5:53:00 AM
ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர்.
இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டதால் விருந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
6:39:00 PM
ஷங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தில் ஜீவாவிற்கு அக்காவாக நடித்தவர் தேவி. கூத்துப்பட்டறையில் இருந்து வந்துள்ள தேவி பிரபல நாடகக் கலைஞர் ஆவார்.
'நண்பன்' பட வரவேற்பினால் உற்சாகத்தில் இருந்தவர், இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம்.
காரணம் மணிரத்னம் இயக்கி வரும் 'கடல்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'கடல்' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு நடிப்புப் பயிற்சிக்காக தேவியை ஒப்பந்தம் செய்திருந்தார் மணிரத்னம்.
இவர் நடிப்பு கற்றுக் கொடுக்கும்போது, இவரது திறமையைப் பார்த்து வியந்த மணிரத்னம் 'கடல்' படத்தில் கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிக்கச் சொல்லிவிட்டாராம். தனக்கான பாத்திரத்தில் சரியாக நடித்துக் கொடுத்தாராம் தேவி.
'கடல்' வெளியாகும் முன் பல படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
6:28:00 PM
துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.
சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் கூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..
முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.
6:27:00 PM
துப்பாக்கி படத்தின் FIRST LOOK விளம்பரத்திற்கு எந்த அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அந்த அளவிற்கு தற்போது எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
போஸ்டர்களில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா தலைமையிலான 'பசுமைத் தாயகம்' கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் செளமியா அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், " 'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
'துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், 'துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், 'துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.
எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரியிருந்தார்.
இந்த அறிக்கை விஜய் ரசிகர்களையும், துப்பாக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸையும் கோபப்படுத்தி இருக்கிறது.
இந்தியில் அனுராக் கஷ்யாப் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'GANGS OF WASSEYPUR' போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் வெளியிட்டு " இதுவும் விளம்பரம்தான், இவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்!" என்று காட்டமாக கூறியுள்ளார்
6:30:00 PM
சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக்கான 'ரவுடி ரத்தோர்' அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வருகிறது. இப்படத்தினை இயக்கி வருகிறார் பிரபுதேவா. சஞ்சய் லீலா பன்சாலி, யு.டிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
' போக்கிரி ',' வில்லு' படங்களின் மூலம் நண்பர்களாக வலம் வருகிறார்கள் விஜய்யும் பிரபுதேவாவும்.
விஜய்யை சந்தித்த பிரபுதேவா தான் இயக்கி வரும் 'ரவுடி ரத்தோர்' படத்தில் அக்ஷய் குமாருடன் ஒரு பாடலுக்கு நடனமாட முடியுமா? என்று கேட்டாராம்.
உடனே விஜய் யோசிக்காமல் "கண்டிப்பாக ஆடுகிறேன் " என்று கூறி விட்டாராம். இதனால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் பிரபுதேவா. 'துப்பாக்கி' படப்பிடிப்பிற்காக மும்பையில் விஜய் இருந்ததால், படபடவென விஜய்யை வைத்து பாடல் காட்சியை எடுத்து முடித்து விட்டார் பிரபுதேவா.
'ரவுடி ரத்தோர்' படத்திற்கு இந்தி திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் விஜய்யும் நடனமாடி இருப்பதால், விஜய் இந்தி திரையுலக ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமாக இது நல்ல சந்தர்ப்பமாக அமையும்.
ஏற்கனவே விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அக்ஷய் குமார் விருப்பம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது