7:03:00 AM
விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
தடை ஏன் என்பதற்கான காரணம் :
ரவிதேவன் தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் 2009ம் ஆண்டு 'கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு 'துப்பாக்கி' என்ற தலைப்பை பதிவு செய்தார்.
'துப்பாக்கி' படத்தலைப்புக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்த லோகோ வடிவமைப்பும், 'கள்ளத்துப்பாக்கி' படத்தலைப்பின் லோகோ வடிவமைப்பும் ஒரே மாதிரி இருந்தது.
இதையடுத்து 'கள்ளத்துப்பாக்கி' படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நியாயம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, நீதிமன்றத்துக்குப் போனது 'கள்ளத்துப்பாக்கி' படக்குழு.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு 'துப்பாக்கி' என்று தலைப்பு வைக்கக்கூடாது என தடை விதித்துள்ளார்!
9:06:00 PM
ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ட்ரைலர் காட்சி வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகிறது.
வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ட்ரைலர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் பிறந்த நாளுக்கு 10 நாட்கள் கழித்துதான் ட்ரைலர் வெளியாகும் என முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் துப்பாக்கி. கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஒரு போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
எனவே படத்தின் முன்னோட்டக் காட்சியான ட்ரைலரை விஜய் பிறந்த நாளன்று வெளியிடக் கோரி வந்தனர்.
இதுகுறித்து முருகதாஸ் தனது ட்விட்டரில், "வரும் 22-ம் தேதி பெரிய படங்களெல்லாம் வெளியாகின்றன. அன்று துப்பாக்கி ட்ரைலர் வெளியிடுவது முடியாது. 10 நாட்களில் வெளியிட்டுவிடுவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி படம் வெளியாகும் என்று தெரிகிறது!
7:13:00 PM
விஜய்க்கு இந்தப் படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் கிடையாது. ஏன்னா, படமே செம பஞ்ச்!'' - ஆம், ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடிகளின் அடுத்த வெடி... 'துப்பாக்கி’!
''விஜய் ஒரு போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்னு ஏகப்பட்ட செய்திகள் அலையடிக் குதே... எது உண்மை?''
''என்னங்க இது... க்ரோர்பதி ஷோ மாதிரி ஸ்ரெய்ட்டா பதில் கேட்கிறீங்க. இது, விஜய் ஸ்பெஷல் ஸ்டைல் ப்ளஸ் கமர்ஷியல் படம். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே மும்பைத் தமிழ்க் குடும்பங்கள். கலர்... டெரர்னு கலந்துகிடக்கும் மும்பையின் சுவாரஸ்யமான முகம்தான் கதை. ஹீரோ ஜெகதீஷின் வாழ்க்கையில நடக்கும் விஷயங்கள், அதற்கு அவர் எடுக்கும் முடிவுகள்னு படம் பரபரக்கும். இடைவேளைக்கு அப்புறம் தடதடக்கும். நாலஞ்சு வருஷமாவே 'நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு ஒவ்வொரு சந்திப்பிலும் நானும் விஜயும் பேசிப்போம். ஏதேதோ காரணங்களால், ரெண்டு பேருமே பிஸியா இருந்தோம். இப்ப திடீர்னு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாம 'துப்பாக்கி’ யதேச்சையா முடிவாச்சு. சும்மா அவுட் லைன் மட்டும்தான் சொன்னேன். ஷூட்டிங் போறதுக்கு நாலு நாள் முன்னாடிதான் ஃபுல் ஸ்க்ரிப்ட் சொன்னேன். ஆகஸ்ட் 15-ல் துப்பாக்கி வெடிக்கும்!''
''இந்தி 'கஜினி, 'துப்பாக்கி’னு கிட்டத்தட்ட மும்பைவாசியாவே ஆகிட்டீங்களே?''
''இந்தி 'கஜினி’ சமயமே மும்பையோட சந்துபொந்து எல்லாம் அத்துப்படி. வழக்கமா, 'மும்பையில் எடுத்தோம்’னு சொல்ற நிறையத் தமிழ்ப் படங்கள் அங்கே நாலஞ்சு நாள் ஷூட் பண்ணிட்டு, மீதி எல்லாத்தையும் தமிழ்நாட்ல ஷூட் பண்ணித்தான் மேட்ச் பண்ணுவாங்க. வட இந்தியக் குடும்பம் வேணும்னு சொன்னா, சௌகார்பேட்டையில இருந்து 20 பேரை அழைச்சிட்டு வந்து நிப்பாங்க. 'துப்பாக்கி’யில் அந்தத் தப்பைப் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருந்தேன். காஸ்ட்யூம், வேலைக்காரர், டிரைவர், செட் பிராப்பர்ட்டினு எல்லாமே மும்பைதான். தாஜ் ஹோட்டல் பின்னணியில் நடுக் கடல்ல நிக்கிற கப்பல்லவெச்சு 15 நாள் ஷூட் பண்ணோம். கடல்ல இருந்து பார்க்க, மும்பை ரொம்பப் புதுசா இருந்தது. மும்பைக்காரங்களே பார்க்காத மும்பையை இந்தப் படத்தில் பார்க்கலாம்.''
