இத்துப்போன கிளையா இருந்தாலும், இலந்தை பழம் ருசி என்பது போல படம் ஓடாவிட்டாலும், இப்படத்தின் நாயகியான பிரணதிதாவை பார்த்து பெருமூச்செரிந்தது திரையுலகம். மலைத் தேனையும் மைதா மாவையும் பிசைந்து செய்த மாதிரி இருக்கிறாரே என்றும், அந்த சிரிப்பை பார்த்துகிட்டே சீமெண்ணையை கூட குடிக்கலாம் என்றும் வசனம் பேசியே வளைந்து நெளிந்தது.
அதற்குள் ரிசர்வேஷன் கூப்பனோடு நின்றார்கள் சில இயக்குனர்கள். ஆனால் இவர்களில் டாப் யாரோ, அவர் வந்தால்தான் கால்ஷீட் என்று காத்திருந்தார் பிரணதிதா. அதற்கான பலனும் கிடைத்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் படத்தில் பிரணதிதாவே ஹீரோயினாக இருக்கலாம்!
No comments:
Post a Comment