இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, March 27

நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ’’சட்டப்படி குற்றம்’’. இப்படத்தில் சத்யராஜ், சீமான், ராதாரவி நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சத்யராஜ் தலைமையிலான மக்கள் இயக்கத்தால் (இது விஜய் ரசிகர் மன்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) கடத்தப்பட, அரிசி கடத்துகிறார்கள், சாராயம் கடத்துகிறார்கள்! இப்போது அதிகாரிகளை கடத்துகிறார்கள். எங்கே சார் போகுது நாடு” என அரசு அதிகாரிகள் ஒரு காட்சியில் பேசிக் கொள்கிறார்கள்.

கனிம வள ஊழல் தொடர்பாக கைதான ரங்கராசன் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக ஆஜராகிறார் சீமான். அப்போது நீதி தேவதையின் கண்களை மட்டும் இவர் கட்டவில்லை.

நாட்டு மக்கள் எல்லோரின் கண்களையும் கட்டி விட்டார் என்கிறார் சீமான். வழக்கு விசாரணையின் போது ரங்கராசனுக்கு, சேர் (இருக்கை) கொடுங்கள் என ஒருவர் சொல்ல, நீதிபதி அவர்களே உங்களுக்கும் ஒரு ஷேர் தந்து கூட்டு சேர்த்து விடப் போகிறார் என்று கமெண்ட் அடிக்கிறார் மற்றொருவர்.

1 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு ஒரு வருஷம் ஜெயில், 5 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு 5 வருஷம் ஜெயில். ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவனுக்கு எத்தனை ஆண்டு என கேட்க, நீதிபதியாக இருக்கும் ராதாரவி, எத்தனை சைபர் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார்.
வழக்கின் தீர்ப்பின் போது ராதாரவி, இதுவரை நீங்க எழுதிக் கொடுத்த வசனங்களை இதுவரை பேசியிருக்கிறோம்.

இப்போதாவது சுயசிந்தனையுடன் தீரப்பு எழுத விடுங்கள் என்கிறார்.

நடப்பு அரசியலையும், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளையும் நினைவூட்டும் வசனங்கள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளன.

இந்தப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகரும், நடிகர் சத்யராஜூம் கூறியுள்ளனர்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் சத்யராஜும், எஸ்.ஏ.சந்திரசேகரும் பேட்டி அளித்தபோது,, ‘’நான் இந்தப்படத்தில் நடித்ததற்காக பயப்படவில்லை. ஏன் என்றால் எனக்கு ஏதும் பிரச்சனை என்றால் புரட்சித்தலைவர் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் சத்யராஜ்.

அவர் மேலும், ‘’வள்ளல் என்று ஒருபடத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது பண கஷ்டம் வந்தது. என் நண்பர் விஜயகாந்த் இதைத்தெரிந்துகொண்டு எனக்கு பண உதவி செய்தார். அவர் பண உதவியே செய்வார். மற்ற உதவியா செய்யமாட்டார்.

அதே போல் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு அஜீத் நண்பனாக இருப்பதால் அஜீத் ரசிகர்களும் வருவார்கள்.

ஒரு பிரச்சனை என்றால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய்,அஜீத் ரசிகர்கள் வந்து களத்தில் நிற்பார்கள். அதனால் நான் யாருக்கும் பயப்படவில்லை. நீங்களும் பயப்படவேண்டாம். நம்மை அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்’’ என்று கூறினார் சத்யராஜ்.

Friday, March 25

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாய் ’பொன்னியின் செல்வன்’



ல்கி எழுதிய சோழ மன்னன் சரித்திரக்கதையான பொன்னியின் செல்வன் நாவலை கமல்ஹாசன் உட்பட பலபேர் திரைப்படமாக கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனால் இப்போது இயக்குனர் மணிரத்னம் அந்த முயற்சியில் இருந்துவருகிறார்.


தமிழ், தெலுங்கு மொழிகளில் மணிரத்னம் இப்படத்தை இயக்குகிறார். ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் தயாராகிறது என்றும் செய்திகள் வந்துள்ளன. சஸ்பென்ஸ்- திரில்லர், திருப்பங்களுடன் கூடிய இக்கதையை படமாக்க வேண்டும் என்பது மனிரத்தினத்தின் நெடுநாள் கனவாக இருந்தது. அது தற்போது நனவாகிறது.