''அஜீத், விஜய்னு ரெண்டு பேரையும் வெச்சுப் படம் பண்ணி இருக்கீங்க. ஒரு டைரக்டரா ரெண்டு பேரையும் எப்படிப் பார்க்குறீங்க?''
''இப்பக்கூட என்னை பாலிவுட்ல பார்த்தா, 'என்னது... நீங்க டைரக்டரா?’னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க. இப்பவே இப்படின்னா, 10 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன். ஆனா, அப்பவே என்னை நம்பி 'தீனா’ வாய்ப்பு கொடுத்தவர் அஜீத். அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். அவர் மேல் எனக்கு ரொம்பப் பெரிய மரியாதை இருக்கு. ஆனா, நான் வளர்ந்து இந்திப் படம் வரைக்கும் இயக்கிய பிறகு, இப்போ ஏழாவதாப் பண்ற படம்தான் 'துப்பாக்கி’. விஜய் இப்போ என் நண்பர். அவர் யார்கிட்டயும் சினிமாவைத் தாண்டி எதுவும் பேச மாட்டார்னு சொல்வாங்க. ஆனா, அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச்டு ஆகிட்டோம். இப்பவும் அஜீத், விஜய்... ரெண்டு பேரையும் சந்திச்சுட்டுத்தான் இருக்கேன். எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டலடிச்சுக்கிறாங்க. ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் இன்னொருத்தரைப்பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையாப் பேசிப்பாங்க. ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல நட்பு இருக்கு. அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்!''
''விஜய் சுருட்டு பிடிக்கிற 'துப்பாக்கி’ போஸ்டர்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பு எதிர்ப்புத் தெரிவிச்சு இருந்தாங்களே?''
''என் படங்கள்ல வில்லன்கூட ஸ்மோக் பண்ண மாட்டார். பள்ளிக்கூடப் பெண்கள் காதலிக்க மாட்டாங்க. இதெல்லாம் எனக்கு நானே வெச்சுக்கிட்ட கட்டுப்பாடுகள். ஆனா, 'துப்பாக்கி’யில் அந்த சுருட்டு ஷாட் தவிர்க்கவே முடியலை. ஆனா, பப்ளிசிட்டிக்கு அதை அனுப்பிச்ச பிறகு எனக்கே ரொம்ப உறுத்தலா இருந்தது. அதைத் தூக்கிடலாம்னு நானே யோசிச்சுட்டு இருந்தப்ப, அந்த எதிர்ப்பு வந்தது. நாங்களே அதை நீக்கிட்டோம். யாரோட வற்புறுத்தலுக்கும் பயந்து அதை எடுக்கலை. ஆனா, இதை எல்லாம் அரசியல் ஆக்குறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. 'ஸ்மோக் பண்ணக் கூடாது’ங்கிற பொறுப்பு இங்கே எல்லாருக்குமே வரணும். ஆனா, இவ்வளவு பேசுறவங்க, போராடுறவங்க சிகரெட் கம்பெனி முன்னே நின்னு, அதை நிரந்தரமா மூடச் சொல்லிப் போரா டலாமே? 'எந்தக் கட்சி தன் ஆட்சி யில் சிகரெட்டைத் தடை பண்ணு தோ, அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சியோடதான் கூட்டணி’னு சொல்லலாமே? அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்கிறாங்க. ஆனா, ஒரு போஸ்டர் ஒட்டினா கோபப்படுறாங்க. இதுதான் இங்கே ஆச்சர்யம்!''
''விஜய் இந்தி 'ரௌடி ரத்தோர்’ படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கார். நீங்க ளும் அடுத்து இந்திப் படம்தான் இயக்கப் போறீங்க... ரெண்டு பேரும் இந்தியிலும் இணைவீங்களா?''
''அந்த அளவுக்கு இன்னும் யோசிக்கலை. இப்ப எங்க ரெண்டு பேர் கவனமும் 'துப்பாக்கி’ மேல் மட்டும்தான். மதன் கார்க்கி எழுதுன ஒரு பாட்டை விஜய் சாரே பாடிஇருக்கார். 'நான் பாடியிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லாதீங்க’னு சொன்னார். இருந்தாலும் சொல்லிட்டேன். ஆறு வருஷத்துக்குப் பிறகு பாடியிருக்கார். ஆல்பத்துல அது நிச்சயம் ஹைலைட். 'துப்பாக்கி’ ஷூட்டிங் சமயம்தான், 'சார்... பிரபுதேவா அவர் படத்துல ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார். போயிட்டு வரவா?’னு கேட்டார். 'தாராளமா! அதே மாதிரி நாளைக்கு என் இந்திப் படத்துக்குக் கூப்பிட்டாலும் வருவீங்கதானே’னு ஜாலியா கேட்டேன். 'ஓ, அப்படி ஒண்ணு இருக்கா. நீங்க கூப்பிட்டாலும் வருவேன்’னு சொல்லியிருக்கார். இதுல மேட்டர் என்னன்னா... என் அடுத்த இந்திப் படம் 'துப்பாக்கி’ ரீ-மேக். அக்ஷய் குமார் நடிக் கிறார். அதனால, விஜய் எனக்குக் கொடுத்த அந்த சாய்ஸைப் பயன்படுத்திக்க ஏகமா வாய்ப்பு இருக்கு!''
'' 'ரமணா’வுக்குப் பிறகுதான் விஜயகாந்த் தீவிர அரசியலுக்கு வந்தார். விஜய்கிட்டேயும் அரசியல் ஆர்வம் இருக்கு. அதுக்கேத்த தோட்டா 'துப்பாக்கி’யில் இருக்கா?''
''ஹீரோக்களின் அரசியல் ஆசைக்குப் படம் பண்றது என் வேலை இல்லை. என் கதைக்கு எது தேவையோ, அதை மட்டும்தான் பண்ணுவேன். ஹீரோவுக்கு அந்தப் படம் ஹிட்டாகணும், ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகணும். அவ்வளவுதான். 'ரமணா’வுக்குப் பிறகு விஜயகாந்த் சார் அரசியலுக்கு வந்ததும், அதே 'ரமணா’ தெலுங்கு ரீ-மேக் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி சார் அரசியல்ல நுழைஞ்சதும் நானே எதிர்பார்க்காம நடந்தது!''
7:21:00 PM
மலையாளத்தில் ரஜினிக்கு அடுத்து ஓரளவு வரவேற்புள்ள நடிகர் விஜய். இவரது சமீபத்திய படங்கள் சில அங்கு 50 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன. வசூலும் பரவாயில்லை!
சமீபத்தில் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கருத்தன் என்ற மலையாளப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அந்த போஸ்டர் மூலம் தெரிந்து கொண்ட மலையாள ரசிகர்கள் உற்சாகத்துடன் விஜய்க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் படத்தை மஸ்தான் முஜீப் கான் இயக்கப் போவதாகவும், எஸ்என் சாமி திரைக்கதை வசனம் எழுதப் போவதாகவும் வேறு குறிப்பிட்டிருந்தனர்.
இது உண்மைதானா என விஜய்யின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.
அவர் கூறுகையில், "மலையாளப் படத்தில் விஜய் நடிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. இப்போதைக்கு தமிழ்ப் படங்களில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். தெலுங்கு, இந்தியில் வந்த வாய்ப்புகளைக் கூட அவர் ஏற்கவில்லையே," என்றார்.
ஆனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பின் விஜய் மலையாளத்தில் ஒரு படம் நடிக்கக்கூடும் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!
9:08:00 PM
துப்பாக்கி ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் உயரத்தில் இருந்து குதித்தபோது விஜய்க்கு கால் இடறி மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும், வலியையும் பொருட்படுத்தாமல் அவர் நடித்ததாகவும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவி்த்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய்க்கு காயம் ஏற்பட்டு தற்போது அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் விஜயக்கு காயம் எப்படி ஏற்பட்டது என்று முருகதாஸ் கூறுகையில்,
துப்பாக்கி படத்திற்காக சண்டை காட்சி ஒன்றை படமாக்கினோம். அந்த காட்சிக்காக விஜய் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். அவரும் உயரத்தில் இருந்து குதித்தார். ஆனால் திடீர் என்று கால் இடறியதில் அவரது மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் குதித்தபோது மூட்டு பெல்ட் அணியவில்லை. காலில் காயம் ஏற்பட்ட போதிலும் வலியோடு அந்த காட்சியை நடித்துக் கொடுத்தார். அதன் பிறகே சிகிச்சைக்கு சென்றார் என்றார்.
விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் ஷூட்டிங்கிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. இன்னும் 4 நாட்கள் ஷூட்டிங் தான் பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4:11:00 PM
இயக்கம், தயாரிப்பு என அனைத்து மொழிகளிலும் தற்போது பிஸியாக இருக்கும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
இந்தி 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுலும் 'நீதானே என் பொன்வசந்தம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார். முதன் முறையாக இப்படத்திற்கு கௌதமுடன் கை கோர்த்து படத்துக்கு இசை கோர்க்கிறார் இளையராஜா.
