ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நண்பன்’. அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி ஆகியோரின் நடிப்பில் உருவான ஹிந்திப்படம் ‘3 இடியட்ஸ்’. அங்கே இப்படம் அபார வெற்றி பெற்றதால், அதனை அப்படியே தமிழில் ‘நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் ஷங்கர்.
இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இலியானாவும் இப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு தமிழ் பேச வராது என்பதால் இவருக்கு ஒரு பிரபல நடிகையும், பின்னணிப் பாடகியுமாக இருக்கும் ஒருவர் குரல் கொடுத்திருக்கிறார்.
அவருக்கு குரல் கொடுத்தது வேறு யாருமல்ல, நடிகை ஆண்ட்ரியாதான் இலியானாவிற்கு குரல் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளதாம். இதையடுத்து போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளுக்கு ‘நண்பன்’ தயாராகி வருகிறானாம்.
No comments:
Post a Comment