Friday, May 27

தொடர்கிறது நண்பன் படப்பிடிப்பு

விஜய் ஜீவா இலியானா ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏனைய படப்பிடிப்புகளில் இருந்ததால் சிறிது காலம் கழித்து ஷங்கர் நண்பன் படத்தை மீண்டும் தொடங்கினார்.விஜய் தற்பொழுது வேலாயுதம் இறுதி கட்டத்தில் நடித்து வருகிறார்.இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் கோயம்புத்தூரில் நண்பன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.வந்தான் வென்றான் ரெளத்திரம் ஆகிய படப்பிடிப்புக்களை பிரான்ஸ் சுவிஸர்லாந்தில் முடித்து கொண்டு நேற்று மாலை ஜீவா கோயம்புத்தூர்படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அடுத்த இரண்டு நாட்களுக்கு நண்பன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.இலியானாவும் இப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.ஷங்கரின் இயக்கத்தில் நண்பன் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment