Monday, July 25

ரஜினியைப் பாராட்டிய சல்மான் !

விஜய் நடித்த 'காவலன்' படத்தின் இந்தி ரீமேக்கான 'பாடிகார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அவ்விழாவில் பேசிய நாயகி கரீனா கபூர் " சல்மான் கான் ஒரு NATURAL ACTOR. அவர் என்ன செய்தாலும் மக்களிடையே பிரபலம் அடைந்து விடுகிறது. என்னை பொறுத்தவரை பாலிவுட்டின் ரஜினிகாந்த் சல்மான் கான் தான்" என்று கூறினார்.

கரீனா கபூர் தன்னை ரஜினியுடன் ஒப்பீடு செய்தது குறித்து சல்மான் கான் " ரஜினியுடன் என்னை ஒப்பிட்டு யாரும் பேச வேண்டாம். ரஜினி இடத்துக்கு யாராலும் போக முடியாது. நான் என்னுடைய இடத்தில் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். " என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment