3:35:00 AM
இன்னும் அந்த எரிமலை அணையாமல்தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயின் அரசு விருந்தினராக இலங்கையில் அசின் நடந்து கொண்டவிதம் அனைவரையுமே புண்படுத்தியது. திரைப்பட கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்ற அசினை தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்கக் கூடாது என்பதில் அனைவரும் தீவிரமாக இருந்தனர்.
௦மலையாள சிவசங்கர மேனன் எப்படி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தாரோ அதேபோல் மலையாளியான சித்திக் எதிர்ப்பை மீறி அசினை காவலன் படத்தில் நடிக்க வைத்து தமிழர்களின் முகத்தில் கரி பூசினார். இதற்கு தமிழ் நடிகர்களும் உடைந்தை.
சரித்திரம் மீண்டும் திரும்புகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகச் சொல்லப்படும் படத்தில் அசின் ஹீரோயின் என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. சென்றமுறையும் பாசிச ராஜபக்சேயின் பக்தைக்கு அடைக்கலம் தந்தது விஜய் படம்தான். இப்போதும் விஜய் படத்தில் அசின் நடிப்பதாகதான் செய்தி வெளியாகியிருக்கிறது.
இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அசினை நடிக்க வைப்பது தமிழர்களின் மனதை புண்படுத்தும் என்பது அவர்கள் கருத்து.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பது இன்னும் உறுதியே செய்யப்படாத நிலையில் அசினை முன்னிறுத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது கே.வி.ஆனந்த், விஜய் இருவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
8:12:00 PM
தலைவா' படத்தில் அதிரடியான பாடல்களை உருவாக்கி வருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
விஜய்-அமலா பால் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் திரைப்படம் 'தலைவா'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். விஜய் நடிக்கும் படத்திற்கு ஜி.வி இசையமைப்பது இதுவே முதல் முறை. இவர், ஏற்கெனவே இயக்குனர் விஜய் இயக்கத்தில் கிரீடம், மதராசபட்டிணம், தெய்வத் திருமகள், தாண்டவம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
'தலைவா' ஏ.எல்.விஜய்-ஜி.வி.பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும் 5வது திரைப்படம். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 3 பாடல்களுக்கு ஜி.வி டியூன் போட்டுள்ளார். தற்போது நான்காவது பாடல் உருவாகி வருகிறது, இதனையடுத்து ஐந்தாவது பாடல் உருவாகப் போகிறதாம். இதைதவிர, படத்தில் இரண்டு தீம் பாடல்களும் இடம் பெறுகின்றன.
'தலைவா' பாடல்கள் ‘எல்லாமே சரவெடிதான்’ என ஜி.வி. பிரகாஷ்குமார் அவருடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளா
8:05:00 PM
'ஒன்பதுல குரு' திரைப்படத்தின் ஆடியோவை நடிகர் விஜய் வெளியிடுகிறார்.
வினய் ராய், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், சத்தியன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ஒன்பதுல குரு. இந்தப் படத்தை பி.டி.செல்வகுமார் இயக்குகிறார். லட்சுமி ராய், அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். யுத்தம் செய் திரைப்படத்துக்கு இசையமைத்த 'கே' இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். நான்கு இளைஞர்களின் பின்னணியில் திரைக்கதை காமெடியாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ வரும் 12ம் தேதி வெளியிடப்படுகிறது.
நடிகர் விஜய் கலந்துகொண்டு இந்த ஆடியோவை வெளியிடுகிறார். முன்னதாக நடிகர் விஜய்யை சந்தித்து இதற்கான அனுமதியை பெற்றிருக்கிறார் இயக்குனர் பி.டி.செல்வகுமார்