இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Monday, January 2

2011ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது மதன் கார்க்கி


புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமையும் என பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார்.
எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் வெற்றியடைந்ததை அடுத்து பல வெற்றிகளை தன் வசப்படுத்தியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.
அதன் பிறகு 2011ம் ஆண்டில் நண்பன், வந்தான் வென்றான், பயணம், கோ ஆகிய திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் கார்க்கி.
இது குறித்து அவர் கூறுகையில், 2011ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது.
தற்போது துப்பாக்கி திரைப்படத்திற்கு பாடல் எழுதி கொண்டிருக்கிறேன். இந்தாண்டு கே.வி.ஆனந்தின் மாற்றான், எஸ் ராஜா மௌளியின் நான் ஈ, மிஷ்கின் இயக்கும் முகமூடி ஆகிய திரைப்படங்களுக்கு பாடல் எழுத உள்ளேன்.
ஆகவே 2012 ம் ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...