இதில் கதாநாயகனாக விஜய், நடிக்கிறார் என்பதும் வில்லவராயன் வந்தியத் தேவன் கேரக்டரில் அவர் வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சோழமன்னன் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கிறார். அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் ஆர்யா நடிக்கிறார்.

இதில் கதாநாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பதே தற்போதை திரைவட்டாரத்தில் பரபரப்பான பேச்சு. இப்படத்துக்காக நிறைய தேதிகளை ஒதுக்கியுள்ளாராம் அனுஷ்கா. இப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றப் போகிறாராம் பிரபல இயக்குனர் வசந்த்!
கமலஹாசன் இதை படமாக்க சில வருடங்களுக்கு முன்பு முயன்றதால் அவருடன் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார் மணிரத்னம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்தின் மற்ற நட்சத்திர தேர்வுகளை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் மணிரத்னம்.
எழுத்தாளர் ஜெயமோகன் உதவியுடன் இதனை திரைக்கதையாக மாற்றியுள்ளாராம் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது

Wednesday, March 23

பொன்னியின் செல்வன்: சிங்கள புத்த பிக்குவாக சத்யராஜ்!


Sathya Rajமணிரத்னம் இயக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் இப்போது லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் சத்யராஜ். படத்தில் இவருக்கு தரப்பட்டுள்ள வேடம் புத்த பிக்கு. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில், இலங்கையில் உள்ள சிங்கள புத்த பிக்குகள் இணைந்து ராஜராஜ சோழருக்கு மணிமகுடம் சூட்ட முயற்சிப்பார்கள். அதில் வரும் முக்கியமான தலைமை பித்த பிக்கு வேடம் சத்யராஜுக்கு தரப்பட்டுள்ளதா, அல்லது சூடாமணி விகாரத்தின் தலைமை புத்த பிக்கு வேடம் தரப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே, இந்தப் படத்தின் இணை இயக்குநராக தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி மணிரத்னத்திடம் கேட்டு சேர்ந்துள்ளாராம் இயக்குநர் வசந்த்.இவர் ஏற்கெனவே பொன்னியின் செல்வன் திரைக்கதை எழுத முயற்சித்தவர் என்பதால் அவரது பங்களிப்பு படத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறாராம் மணிரத்னம்.விஜய், அனுஷ்கா, ஆர்யா, மகேஷ்பாபு நடிக்கும் ரூ 100 கோடி பட்ஜெட் படம் இது.

Monday, March 21

எதிர்பார்த்த மாதிரி இல்லை விஜய் : நடிகை இலியானா

நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை விஜய் என நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் படம் நண்பன். இந்தப் படத்தின் ஷூட்டிங் டெஹராடூனில் நடைபெற்று வருகிறது.

தமிழில் இலியானா அறிமுகமான கேடி திரைப்படம் வரவேற்பை பெறவில்லை. இதனை அடுத்து தமிழில் நடிப்பதை தவிர்த்து விட்டு தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார்.

விஜய்யின் ஜோடி, ஷங்கர் இயக்கம், 3 இடியட்ஸ் ரீமேக் என்றவுடன் நண்பன் படத்திற்கு ஓ.கே. சொல்லி இருக்கிறார். விஜய்யுடன் நடித்ததை குறித்து தனது டிவிட்டர் இணையத்தில் " விஜய்யுடன் என் முதல் காட்சியை நடித்து முடித்தேன். நான் எதிர் பார்த்த மாதிரி விஜய் இல்லை. அமைதியாக இருந்தாலும் கொஞ்சம் குறும்பானவர்" என தெரிவித்துள்ளார்.

காவலன் - வெற்றி


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijrd4vwsNTkxJAaYMsPTC-K_T1XRXabW_xWs_eKwGuWrcIIyyX-XpG3uaZISl9vFa4R7kvsWa4CRHKggAM4f2defpskkbyZFG8c0iDaHqV5z_vldeouSSW5nUbCrUHzTNfPo_9H1bB6sg/s1600/vi-18-09-2010-350.jpg
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் ஒன்லைன் தான் காவலன் கதையும்,
ஆனால் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.

தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான்.
கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன்
கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை
வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு
விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.

http://pirapalam.net/wp-content/uploads/2010/08/Kaavalkaran-On-Location-4.jpg
வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத
வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற
விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில்
அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால் முக்கிய இடத்தில்
அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம்
பொங்கல் வைக்கிறார்.

அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.
அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ் செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)

அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )

படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.

டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ்
பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய்
இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு
டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை
ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)

அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின் தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல் மறைத்து விடுகிறது.

http://www.4tamilmedia.com/ww5/images/stories/cinema/kavalan.jpg
காமெடியில், செண்ட்டிமெண்ட்டில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்

1. ராஜ் கிரண் - நம்பிக்கைக்கு உரியவன் எதிரியா இருந்தாலும் மன்னிப்பேன்.
ஆனா நம்பிக்கை துரோகி நண்பனா இருந்தாலும் மன்னிக்க மாட்டேன்.

2. பேர் வைக்கிறவன் குணம் தான் குழந்தைக்கு வரும்..

3. பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும்.

4. இனிமே டியூட்டிங்கற போர்வைல லேடீஸ் டாய்லெட் இருக்கற பக்கம் போவியா?

உங்க அனுமதி இல்லாம போகமாட்டேங்க எங்கேயும்.
.
சரி சரி போ..

எங்கே ?லேடீஸ் டாய்லெட்டுக்கா?

5. காலேஜ் புரொஃபசர் லிவிங்க்ஸ்டன் - எப்போ பாரு இவன் லேடீஸ் டாய்லெட் பக்கமே போறானே.. அப்படி அங்கே எனதான் இருக்கும்?நாமும் போய் பார்ப்போம்..

6. வடிவேல் - பார்வதி நம்பியார்னு சொல்றியே.. அது யாரு?

ஹய்யோ.. அது பார்வதி நம்பியார் இல்லை.. பிரைவேட் நெம்பர்.

7. விஜய் - நான்சென்ஸ்.. ஸ்டுப்பிட்

வடிவேல் - கூப்பிட்டீங்களா? பாஸ்?

விஜய் - இல்லை.. உன்னை திட்டுனேன்..

8. வடிவேலுவின் ஃபிகர் - பாடிகார்டு இப்போ யூனிஃபார்ம் போடல..


வடிவேல் - உனக்கு எப்படி தெரியும்?


ரூம்ல எட்டிப்பார்த்தேன்.

பாத்துட்டியா?எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் கிட்டேயே வந்து சொல்வே?


9. நல்லா வேலை செய்யறதால ஓனர் அவளை எப்பவும்பிரக்னெண்ட்டா வெச்சிருக்காரு..


என்னது?இங்கிலீஷ் தெரியலைன்னா பரவால்ல ,அதை கொலை பண்ணாதே.. பர்மணண்ட்டா வெச்சிருக்காரு.

10. எதுக்குடா அடி வாங்குனே?

நான் என்ன அமவுண்ட் குடுத்தா வாங்குனேன்?

சரி எத்தனை பேர் அடிச்சாங்க?

கவுண்ட் பண்ண எல்லாம் டைம் இல்ல.

11. டாக்டரை பார்க்கப்போறேன்.

அவர் பேர் என்ன?

அது அது.. வந்து பேர் தெரியாது.. ஆனா அவரை நான் டாக்டர் டாக்டர்னுதான் கூப்பிடுவேன்.

12. இப்போதான் முத தடவையா என் காதலியை பார்க்கப்போறேன்.

அவ அழகா இல்லைன்னா?

அழகுங்கறது கண்ணுக்குத்தானே.. மனசுக்கு இல்லையே?

13. நீதான் அவ கூட சண்டை போட்டுக்கிட்டியே.. மறுபடி அவ கூப்பிடுவான்னு எப்படி நம்பறே..?

உண்மையான காதல் இருந்தா கண்டிப்பா கூப்பிடுவா..

14. ஆசைப்பட்டு அடையறதுக்கு இது பணம் இல்ல. குணம்.பிறப்புலயே வர்றது.

15. அசின் -டெயிலி யூனிஃபார்ம் போட்டுட்டு வர்றியே ,நீ என்ன எல் கே ஜி யா?

விஜய் - ஹி ஹி


வடிவேல் - அப்போ நீ எல் கே ஜி மாதிரி பெரிய பெரிய் படிப்பெல்லாம் படிச்சிருக்கிறியா? சொல்லவே இல்ல..

16. விஜய் -அயன்பாக்ஸ்ல சூடு பட்டதுல என் பேண்ட்ல ஓட்டை விழுந்திடுச்சு,

வடிவேல் -எனக்கு ஒரு டவுட், அயன்பாக்ஸ் ஒண்ணுதான் இருக்கு, ஆனா ஓட்டை 2 இருக்கே.. எப்படி?

17. ஃபோன் அவருது.. டோன் என்னுது..

