்றும் இயக்கம் மேற்பார்வை ஆகியவற்றை மட்டும் மேற்கொள்கிறார். ரீமேக் படத்தினை 'இயக்குகிறார் சினேஹா பிரிட்டோ. ரீமாசென், பியா, பிந்துமாதவி, 'ஆச்சர்யங்கள்' பட நாயகன் தமன்குமார், சின்னத்திரை நகைச்சுவையாளர் மகேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
'சட்டம் ஒரு இருட்டறை' படக்குழுவையும், FIRST LOOK-ஐயும் இயக்குனர் ஷங்கர் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவர் பேசியது :
"நான் பெரிதாக எதுவும் சாதித்ததாக எனக்கு என்றுமே தோன்றியது கிடையாது. அப்படி நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என நீங்கள் யாராவது கருதினால் அந்த பெருமை மொத்தமும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களையே சாரும். காரணம் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்களிடம் உதவியாளராக சேருவதற்கு முன் ஒருசில மேடை நாடகங்களில் நடித்தபடி நாடக நடிகராக இருந்த நான், மிகுந்த சோம்பேறியாகவும் இருந்தேன்.
அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு தான் சென்றேன். ஆனாலும் உதவி இயக்குநர் ஆகிவிட்டேன். எஸ்.ஏ.சி. அவர்களிடம்தான் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன். அதேமாதிரி ஒழுக்கம், நேரம் தவறாமை, திட்டமிடல் உள்ளிட்டவைகளையும் அவரிடம் கற்றுகொண்டு தான் இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்.
என்னை மாதிரி ஏராளமானவர்களை வளர்த்துவிட்டவர் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவரிடமிருந்து புதிதாக வந்திருக்கும் இளம் பெண் இயக்குநர் சினேகா பிரிட்டோவும், இந்த படமும், இதில் நடித்திருக்கும் நட்சத்திரங்களும், பணிபுரிந்திருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் " என்று தெரிவித்தார்.
அவ்விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது " ஷங்கரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அன்றும் சரி, இன்றும் சரி, சொன்னால் சொன்னபடி நடந்து கொள்வார். ஒரு படவிழா, நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்றேன். என்ன விழா, ஏதுவிழா என்று எதுவும் கேட்காமல் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்துவிட்டார். அதுதான் ஷங்கர்.
அவர் என்னிடம் உதவியாளராக இருந்து என்ன கற்றுக் கொண்டாரோ எனக்கு தெரியாது... ஆனால் அவரிடம் இத்தனை பிஸியிலும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் திறமை என்னை வியக்க வைக்கும் விஷயமாகும். இன்று கூட எங்கோ உள்ள பெருங்குடியில் ஷூட்டிங்கில் இருந்தவர் எனக்காக இங்கு வந்திருக்கிறார்.
'சட்டம் ஒரு இருட்டறை' பழைய படத்தில் குடும்பத்திற்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை சொல்லி இருந்தேன். இதில் காதலுக்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை இன்றைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப பிரமாண்டமாக சொல்ல வேண்டும் என்றார் என் பேத்தி சினேகா பிரிட்டோ. அதற்காகத்தான் இந்த அறிமுக விழாவிற்கு பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை அழைத்திருந்தேன்" என்றார்.
12:47:00 PM
துப்பாக்கி' முடித்தவுடன் 'யோஹன்' படத்தில் விஜய் நடிக்கவில்லை இயக்குனர் விஜய் இயக்கும் படத்தில் நடிக்கிறார்" என்று உலா வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் இயக்குனர் கெளதம் மேனன்.
தனது அடுத்த படத்தில் விஜய் நடிக்கவில்லை என்று தனது டிவிட்டரில் இணையத்தில் தெரிவித்து இருக்கிறார் கெளதம்.
கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்தில் தெரிவித்து இருப்பது " நீதானே என் பொன்வசந்தம் படத்தின் 8 பாடல்கள் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும். இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.
யோஹன் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய்யுடன் யோஹன் படம் தொடங்கவில்லை.
விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குகிறார் இயக்குனர் விஜய். 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை முடித்துவிட்டு எனது அடுத்த படத்தினை முடிவு செய்வேன்" என்று தெரிவித்து
11:39:00 AM
இரண்டு நாட்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. 'துப்பாக்கி'யை முடித்ததும் விஜய் 'யோஹன்' படத்தில் நடிக்கப் போவதில்லையாம்.. அதற்கு முன்பே இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தான் அந்த செய்தி.
