3:00:00 PM
விஜய்யை இயக்க மாட்டேன் என்று சுந்தர். சி. ஒருபோதும் தெரிவித்தது இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார். விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வார். அதனால் முன்னணி இயக்குனர்கள் கூட முழு கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் விஜய்யிடம் செல்வார்கள். விஜய்யை யோஹான் அத்தியாயம் 1 படத்திற்கு கௌதம் மேனன் புக் செய்தாலும் அவர் கதையை சொல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். படமும் கைவிடப்பட்டது. இந்நிலையில் சுந்தர் சி. தனக்கு கோர்வையாக கதை சொல்ல வராது என்றும், அதனால் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எங்கேயோ, ஏதோ குழப்பம். விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர் கூறியதே இல்லை. இருவருமே கடின உழைப்பாளிகள் என்று தெரிவித்துள்ளார்
12:30:00 PM
அசினுக்குப் பிறகு முதல் முறையாக சொந்தக் குரலில் பேசிய நடிகை என்ற 'பெருமை'யைப் பெற்றுள்ளார் நடிகை அமலா பால். அமலா பாலுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும், அவர் இதுவரை நடித்த படங்களில் இரவல் குரல்தான்
ஆனால் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் மட்டும் முதல் முறையாக தன் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். இதற்காக தொடர்ந்து நான்கு நாட்கள் இயக்குநர் விஜய்யிடம் தமிழ் ட்யூஷன் கற்றுக் கொண்டாராம் அமலா. பின்னர் எதிர்ப்பார்த்ததை விட வேகமாகவே டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அசினுக்குப் பிறகு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசும் ஒரே மலையாள நடிகை என்ற பெருமை அமலா பாலுக்குக் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், "அமலாவுக்கு நல்ல குரல். உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. என் ஹீரோயின்கள் அனைவரும் சொந்தக் குரலில் தமிழ் பேச வேண்டும் என்று விரும்புவேன். அனுஷ்காதான் இதில் மிஸ்ஸாகிவிட்டார்," என்றார்.
6:07:00 AM
 |
|
தனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அரசியல் கட்சி விழா என்று யாரோ தவறான தகவல் கொடுத்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் தான் விழாவுக்கு தடை போட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. விழா ரத்தானதற்கு அரசியல் கட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு அதே உணர்வு உள்ளது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் ரசிகர்களும் என்னைப் போன்று பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள். என் பிறந்தநாளில் நான் மட்டுமின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 3,900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நினைத்தேன். இந்த விழாவை நடத்த மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இடம் கேட்டோம். அவர்களும் அளித்தார்கள். ஆனால் நான் நல்ல காரியங்கள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் கூறாதவற்றை, அறிவிக்காத செய்திகளை எல்லாம் வைத்து வதந்தியை பரப்பினார்கள். பிறந்தநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லை. என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி என்று கூறித் தான் எங்கள் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி என் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சி என்று சிலர் வதந்தியை கிளப்பிவிட்டார்கள். அதை கல்லூரி நிர்வாகம் நம்பி அனுமதி மறுத்துவிட்டது. எங்களுக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி தவறான தகவல் கொடுத்துள்ளார்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கல்லூரி நிர்வாகம் நம்பவில்லை. காவல் துறையினரும் அரசியல் விழா என்று நினைத்து தான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள் போன்று. இந்த விழாவுக்காக நிர்வாகிகள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார்கள். அது எல்லாம் அவர்களின் சொந்த பணம். விழாவில் வழங்க ஆட்டோ, கம்ப்யூட்டர், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி எல்லாம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டனர். ரசிகர்களை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் செலவு செய்த பணத்தை நான் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன். ஆனால் ஏமாற்றம் மற்றும் மனவேதனைக்கு என்னால் எப்படி மருந்து போட முடியும்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்? நடிப்பது தான் என் தொழில். ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுளும், ரசிகர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் அரசியலை பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்தார். என் விழா மட்டும் நடந்திருந்தால் 3.900 ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஏழைகளின் சிரிப்பை அழித்தவர்களுக்கு நன்றி. நான் வேறு என்ன கூற முடியுங்ணா என்றார்
6:10:00 AM
இளைய தளபதி விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார். அவர் விஜய்யுடன் முதன்முதலாக சேர்ந்து நடிக்கும் படம் இது தான். இந்நிலையில் அவர் ஜில்லா பட அனுபவம் பற்றி கூறுகையில், ஜில்லா படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியது. தற்போது சென்னையில் நடிக்கும் படப்பிடிப்பில் நானும், விஜய்யும் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கும், எனக்கும் ஏற்கனவே அறிமுகம் உள்ளது. நாங்கள் சில நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளோம். ஆனால் அதிகம் பேசியதில்லை. விஜய் என் தம்பி போல உணர்கிறேன். மனிதநேயமிக்க அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியம் அல்ல. கேரளாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்றார்
6:12:00 AM
விஜய் நடித்த தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது. விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. விஜய் ஜோடியாக அமலா பால், தந்தையாக சத்யரா் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முதலில் இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் பட வேலைகள் முடியவில்லை. எனவே அவர் பிறந்த நாளன்று ஆடியோவை மட்டும் வெளியிடுகின்றனர். சோனி நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இப்போது பட வெளியீட்டுத் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமை வேந்தர் மூவீஸ் எஸ் மதன் பெற்றுள்ளார்