என் லவ்வர் உனக்கு எதுக்கு ஃபோன் தரனும்?

18. ஆசைப்பட்டு ஆட்டையைப்போட்டிருந்தாலும் பரவால்லை,ஓட்டையை போட்டுட்டியே பேண்ட்ல..

19. தேவை இல்லாம தேரை இழுத்து தெருவுல விட்டது நீதானா..?

20. குள்ள அமிதாப் - என் உயரத்துக்கு இந்த மலர் மாலை ஆர்ச் மாதிரி இருக்கு..பூச்செண்டு இவ்வளவு பெருசு எதுக்கு?என் சைஸுக்கு ரோசாப்பூவே அதிகம்.

21. அவன் யாரு? பாடிகாட்.


நீ யாரு? அவனுக்கு ஜோடிகாட்

22. நம்பறவங்களை அவன் சந்தேகப்பட மாட்டான்,ஏமாத்தவும் மாட்டான்.

23. வடிவேலுவின் ஆள் - நாங்க யாரும் பாடிகாட்டை முழுசாபார்த்ததில்லை.

வடிவேல் - நீ எதுக்கோசரம் அவனை அந்த கோலத்துல பாக்கனும்?

ஹய்யோ அவன் முகத்தை சொன்னேங்க..

யாரது? யாரது? பாட்டு நல்ல மெலோடி.பட்டாம்பூச்சி பாட்டில் விஜய் ஏன் எண்ணெய் வழிந்த முகத்தோடு வர்றார்னு தெரியல.

கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.

இந்தக்கதையில் ஆக்‌ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் விஜய்க்குப்பஞ்ச் டயலாக்ஸே இல்லை.குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கம் காமெடி ஃபிலிம்.

ஏ செண்ட்டர்களில் 275 நாட்கள், பி செண்ட்டர்களில்1 50 நாட்கள், சி செண்ட்டர்களில் 75 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -65

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - மிக நன்று.

Sunday, March 20

ரத்ததின் ரத்தமே! அடாத மழையில் விஜய் சபதம்



டாத மழை... நாகை காடம்பாடி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள். ஓயாத விசில் சத்தம், கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கொட்டும் மழை... மேடைக்கு இன்னும் வராத விஜய்! இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.



நேரம் சென்று கொண்டே இருக்க... மழைக்காக இனி ஒதுங்க முடியாது என தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களை காண மேடைக்கு வந்துவிட்டார் விஜய். காதைக் கிழிக்கிறது ஆரவாரங்கள். ரசிகர்களுக்கு கையசைக்கிறார் விஜய்! அடங்காத விசில் சத்தம்... ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறார் விஜய். மேடைக்கு முன்பாக விஜய்யை நோக்கி நகர்கிறார்கள் ரசிகர்கள்... உற்சாகமாகிறார் விஜய்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். இது சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது... கொட்டும் மழையில் இடி என முழங்கினார் விஜய்.

நாம் யார் என்று அவர்களுக்கு காட்ட வேண்டாமா என்று சொன்னபடியே எடுத்து விட்டார் ஒரு பாட்டு... நான் அடிச்சா தாங்க மாட்ட! நாலு மாசம் தூங்க மாட்ட! மோதிபாரு வீடு போய் சேர மாட்ட! சொல்லவா வேண்டும், விண்ணைப் பிளக்கிறது விசில் சத்தம்!

இலங்கை ராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும் என்று தொடர்ந்தது முழக்கம்.

வேலாயுதம் படத்தில் எனக்கு பிடித்தப் பாட்டு இது என்று சொன்ன விஜய், ரத்ததின் ரத்தமே... என்று ரசிகர்களை கைகாட்டி பாடத் துவங்கினார்.

ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல் அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும். இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்று பேச்சை முடித்தார் விஜய்.

விஜய் மக்கள் இயக்கம் கண்டன பொதுக்கூட்டம் படங்கள் :


நன்றி நக்கீரன்

Tuesday, March 15

என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல; போராளி - சீமான் பேச்சு





என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல; போராளி - சீமான் பேச்சு


நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.


இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

சீமான் இவ்விழாவில், ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள். அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது. அந்த தீர்ப்புதான் விஜய்.

எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும். மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும். அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம்.

தம்பி விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள். அவர் வரவேண்டும். அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.



உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார். என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார்.

மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான் அப்படி கோபம் வரும். இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள். எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள்.

என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல; தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் போராளி.

அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார். அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார்.

Monday, March 14

ஹாலிவுட்டில் விஜய்



ன்று (14.03.2011) காலை விஜய்யின் அப்பா இயக்கத்தில் உருவாகும் சட்டப்படி குற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. இதில் அப்படத்தில் நடித்த சீமான், சத்யராஜ் மற்றும் இயக்குனர் ஷங்கர், நடிகர் ஜீவா என பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். வருவார் என எல்லோரும் எதிர்பர்த்த விஜய் விழாவுக்கு வரவில்லை.


இவ்விழாவில் பேசிய கமலா திரையரங்க உரிமையாளரும் நடிகருமான சிதம்பரம், விஜய் அரசியலுக்கு வர வேண்டாம். அவர் சிறந்த நடிகர். அவர் திறமைக்கு அவர் ஹாலிவுட்டிற்கு போக வேண்டியவர் என்று சொன்னார். மாபெரும் நடிகர் திலகம் சிவாஜியே அரசியலில் சறுக்கினார் என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய சீமான், சத்யராஜ் பேச்சுகளில் பல இடங்களில் தீப்பொறி பறந்தது. இருவரும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசினார்கள். சத்யராஜ் பேசுகையில் விஜய் ஷங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் நடிக்கிறார். அவர் ஹாலிவுட்டுக்கு போக வேண்டிய வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால் விஜய்யை பல கோடி ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காவும் அவரை கொண்டாடும் தமிழகத்திற்காகவும் அவர் ஏதாவது செய்தாகவே வேண்டும். அது அவர் கடமை. சிவாஜி என்ற மூன்றெழுத்து அரசியலில் சறுக்கி இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை நாம் மறந்துவிட முடியாது. விஜய்யும் அப்படி ஒரு சக்தியாக தான் இருக்கிறார். அதனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னர்.

விஜய் அரசியலுக்கு வரலாமா? கூடாதா? -ஆடியோ விழாவில் அமர்க்களம்!

வெடிக்க செய்யும் முன்பு திரி பற்ற வைக்கும் நிகழ்ச்சியாக கருதினால் கூடSattapadi Kutramதப்பில்லை சட்டப்படி குற்றம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை! ஜெ. வருவார், விஜயகாந்த் வருவார், விஜய் இருப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி இவர்கள் யாரும் இல்லாமலே சூட்டை கிளப்பியதுதான் ஆச்சர்யம்.

சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார் எஸ்.ஏ.சி. ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநு£று கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று முடித்தார்.

நிகழ்ச்சி சீரியஸாகவே போய் கொண்டிருந்தது குஞ்சுமோன் மைக்கை பிடிக்கிறKunjumonவரைக்கும்! நாட்டு நடப்பைதான் இந்த படத்தில் சொல்லியிருக்கேன் என்று எஸ்.ஏ.சி சார் சொல்றதெல்லாம் சும்மா. இந்த கவருமென்ட்டுக்கு எதிராதான் சட்டப்படி குற்றம் படத்தை அவர் எடுத்திருக்காரு. நான் படத்தை பார்த்துட்டேன். ஃபயர் மாதிரி வந்திருக்கு. இதை பார்த்துட்டு இந்த கவர்மென்ட்டே அவரு காலை பிடிச்சி செஞ்சதெல்லாம் தப்புன்னு மன்னிப்பு கேட்குதா இல்லையா பாருங்க என்றார் பலத்த நகைப்பொலிக்கிடையில். நான் விஜய் சார் நடிச்ச படங்களையெல்லாம் டிஸ்ட்ரிபூட் பண்ணியிருக்கேன். ரெண்டு படங்களை தயாரிச்சிருக்கேன். ஒரு நாளு கூட அவருகிட்ட கால்ஷீட் கேட்டதில்லை என்று சந்தடி சாக்கில் தனது வெயிட்டிங் லிஸ்ட் நிலையையும் நினைவு படுத்தியவர், நாகப்பட்டினத்தில் அவரு கலந்துகிட்ட கண்டன கூட்டத்துக்கு கூட யாரும் கூப்பிடலை. நான்தான் வலிய போய் சப்போர்ட் பண்ணினேன். விஜய் சார் அரசியலுக்கு வரணும் என்றார் தனது மீசையை தடவிக் கொண்டே! இவரது பேச்சுக்கு ஏக களேபரமான ரெஸ்பான்ஸ் அங்கே!

