இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, March 25

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாய் ’பொன்னியின் செல்வன்’



ல்கி எழுதிய சோழ மன்னன் சரித்திரக்கதையான பொன்னியின் செல்வன் நாவலை கமல்ஹாசன் உட்பட பலபேர் திரைப்படமாக கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனால் இப்போது இயக்குனர் மணிரத்னம் அந்த முயற்சியில் இருந்துவருகிறார்.


தமிழ், தெலுங்கு மொழிகளில் மணிரத்னம் இப்படத்தை இயக்குகிறார். ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் தயாராகிறது என்றும் செய்திகள் வந்துள்ளன. சஸ்பென்ஸ்- திரில்லர், திருப்பங்களுடன் கூடிய இக்கதையை படமாக்க வேண்டும் என்பது மனிரத்தினத்தின் நெடுநாள் கனவாக இருந்தது. அது தற்போது நனவாகிறது.

இதில் கதாநாயகனாக விஜய், நடிக்கிறார் என்பதும் வில்லவராயன் வந்தியத் தேவன் கேரக்டரில் அவர் வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சோழமன்னன் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கிறார். அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் ஆர்யா நடிக்கிறார்.

இதில் கதாநாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பதே தற்போதை திரைவட்டாரத்தில் பரபரப்பான பேச்சு. இப்படத்துக்காக நிறைய தேதிகளை ஒதுக்கியுள்ளாராம் அனுஷ்கா. இப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றப் போகிறாராம் பிரபல இயக்குனர் வசந்த்!
கமலஹாசன் இதை படமாக்க சில வருடங்களுக்கு முன்பு முயன்றதால் அவருடன் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார் மணிரத்னம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இப்படத்தின் மற்ற நட்சத்திர தேர்வுகளை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் மணிரத்னம்.
எழுத்தாளர் ஜெயமோகன் உதவியுடன் இதனை திரைக்கதையாக மாற்றியுள்ளாராம் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...