ஹன்சிகா மோத்வானி தமிழில் நடித்து ஒரு படம் தான் வெளியாகியுள்ளது. அதுவும் நேற்று தான் வெளிவந்தது. ஆனால் அதற்குள் அம்மணிக்கு ஏகப்பட்ட கிராக்கி.
தற்போது ஹன்சிகா விஜய்யின் வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர ஏற்கனவே ஜெயம் ரவியுடன் நடித்து முடித்த எங்கேயும் காதல் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர இருக்கிறார் ஹன்சிகா. வேலாயுதம் படத்தை முடித்த பின்னர் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க இருக்கிறார். ஏற்கனவே வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்டிருக்கும் ஹன்சிகா, இப்போது மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர இருப்பதால் குஷியில் இருக்கிறார். |











0 Comments:
Post a Comment