நடிகர் விஜய் சரியான நேரத்தில் செய்த உதவியால் மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது. ஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார். சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார். மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். அவனைச் சோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார். மொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள். மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான் சிறுவன். காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர். இந்த சந்திப்பு மனதை உறுக்குவதாக இருந்தது. அவர்களை ஆறுதல்படுத்தி பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி வைத்தார் விஜய்.
Thursday, August 12
இளையதளபதி விஜய் செய்த உதவி-மரணத்தை வென்ற சிறுவன்..!
1:14:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)















0 Comments:
Post a Comment