இது குறித்து நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், 'துப்பாக்கி' படத்தின் மொத்த பணிகளையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடித்துக் கொடுக்க இருக்கிறார் விஜய். ஒரு மாதம் ஒய்வுவிற்கு பின் நவம்பர் மாதம் முதல் விஜய் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
'தாண்டவம்' படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆகஸ்ட் 15ம் தேதி இசை வெளியீட்டு விழா முடித்து, செப்டம்பரில் வெள்ளித்திரையில் தாண்டவமாட இருக்கிறார்கள்.
நவம்பர் மாதம் விஜய் - விஜய் இணைவதால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அதுமட்டுமன்றி, 'தாண்டவம்' படத்தின் டிரெய்லர் - உருவான விதம் வீடியோக்களை பார்த்த நடிகர் விஜய் மிகவும் சந்தோஷப்பட்டு, நவம்பரில் நமது படத்தை துவங்குகிறோம் என்று தெரிவித்து இருக்கிறாராம்.
விஜய் - கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'யோஹன்' படம் எப்போது துவங்குகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.
10:49:00 AM
பெங்களூர்: பிரபல கன்னட திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.மஞ்சு முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க வருகிறார். அதில் நாயகனாக நடிக்கப் போகிறார் விஜய்.
பெங்களூரிலிருந்து வரும் தகவல்கள் இதைத் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார், ஜீவா நடித்த முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டார். அதில் விஜய்யும் கலந்து கொண்டார். அப்போது தமிழில் நேரடிப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார் புனீத். இந்த நிலையில், கன்னடத் தயாரிப்பாளர் ஒருவரின் தமிழ்ப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் புனீத்தும் இடம் பெறுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
கன்னடத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர் கே.மஞ்சு. தமிழ்ப் படங்கள் பலவற்றை கர்நாடகத்தில் விநியோகிக்கும் உரிமையைப் பெற்றிருப்பவர் இவர். லேட்டஸ்டாக இவர் வாங்கிய படம் பில்லா 2. அதற்கு முன்பு விஜய்யின் வேலாயுதம் படத்தையும் இவர் வாங்கி விநியோகித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யை வைத்து தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறாராம் மஞ்சு.
விஜய்யின் காவலன் பட ரிலீஸின்போது விஜய்யை பெங்களூருக்கு வரவழைத்து, அவரை கன்னடத்தில் பேச வைத்து கன்னட மீடியாக்கள் மற்றும் மக்கள் மத்தியில் விஜய்க்குப் பெரும் பெயர் வாங்க முக்கியக் காரணமே மஞ்சுதான். மேலும் விஜய்க்கும், மஞ்சுவுக்கும் இடையே நல்ல நட்பும் இருக்கிறதாம். இதனால் மஞ்சு தன்னை அணுகியபோது உடனே ஓகே. சொல்லி விட்டாராம் விஜய்.
இதுகுறித்து மஞ்சு கூறுகையில், ஆரம்ப கட்ட அளவில் பேச்சுக்கள் உள்ளன. விஜய் சாருடன் பேசியுள்ளேன். நல்ல கதையைக் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதுதொடர்பாக தற்போது தீவிரமாக பேசி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் எல்லாம் முடிவாகி விடும் என்றார்.
அதேசமயம், விஜய் படத்தை தயாரிப்பதற்கு முன்பு இன்னொரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கும் திட்டமும் மஞ்சுவிடம் உள்ளதாம். இதை இயக்கப் போவது சசிக்குமாராம். ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாம். விரைவில் இது தொடங்குமாம். தமிழ், கன்னடனம், தெலுங்கு எனமூன்று மொழிகளில் இது நேரடியாக தயாராகிறதாம்
10:48:00 AM
பெங்களூர்: விஜய் நடிக்கும் யோஹன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க கன்னட முன்னணி நடிகரும், நான் ஈ படத்தில் அசத்தியவருமான சுதீப்பை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
திறமைகள் பல நிரம்பிய சுதீப் ஒரு வழியாக முழு அளவிலான தென்னிந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். கன்னடத்தில் மட்டுமே கலக்கி வந்த அவர் தற்போது நான் ஈ படத்தின் மூலம் நாடறிந்த நடிகராகி விட்டார்.
நான் ஈ மூலம் கிடைத்த புகழால் தற்போது தமிழில் நேரடியாக நடிக்கும் பட வாய்ப்புகள் சுதீப்பைத் தேடி வர ஆரம்பித்துள்ளன.
அதேபோல கன்னடம், தெலுங்கிலும் கூட அவரை நோக்கி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் பாய்ந்தோடி வருகின்றனவாம்.
அதில் முக்கியமானது கெளதம் மேனன் இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பாம். விஜய்தான் இதில் ஹீரோ. நீண்ட நாட்களாக கிடப்பி்ல உள்ள இப்படத்தை தூசி தட்டி கையில் எடுக்கிறார் கெளதம்.
