சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கான 'ரவுடி ரத்தோர்' அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வருகிறது. இப்படத்தினை இயக்கி வருகிறார் பிரபுதேவா. சஞ்சய் லீலா பன்சாலி, யு.டிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
' போக்கிரி ',' வில்லு' படங்களின் மூலம் நண்பர்களாக வலம் வருகிறார்கள் விஜய்யும் பிரபுதேவாவும்.
விஜய்யை சந்தித்த பிரபுதேவா தான் இயக்கி வரும் 'ரவுடி ரத்தோர்' படத்தில் அக்ஷய் குமாருடன் ஒரு பாடலுக்கு நடனமாட முடியுமா? என்று கேட்டாராம்.
உடனே விஜய் யோசிக்காமல் "கண்டிப்பாக ஆடுகிறேன் " என்று கூறி விட்டாராம். இதனால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் பிரபுதேவா. 'துப்பாக்கி' படப்பிடிப்பிற்காக மும்பையில் விஜய் இருந்ததால், படபடவென விஜய்யை வைத்து பாடல் காட்சியை எடுத்து முடித்து விட்டார் பிரபுதேவா.
'ரவுடி ரத்தோர்' படத்திற்கு இந்தி திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் விஜய்யும் நடனமாடி இருப்பதால், விஜய் இந்தி திரையுலக ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமாக இது நல்ல சந்தர்ப்பமாக அமையும்.
ஏற்கனவே விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அக்ஷய் குமார் விருப்பம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது













0 Comments:
Post a Comment