'காவலன்' படத்தை எப்படியாவது இந்த மாதம் வெளியிட வேண்டும் என்று எவ்வளவோ போராடினார் விஜய். ஆனால் முயற்சிகள் வீண் போனதுதான் மிச்சம். சென்னையில் மட்டும் திரையரங்குகள் கிடைத்த நிலையில், பரவாயில்லை ரிலீஸ் பண்ணுவோம் என்று சொல்லி விட்டார்...
ஆனால் ரசிகர் மன்ற ரசிகர்கள் விடவில்லை. தலைவர் படத்துக்கு இந்த நிலைமையா? படம் லேட்டா வந்தாலும் பரவாயில்லை, ஆனால் தமிழகமெங்கும் படத்தை ரிலிஸ் பண்ண வேண்டும் என்று தங்களின் குமுறலை தெரிவித்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து பொங்கலுக்கு படம் வரும் என்று சொல்லிவிட்டார் விஜய். ஆனா எந்த பொங்கலுக்கு என்று தான் தெரியவில்லை, விஜய் நிலைமையை பார்த்தால் அடுத்தப் பொங்கலுக்கு தான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும் போல இருக்கு. இதற்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும், திரையரங்குகளின் உண்மை நிலைமை என்ன என்று பார்த்தால்...
கிறிஸ்துமசுக்கு உதயநிதி தயாரிப்பில் கமல், திரிஷா நடிக்கும் 'மன்மதன் அம்பு' வெளியாகிறது. 'மன்மதன் அம்பு' படத்திற்காகதான் விஜய்யை ஓரம் கட்டி விட்டன திரையரங்குகள். விஜய்யின் ஐந்து தோல்வி படங்களால் திரையரங்க உரிமையாளர்களுக்கு கோபம் இன்னும் நீடித்த நிலையில் இருக்கிறது என்பது இன்னொரு காரணம். தற்போது சென்சார் முடிந்துள்ள நிலையில் 'மன்மதன் அம்பு' படத்திற்கான ரிலீஸ் வேலைகளில் தீவிரமாக இருந்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். 'மன்மதன் அம்பு'வை இந்த மாதம் எப்படியாவது வெளியிட வேண்டும் என்பது இயக்குனருக்கு உதயநிதி போட்ட கட்டளை.
ஆனால் இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் மன்மதன் அம்புவிற்கு முன்பாகவே இந்த மாதம் 17 ஆம் தேதி தன் ஈசன் படத்தை தில்லாக வெளியிடுகிறார் சசிக்குமார். சசிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்து திரையிட்ட அனைத்து திரையரங்கிலும் 100 நாட்கள் வெற்றியை கண்டது சுப்ரமணியபுரம். சசிக்குமார் நடித்த நாடோடிகள், தயாரித்த பசங்க என மூன்று படங்களும் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் இல்லாத படங்களாகவே அமைந்தது. அதனால்தான் இப்போதும் 'ஈசன்' படத்துக்கு கை கொடுத்திருக்கிறது திரையரங்கங்கள்.
சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். பொங்கலுக்காவது விஜய்க்கு வழிவிடுவார்களா என்று பார்த்தால், இப்போதைக்கு அதுவும் நடக்காது என்றே சொல்லலாம். ஏனென்றால் சன் பிக்சர்சின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 'ஆடுகளம்' படத்திற்காக திரையரங்குகள் ஆல்ரெடி முடிவாகிவிட்டன. அது மட்டும் இல்லாது விரைவில் இசை வெளியீடு நடக்க இருக்கும் 'சிறுத்தை' படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. வியாபார விஷயத்தில் முதல் படம் தொடங்கி நம்பிக்கை நட்சத்திரமாகவே இருந்து வருகிறார் கார்த்தி. கார்த்தியின் கடந்த இரண்டு படங்களையும் வெளியிட்டது கிளவுட் நைன் தான். அதனால் இந்த படத்தையும் கிளவுட் நைன் வாங்க வாய்ப்பிருகிறது என்றும் சொல்லப்படுகிறது
'காவலன்' பொறுத்த வரை, வரும்... ஆனா வராது! என்ற நிலைதான். ஆக, இப்படி பல விஷயங்களால் வெயிட்டிங் லிஸ்டுக்கு தள்ளப் பட்டிருக்கிறார் விஜய்!
No comments:
Post a Comment