6:29:00 AM
மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் தனது 53வது பிறந்த நாளை விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பில் கொண்டாடினார். மலையாளத்தில் கடந்த 33 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும். மஞ்ஜில் விரிஞ்ச பூக்களில் பூர்ணிமாவுடன் ஜோடியாக நடித்தவர், 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஜில்லா படத்தில் அதே பூர்ணிமாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். மோகன்லால் மலையாளியாக இருந்தாலும், அவர் குடியிருப்பது பெரும்பாலும் சென்னையில்தான். அவரது மகன் படித்ததும் சென்னையில்தான். தமிழில் இருவர், பாப்கார்ன், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நேசன் இயக்கும் ஜில்லா படப்பிடிப்பு இப்போது சாலக்குடியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மோகன்லால் தனது பிறந்த நாளை ‘கேக்' வெட்டி கொண்டாடினார். அவருக்கு பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் நேசன் உள்ளிட்ட படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்
6:31:00 AM
ஜில்லா படத்தில் விஜய் தங்கையாக போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்கிறார். விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் அவர் பெயர் சக்தி. இந்த படத்தில் இளைய தளபதிக்கு அப்பாவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். மதுரையில் எடுக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஒரு தங்கை, அதுவும் அந்த தங்கை கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாம். இந்த படத்தில் விஜய்க்கு யாரை தங்கையாக போடுவது என்று அலைந்துள்ளனர். அப்போது போராளி படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண்ணாக வந்த நிவேதா தாமஸை(17) பார்த்துள்ளனர். உடனே அவரையே விஜய்க்கு தங்கையாக்கிவிட்டனர். படத்தில் அண்ணன், தங்கை சென்டிமென்ட் தூக்கலாக இருக்குமாம். இது குறித்து நிவேதா கூறுகையில், என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அண்ணனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாசமுள்ள தங்கையாக நடிக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்
6:57:00 AM
 |
விஜய்யின் தலைவா
|
இயக்குநர் விஜய்யின் உருவாக்கத்தில் விஜய் நடித்துவரும் தலைவா படத்தை படு வேகமாக முடித்து வருகிறார்கள். காரணம்... இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளில் வெளியிடும் திட்டம்தானாம். பொதுவாக விஜய் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்றாலும், அது பிரமாண்டமாக இருக்காது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பிக்கப் ஆகும். அவரது சமீபத்திய படங்களே இதற்கு சாட்சி. நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்த ஹிட் கொடுத்திருக்கும் நிலையில், விஜய் பிறந்த நாளில் படத்தை வெளியிட்டால் பெரிய வரவேற்பும், பிரமாண்ட ஓபனிங்கும் கிடைக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரி படப்பிடிப்பை வேகப்படுத்தி முடித்துள்ளார்களாம். மும்பை, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் இதன் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது ‘டப்பிங்' மற்றும் ரி-ரீக்கார்டிங் பணிகளும் முக்கால்வாசி முடிந்துள்ளதால், ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றனர். வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அதற்கு ஒரு நாள் முன்பு வெள்ளிக்கிழமை இந்தப் படத்தை வெளியிடும் திட்டம் உள்ளதாம். முதல் நாள் விஜய் பட ரிலீஸ், அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் என டபுள் ட்ரீட் ரசிகர்களுக்கு!