நிகழ்ச்சி நடந்தது கமலா திரையரங்கத்தில். அதன் உரிமையாளர் சிதம்பரம் செட்டியாரும் எஸ்.ஏ.சியும் பதினெட்டு ஆண்டு கால நண்பர்களாம். "ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும்" என்று பெரிய சர்ச்சைக்கு விதை போட்டுவிட்டு அமர்ந்தார் சிதம்பரம் செட்டியார்.

விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது என்று கொதித்தார் சீமான். சத்யராஜ், செல்வமணி போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்த எஸ்.ஏ.சி முகத்தில் கொள்ளாத சந்தோஷம் கரை புரண்டு ஓடியது.

Saturday, March 5

அஜீத் விஜய் விக்ரம் சூர்யா படப்பிடிப்புகள் ரத்து... !

ajith-vijai-vikram-surya-03-06-11

கடந்த சில தினங்களாக திருவிழாவில் தொலைந்த குழந்தை போல தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. புலிக்கு பயந்து சிங்கத்திடம் மாட்டிக் கொண்டோமோ என்ற அச்சம் நிலவி வருகிறது திரைப்படக் கலைஞர்கள் மத்தியில். ஏன்? எதற்கு?

வேறொன்றுமில்லை, ஸ்டிரைக்! திடீரென்று பூச்சாண்டி காட்டும் விதமாக படப்பிடிப்பை தன்னிச்சையாக ரத்து செய்கிற மூடில் இருக்கிறார்கள் தொழிலாளர்கள். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய சங்கங்களின் தலைமை டம்மியாகிக் கிடக்கிறது. கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் தமிழ்சினிமா இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது என்றெல்லாம் முணுமுணுப்பு எழுந்தது. எல்லா தியேட்டர்களும் ஆதிக்க சக்திகளின் கைக்குள் இருந்ததால் சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை இருந்தது. சினிமாக்காரர்களே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பியதும் அதனால்தான். அதே நேரத்தில் சங்க தலைமைகள் உறுதியாக இருந்தன. ஒரு குறையென்றால் ஓடிப் போய் சொல்லவும், தலைமை போடுகிற கட்டளையை மீற முடியாத நிலைமையும் இருந்தன. ஆனால் இன்று?

எதுவுமே சரியில்லையோ என்று அச்சம் கொள்கிற அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. யார் சொல்வதையும் யாரும் மதிப்பது போல தெரியவில்லை. 24 சங்கங்களின் தலைமையான பெப்சி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் திமுக ஆதரவாளர் என்பதால் டம்மியாக அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறார் அந்த சீட்டில். தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.ஏ.சி பேச்சை எவரும் கேட்பதாக இல்லை.

இந்த நிலையில்தான் லைட்மேன்கள் அமைப்பு 40 சதவீத சம்பள உயர்வு கொடுத்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். இல்லையென்றால் கிளம்புகிறோம் என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். இந்த சம்பள உயர்வை வலியுறுத்தி தனித்தனி சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அவரவர் பங்குக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இயக்கிக் கொண்டிருக்கும் இந்தியா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிலிம் பாக்சையே து£க்கிக் கொண்டு ஓடிவிட்டார்களாம் தொழிலாளர்கள். சம்பள உயர்வை கொடுத்துவிட்டு பிலிமை வாங்கிக்கோ என்றார்களாம். அடித்து பிடித்துக் கொண்டு புகார் சொல்ல சங்கங்களுக்கு ஓடிவந்தால், அங்கே இவருடைய பிரச்சனையை காதில் வாங்கக் கூட ஆள் இல்லாமல் போனது.

நேற்று மட்டும் சுமார் 45 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அஜீத், விஜய், விக்ரம், சூர்யா படங்களும் இதில் அடக்கம்.

முந்தைய ஆட்சியில் ரிங் மாஸ்டர் போல எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக் கூடிய தலைமை இருந்தது. இப்போது இல்லையே என்று வேதனைப்படுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, முந்தைய ஆட்சி போல சினிமா மீதே எந்நேரமும் கண் வைத்திருக்க விரும்பவில்லை புதிய அரசு.

அதுகூட நியாயம்தான் என்றாலும், ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களித்தது சினிமாக்காரர்களும்தான்! அந்த வகையிலாவது இதில் உடனடியாக தலையிட வேண்டும் முதல்வர் ஜெயலலிதா. அப்படி தலையிட்டால்தான் பெரிய அளவில் தொழில் முடக்கம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

Related Posts Plugin for WordPress, Blogger...