இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, January 15

நான் கமல்ஹாசன் கிடையாது : விஜய் ஓப்பன் பேச்சு


சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் ஆரம்பவிழா நடந்தது. விஜய், சங்கீதாவிஜய், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபனா, ஜெயம்ராஜா, எடிட்டர் மோகன், படத்தின் தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் எப்போதும் போல இந்த விழாவுக்கும் வரவில்லை. அவரது சார்பில் ஸ்ரீதர் வந்திருந்தார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு இப்படத்தின் ஆரம்ப விழா படு அமர்க்களமாக நடந்தது.


மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து ரசிகர்கள் ஜோதியை ஏந்தி பேரணி வந்தனர். பேரணியின் முடிவில் விஜய் கையில் ஜோதியை கொடுத்தனர். விஜய் அந்த ஜோதியை ஏந்தி மேடையில் தோன்றினார்.


வந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் ஒரு புது டிபன் பாக்ஸ் கொடுக்கப்பட்டது. அந்த பாக்சில் பிரியாணி இருந்தது.


மேடையில் இப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது.



என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்று நடிகர் விஜய் பேச ஆரம்பித்த போது, விசில் சத்தம் அரங்கை அதிர வைத்தது.

அவர், ‘’முதன் முறையாக என் ரசிகர்கள் முன்பு படத்தின் ஆரம்ப விழா நடக்கிறது. இது எனக்கு பெரிய சந்தோசம். இந்த ஐடியாவை கொடுத்தது புரடியூசர் சார்தான். அவர்தான் என்னிடம் இப்படி ஒரு ஐடியா கொடுத்தார்.


இதைத்தானே நான் எதிர்பாத்தேன். எனக்கு உங்களை(ரசிகர்களைப்பார்த்து) விட விஐபி வேறு யாரு இருக்காங்க. (விசில் சத்தம்)


ராஜாவுக்கு இது 5வது பிலிம். முதல் நாலு படத்துலயும் அவரது தம்பியே(ஜெயம்ரவி) நடிச்சார். முதல் முறையா அவர் வெளி ஹீரோவை வச்சு டைரக்ட் பண்ணுறார்.


என்னையும் உங்க தம்பியா நினைச்சுக்குங்னா (ஜெயம்ராஜாவைப்பார்த்து).


சச்சின் படத்திற்கு பிறகு இப்படத்தில் ஜெனிலியா மீண்டும் என்னுடன் நடிக்குறாங்க. அவுங்க ரொம்ப் கியூட். தமிழ், தெலுங்கு, இந்தின்னு மாறி மாறி போயிட்டு இருந்தவங்கள கூட்டிக்கிட்டுவந்துட்டோம்.


அந்நியன், தசாவதாரம் பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு இந்தப்படத்தையும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார் புரடியூசர். ஆனால் இந்தப்படத்தை தசாவதாரம் ரேஞ்சுக்கு பீல் பண்ணீடாதீங்க. நான் அவ்வளவு பெரிய ஹீரோ (கமல்ஹாசன்) கிடையாது. அவர் படத்திற்கு ஜாக்கிசான், அமிதாப்பச்சன் எல்லாரும் வந்திருந்தாங்க.


நான் அவ்வளவு பெரிய ஹீரோ கிடையாதுங்க’’ என்று மனம் திறந்து பேசினார் விஜய்.


-வடபழனிவாலு

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...