5:58:00 AM
முகமூடி இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் தனது மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.
ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடந்தது. விழாவில் விஜய் மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இசை சிடியை விஜய் வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.
இந்த விழா நடந்த அரங்கிற்குள் விஜய் நுழைந்தது முதல் மேடையில் அமரும் வரை அவரது ரசிகர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அது ஜீவா நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு என்பதை அனைவரும் மறந்துவிட்டனர். மேடையில் பேசியவர்கள் கூட ஜீவாவை மறந்துவிட்டு விஜய் பற்றியே பேசினர். உடனே சுதாரி்த்துக் கொண்ட விஜய் பேச வந்தார்.
அப்போது அவர் கூறுகையில், என் மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன். எனக்கு ஜீவாவை ஒரு மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் பிடிக்கும். என் மகனைப் போன்று நானும் முகமூடி படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் விஜயைப் புகழ்ந்து பேசினாலும் விழா நாயகன் ஜீவா சிரித்த முகத்தோடு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
5:29:00 AM
யு.டிவி நிறுவனத்தின் முதல் நேரடி பிரம்மாண்ட தயாரிப்பு 'முகமூடி'. ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தினை மிஷ்கின் இயக்கி இருக்கிறார். கே இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய் 'முகமூடி' இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.
படத்தின் FIRST LOOKல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட TEASER மட்டுமன்றி படத்தின் புதிய டிரெய்லரும், 'நாட்டுல நம்ம வீட்டுல' பாடலை திரையிட்டார்கள்.
இசையமைப்பாளர் கே, முகமூடி படத்தின் 'வாய மூடி சும்மா இருடா', 'தீம் மியூசிக்', 'நாட்டுல நம்ம வீட்டுல' ஆகிய பாடல்களை விழா மேடையில் நேரடியாக பாடினார்கள். 'நாட்டுல நம்ம வீட்டுல' பாடலை எழுதி பாடி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
இசையை வெளியிட்டு பேசிய விஜய் " நடிகர் ஜீவாவிற்கு எனது மகன் சஞ்சய் தீவிர ரசிகன். இந்த இசை வெளியீட்டு விழாவில் அவனால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகையால் என்னுடைய வாழ்த்தை கூறும்படி சொன்னான். அனைத்து இயக்குனர்களுக்கும் ஜீவாவை பிடித்து இருக்கிறது." என்று கூறிவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
"இவ்விசை வெளியீட்டு விழாவிற்கு ஒரே ஒரு செல்போன் மெசேஜ் மூலம் வருவேன்" என்று விஜய் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் ஜீவா.
இயக்குனர் மிஷ்கின் " நான் எதோ இதுவரை எடுக்காத கதையை எடுத்து இருக்கிறேன் என்று எல்லாம் கூற மாட்டேன். பெரிய எதிர்ப்பார்ப்போடு எல்லாம் இப்படத்திற்கு வராதீர்கள். இது ஒரு சாதாரண கதை.
பிறகு படம் பார்த்துவிட்டு எதிர்ப்பார்ப்போடு போனோம். ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை என்று ப்ளாக்கில் திட்டி எழுதுகிறார்கள்.
என்னுடைய சூப்பர் ஹீரோ ஒரு ப்ளாட்பார்ம்மில் இருந்து தான் உருவாகிறான் என்பது மாதிரி தான் காட்சி வைத்து இருக்கிறேன். இதில் இருந்தே தெரிந்து இருக்கும் முகமூடி ஒரு சாதாரண கதை என்பது" என்று கூறினார்.
இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.
5:26:00 AM
தமிழ்த் திரையுலகில், கதாநாயகர்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் இருப்பது போல், இயக்குனர்கள் சிலருக்கும் ரசிகர் வட்டம் உள்ளது. அத்தகைய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் என இவரது படங்கள் அனைத்துமே இவருக்கு பல தரப்பில் இருந்து ரசிகர்களை சேர்த்து இருக்கிறது.
இவரது இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ கதை 'முகமூடி' என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.
ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர் என ஒரு திரைப் பட்டாளமே நடிக்க, 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த ' கே ' இசையமைத்து இருக்கிறார். தங்களது முதல் பிரம்மாண்ட தயாரிப்பாக 'முகமூடி' படத்தினை தயாரித்து இருக்கிறது யு.டிவி நிறுவனம்.
'முகமூடி' படத்தின் FIRST LOOK வெளியான போதே படத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஆரம்பித்தித்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 20ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. விஜய் இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்கிறார்.
மிஷ்கின் படங்கள் என்றாலே படத்தில் மஞ்சள் கலர் சேலை கட்டிக் கொண்டு, ஒரு பெண் ஆடுவது போன்று ஒரு குத்துப்பாடல் இருப்பது வழக்கம். 'கத்தாழக் கண்ணாலே', 'வாள மீனுக்கும்' போன்ற பாடல்கள் இவரது படத்தில் இடம்பிடித்து, பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
ஆனால் 'முகமூடி' படத்தில் அவ்வாறு குத்துப் பாடல் எதுவுமே இல்லையாம். அதற்கு பதிலாக TASMAC பாரில் ஒரு பாடல் இடம் பெற்று இருக்கிறதாம். அப்பாடல் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்கிறது படக்குழு. குடிமகன்களுக்கான Theme Song- ஆ?