
இன்னும் அந்த எரிமலை அணையாமல்தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயின் அரசு விருந்தினராக இலங்கையில் அசின் நடந்து கொண்டவிதம் அனைவரையுமே புண்படுத்தியது. திரைப்பட கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி இலங்கை சென்ற அசினை தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்கக் கூடாது என்பதில் அனைவரும் தீவிரமாக இருந்தனர்.
௦மலையாள சிவசங்கர மேனன் எப்படி ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்தாரோ அதேபோல் மலையாளியான சித்திக் எதிர்ப்பை மீறி அசினை காவலன் படத்தில் நடிக்க வைத்து தமிழர்களின் முகத்தில் கரி பூசினார். இதற்கு தமிழ் நடிகர்களும் உடைந்தை.
சரித்திரம் மீண்டும் திரும்புகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகச் சொல்லப்படும் படத்தில் அசின் ஹீரோயின் என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. சென்றமுறையும் பாசிச ராஜபக்சேயின் பக்தைக்கு அடைக்கலம் தந்தது விஜய் படம்தான். இப்போதும் விஜய் படத்தில் அசின் நடிப்பதாகதான் செய்தி வெளியாகியிருக்கிறது.
இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அசினை நடிக்க வைப்பது தமிழர்களின் மனதை புண்படுத்தும் என்பது அவர்கள் கருத்து.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பது இன்னும் உறுதியே செய்யப்படாத நிலையில் அசினை முன்னிறுத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது கே.வி.ஆனந்த், விஜய் இருவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.













0 Comments:
Post a Comment