இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, January 11

நண்பன்' ஒரு கலக்கல் முன்னோட்டம்


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நண்பன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஜெமினி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் இந்த 'நண்பன்'. இதுவரை கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்துவந்த விஜய் இப்படத்தில் வித்தியாசமான் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

முதன் முதலாக ஷங்கர் - விஜய் இணைந்து இருக்கிறார்கள்
முதலில் படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கப் போவதாக பேச்சு இருந்தது. இறுதியில் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2011ம் ஆண்டே இப்படம் முடிவடைந்தாலும் ' வேலாயுதம் ' படம் தாமதமானதால் 2012ல் முதல் விஜய் படமாக ' நண்பன் ' படம் வெளிவர இருக்கிறது.

இப்படம் குறித்து ஷங்கர் " 'எந்திரன்’ ஷூட்டிங்கிங் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு.

'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்.. வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!

விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும் " என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

படத்தின் முதல் TEASER வெளியான போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியது. படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது கூடுதல் பலம்.

இப்படம் குறித்து விஜய் " நான் பிறந்தது சென்னைன்னாலும் கோயம்புத்தூர் பாஷை எனக்கு நல்லா வருதுங்ணா..! ஷங்கர் ஒரு அற்புதமான மனிதர். அவரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம்! இந்த படத்துல ஸ்ரீகாந்த் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்க வெக்கறது ஜீவா அண்ணன் தான்..! எல்லாரும் டயலாக் எல்லாம் பாத்துகிட்டு சீன் எடுக்க தயாரா இருக்கும்போது, எதையாவது சொல்லி சிரிக்க வெச்சிடுவார்.. செய்யறதை செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு நடிப்புல கவனமா இருப்பார்.. எனக்கு நடிக்கும்போது சிரிப்பு வந்துடும்.. 'நண்பன்' பட ஷூட்டிங்ல ஜீவா என்னுடைய நல்ல நண்பன் ஆகிட்டார்.. இந்த படத்தின் மூலமா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.. படத்துல எல்லா பாட்டுமே நல்லா வந்திருக்கு !" என்று பேசினார்..

இசை வெளியீட்டு விழா அன்று வெளியிடப்பட்ட தியேட்டர் டிரெய்லரில் விஜய் பேசும் " " ஏ.ஆர்.ரஹ்மான் கிட்ட அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரன் ஆகணும்னு சொல்லி இருந்தாலும், சச்சின் கிட்ட அவங்கப்பா நீ பெரிய இசையமைப்பாளரா வரணும்னு சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்ற வசனம் போடப்பட்டபோது ரசிகர்கள் அதனை வெகுவாக ரசித்தனர்.

' நண்பன் ' நாளை 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் முன்பதிவு ஆரம்பமான சிறிது நேரத்தில் முக்கிய திரையரங்குகள் அனைத்திலும் முதல் 2 நாட்களுக்கான டிக்கெட் விற்பனை சில மணித்துளிகளில் முடிவுற்றது.


0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...