இப்படத்தை முழுக்க முழுக்க நியூயார்க் மற்றும் பிற நாடுகளில் படமாக்குகிறார் கெளம் மேனன். இதில் ஒற்றன் வேடத்தில் வருகிறார் விஜய். இந்த நிலையில்தான் நான் ஈ படத்தைப் பார்த்த கெளதமுக்கு சுதீ்ப்தான் யோஹன் படத்திற்கு சரியான வில்லனாக இருப்பார் என்ற யோசனை தோன்றியதாம். இதுகுறித்து சுதீப்பிடமும் அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.
ஆனால் சுதீப் இதுகுறித்து உறுதியாக கூற மறுக்கிறார். இதை வதந்தி என்று கூட அவர் கூறுகிறார். தற்போது அவர் பச்சன் என்ற கன்னடப் படத்தில் பிசியாக இருக்கிறாராம். இதில் பாவனா நடிக்கிறார்.
10:57:00 AM

நடிகை ஆன்ட்ரியாவுக்கு விஜய் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.
பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் பிரபலமானவர் ஆன்ட்ரியா ஜெரிமியா. நடிகையாக மட்டுமின்றி தன்னை ஒரு பாடகியாகவும் நிலை நிறுத்தியுள்ளார். கமல் ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று முன்னணி நடிகைகள் எல்லாம் ஏங்க அந்த வாய்ப்பு ஆன்ட்ரியா வீட்டு வாசலுக்கே வந்தது. இதையடுத்து அவர் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே அவர் கமலின் மன்மதன் அம்பு படத்தில் நாயகன் அறிமுகமாகும் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலை பாட அழைத்துள்ளனர். ஆன்ட்ரியாவும் சென்று பாட்டை பாடிக் கொடுத்துவிட்டு, விஜயுடன் நடிக்கை ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று வாய்விட்டே கேட்டுவிட்டராம்.
இப்படித் தான் லக்ஷ்மி ராய் இயக்குனர் விஜயிடம் நடிகர் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அதற்கு அவரும் தான் விஜயை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஆன்ட்ரியாவுக்கு அப்படி யாரும் வாக்கு கொடுத்தது போன்று தெரியவில்லை
11:00:00 AM

விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவது தனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் என்பார் அடிக்கடி பிரபு தேவா.
இருவரும் இணைந்து போக்கிரி என்ற மெகா ஹிட் படத்தையும், வில்லு என்ற சுமார் படத்தையும் தந்துள்ளனர். மீண்டும் இணைவார்களா என்று கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், பிரபு தேவாவின் இந்திப் படம் ரவுடி ரத்தோரில் ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடி கலக்கினார் விஜய்.
இந்த நிலையில் மும்பையில் திடீரென விஜய்யும் அசினும் பிரபு தேவாவைச் சந்தித்தனர்.
'துப்பாக்கி' படவேலைகளுக்காக மும்பை சென்றிருந்த விஜய், அருகில்தான் பிரபுதேவா வீடு இருக்கிறது என்பதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்றார்.
விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
பிரபுதேவா இந்தியில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். அசினும் இந்தியில் நடிக்கிறார். தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய், அசினை ஜோடியாக நடிக்க வைப்பார் என்று கூறப்படுகிறது!
11:04:00 AM
தனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளில் அதிக நற்பணிகள், குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதிக நற்பணிகள் செய்வோருக்கு ஊக்கப் பரிசு வழங்கினார் நடிகர் விஜய்.
விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகின்றனர். விஜய் பிறந்த நாள், அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் மட்டுமல்லாமல், இயற்கைப் பேரிடர்களின் போதும் அவர்கள் தங்களால் ஆன பணிகளை மக்களுக்குச் செய்கின்றனர்.
இத்தகைய பணிகளை அவர்கள் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவு மக்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
நற்பணிகளில் ஈடுபட்டுள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களை தனது ஜேஎஸ் கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்தார் விஜய். அதிக நற்பணிகள் செய்த ரசிகர்களுக்கு செயின் மற்றும் மோதிரங்களைப் பரிசளித்தார்.
அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கியதோடு, நீண்டநேரம் அனைவருடனும் பேசி, அறிவுரை வழங்கினார்.
ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை முழுமையாகக் கவனிக்க வேண்டும் என்றும், அதன்பிறகே மன்ற பணிகளைக் கவனிக்க வேண்டும் என்றும் கூறிய அவர், அடுத்த ஆண்டும் ரசிகர்களுக்கு இதுபோல விருந்தும் பரிசளிப்பும் தொடரும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன், மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், செயலாளர் ரவிராஜா, பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.