10:08:00 AM
ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் நடிகர்களில் இவர் முதலிடம் வகிக்கிறார்.
அண்மையில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது. பிரபலங்களின் வருவாய் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு ஆகிவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தி நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். இசையமைப்பாளர்களில் முதலிடத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஒட்டுமொத்த பிரபலங்களில் 20-வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் நடிகர்களில் விஜய் 28-வது இடத்தில் உள்ளார். சூர்யா 43வது இடத்திலும், அஜித் 61வது இடத்தையும் வகிக்கின்றனர். விக்ரம் 67-ம் இடத்தில் இருக்கிறார்.
தமிழ் நடிகர்களில் முன்னிலை வகிக்கும் விஜய்யின் ஆண்டு வருமானம் 38.46 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் தேடல் ஹிட்ஸ், ரசிகர்களின் எண்ணிக்கை, பத்திரிகைகளின் வெளியான செய்திகளின் எண்ணிக்கை முதலானவற்றையும் கருத்தில்கொண்டு பிரபலங்களின் செல்வாக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.
7:11:00 PM
தான் நடிக்கும் தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்து போஸ்டர்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் கையசைக்கும் போஸ்டரைப் பார்க்கையில் ஏதோ அரசியல் படம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் தலைவா படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிய விஜய் கதை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுனில் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறுகையில், தலைவா என்ற தலைப்பு படத்தின் கதைக்கும், விஜயின் இமேஜுக்கும் மகிவும் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்துள்ளோம். மேலும் போஸ்டர்களும் அதன்படி தான் டிசைன் செய்யப்பட்டன என்றார். விஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் ஆனால் அதற்கு காலம் ஆகும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்
9:00:00 PM
விஜய் அண்ட் விஜய், தங்களது புதிய படத்திற்கு ஒரு வழியாக தலைப்பை முடிவு செய்துவிட்டார்கள். ஆம், விஜயின் அடுத்தப் படத்தின் தலைப்பு 'தலைவா'.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சந்தானம், மனோபாலா, பொண்வன்னன் ஆகியோர் நடிக்க, மும்பை நடிகை ஒருவர் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்.
சந்திரபிரகாஷ் ஜெயின், மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்காக பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியில் 'தலைவா' என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது முடிந்தவுடன் பாடல் காட்சிகளை படமாக்க ஸ்பெயின் செல்ல இருக்கிறார்கள்
8:38:00 AM
துப்பாக்கி’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் விஜய் இயக்கும் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்கு பிறகு விஜய், புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார்.
அப்படத்திற்கு ‘ஜில்லா’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இயக்குனர் நேசன் ‘ஜெயம்’ ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இருவரும் இணையும் இரண்டாவது படம் இது.
ஏற்கெனவே ‘துப்பாக்கி’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். மேலும், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க முடிவு செய்திருக்கிறார்கள்.
7:29:00 AM
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக நம்ம விஜய் ரேஞ்சுக்கு வேட்டி கட்டி, கூலிங் கிளாஸ் போட்டு, கண்ணைப் பறிக்கும் மஞ்சள் கலரில் சட்டை அணிந்து ஒரு போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். இிதில் தீபிகா தமிழ் பெண்ணாக வருகிறார். அவருக்கு தந்தையாக சத்யராஜும், அத்தையாக மனோரமாவும் நடிக்கின்றனர். ரயில் பயணத்தின்போது தீபிகாவை சந்திக்கும் ஷாருக் அவர் மீது காதல் வயப்படுகிறார். ரயிலில் தீபிகா தமிழில் பேச, அர்த்தம் புரியாமல் பதிலுக்கு ஷாருக் இந்தியில் பேச என்று ஒரே காமெடியாக இருக்கும்படி படமாக்கியுள்ளனர். தமிழ்ப் பெண்ணை காதலித்தால் நம்ம ஊர் ஆடை அணிய வேண்டும் அல்லவா. இத்தனை நாட்களாக கோட், சூட்டில் வந்த ஷாருக் இந்த படத்தில் வெள்ளை வேட்டி, மஞ்சள் கலர் சட்டை, கூலிங் கிளாஸ், கையில் பெரிய பிரேஸ்லெட், கழுத்தில் கெட்டியான சங்கிலி என்று ஒரு மார்க்கமாகத் தான் வருகிறார். அவரது போட்டோவைப் பார்த்தவுடன் ஒரு வேளை அவர் விஜயை காப்பியடித்து டிரஸ் பண்ணியிருப்பாரோ என்று தோன்றுகிறது.
9:36:00 AM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி நடித்த படம் துப்பாக்கி. 2012ம் ஆண்டில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படம். பாக்ஸ் ஆபீஸிலும் சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு அடுத்தபடியாக 100 கோடி வசூல் சாதனை செய்த படம். இந்த படம் அணைத்து அம்சத்தையும் கொண்டுள்ளது. இளையதளபதியின் ஸ்டைல், காஜலின் இளமை, ஏ.ஆர்.முருகதாஸின் திகிலூட்டும் திரைக்கதை, சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மற்றும் ஹாரிஸின் இசை அனைத்தும் இப்படம் வெற்றியாக ஓடுவதற்கு முக்கிய காரணங்கள்.
இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் மூன்று வாரங்களை தாண்டுவதே மிகவும் கடினமான காரியம், காரணம் அந்த அளவுக்கு மக்கள் ரசனையில் மாற்றாம், மேலும் புதுப்புது திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன, இதனால் போட்டி அதிகமாக உள்ளது. ஆனால் இந்த பேச்சுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் துப்பாக்கி புது வருடத்தின் முதல் நாளில் 50வது நாளை கடக்கின்றது.
மேலும், கேரளா விஜய் ரசிகர்கள் 50தாவது நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்ந்துள்ளனர்