தனது அடுத்த தயாரிப்பு என்ன, இயக்கம் என்ன என்பது குறித்து இணையத்தில் கெளதம் மேனன் தெரிவித்து இருப்பது :
" 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்னும் படத்தினை தயாரிக்க இருக்கிறேன். பிரேம் சாய் என்ற இயக்குனர் இயக்க இருக்கிறார். ஜெய் மற்றும் ரிச்சா தமிழிலும், நிதின் மற்றும் ரிச்சா தெலுங்கிலும் நடிக்க இருக்கிறார்கள். 'COURIER BOY KALYAN' என்று தெலுங்கில் இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
இப்படத்திற்கு கார்த்திக் இசையமைக்க இருக்கிறார். அவரது இசையை கேட்டேன் அருமையாக இருக்கிறது. ஜுன் 14ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு படப்பிடிப்பு துவங்குகிறது.
'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசை வெளியீடு ஜுலை முதல் வாரத்தில் இருக்கும். ஜுலை 1ம் தேதி கூட இருக்கலாம். படத்தின் இசை கண்டிப்பாக அனைவரையும் கவரும். படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளிவரும். 'மாற்றான்' அலையில் காணாமல் போக விருப்பமில்லை.
தயாரிப்பில் இருக்கும் 'தங்கமீன்கள்' ஒரு மென்மையான படம். விரைவில் அப்படம் வெளிவரும். யுவனின் இசை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரும். ராம் ஒரு அற்புதமான இயக்குனர்.
எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது. 'யோஹன்' - ஆக்ஷன் அதகளம்! "
4:02:00 PM
துப்பாக்கி’ பட ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் நடித்த விஜய்க்கு முட்டியில் காயம் ஏற்பட்டது. அதற்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார் என்றார் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘துப்பாக்கி’. சமீபத்தில் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார் இயக்குனர். உயரமான இடத்திலிருந்து விஜய் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. உயரத்தில் இருந்து விஜய் குதித்த வேகத்தில் அவரது கால் இடறியது. இதில் தரையில் அவர் கால்மோதி முட்டியில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. தற்போது விஜய் குடும்பத்தினருடன் லண்டன் சென்றிருக்கிறார். அங்குள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுகிறார். இதுபற்றி முருகதாஸ் கூறும்போது,‘‘சண்டை காட்சி படமாக்கிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. உயரத்தில் இருந்து குதித்தபோது கால் இடறி காயம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்தது. கால் முட்டியில் வழக்கமாக அணியும் பாதுகாப்பு கவசத்தை அவர் அணியாமல் நடித்ததுதான் இதற்கு காரணம். ஆனாலும் குறிப்பிட்ட காட்சியை வலியோடு செய்து முடித்தார். காயத்துக்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார்’’ என்றார். இன்னும் 4 நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. லண்டனில் இருந்து விஜய் திரும்பியவுடன் அதில் நடிக்கிறார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளா
6:32:00 PM
சுதீப், பாவனா, ப்ரியா மணி நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் 'விஷ்ணுவர்தனா'. இப்படத்தின் இயக்குனர் பொன். குமரன் சென்னையைச் சேர்ந்த தமிழர்.
குமரன் இப்படத்தை விஜய்க்கு போட்டு காட்டியிருக்கிறார். தனக்கேற்ற படமாக இருப்பதால், விஜய் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
'துப்பாக்கி', 'யோஹன்' .. அதனை அடுத்து இயக்குனர் விஜய்யின் படம் என தொடர்ந்து கால்ஷீட் டைரி நிரம்பி இருப்பதால், இம்மூன்று படங்களுக்குப் பிறகு இந்த ரீமேக் படத்தில் நடிப்பார் என்கிறது கோலிவுட் தகவல்.
இப்போது ப்ரியா மணி நடிப்பில் தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் தயாராகும் 'சாருலதா' என்னும் படத்தில் மும்முரமாக இருக்கிறார் பொன்.குமரன். இப்படத்தை வெளியிட்டபின் 'விஷ்ணுவர்தனா' படத்துக்கு தமிழில் விஜய்க்கு ஏற்றபடி திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்குவாராம்
6:45:00 PM
அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பில்லா 2 வரும் ஜூன் 22-ம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது.
அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அஜீத், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள படம் பில்லா 2. பில்லா படத்தின் முதல் பகுதி கதை இது.
சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரித்துள்ளது.
பில்லா 2 ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார்.
ஜூன் 22- அஜீத்தின் திரையுலக போட்டியாளரான விஜய்யின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது!