12:20:00 AM
 |
| இயக்குனர் விஜய் |
தலைவா படத்தில் ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் முதன்முறையாக நடிக்கும் படம் தலைவா. துப்பாக்கிக்கு பிறகு விஜய் நடிக்கும் இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் விஜய் தலைவா படம் பற்றியும், அதில் விஜய்யை எடுத்தது பற்றியும் மனம் திறந்துள்ளார். அவர் அப்படி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
மதராஸபட்டினத்தைப் பார்த்து இம்பிரஸ்ஸான விஜய்
மதராஸபட்டினம் படத்தைப் பார்த்த இளைய தளபதி இயக்குனர் விஜயை அழைத்து நாம ஒரு படம் பண்ணுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் திட்டமாகவே இருந்தது. இந்நிலையில் தான் இயக்குனர் விஜய் இளைய தளபதியின் டேட்ஸ் வைத்திருந்த தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை சந்தித்தார். அப்புறம் என்ன திட்டம் செயல் வடிவம் பெற்றது.
கதை கேட்ட உடனே ஓகே சொன்ன விஜய்
இயக்குனர் விஜய் கதை சொன்னவுடன் 15 நிமிடம் கழித்து விஜய் ஒரு சின்ன சிரிப்பு சிரித்து கையைக் குலுக்கியுள்ளார். அதன் பிறகு பட வேலைகள் துவங்கிவிட்டன.
ஒவ்வொரு சீனும் அதிரும்ல
தலைவா படத்தில் ஸ்டைல், ஆக்ஷன், மாஸ், சென்டிமென்ட் என்று அனைத்தும் இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும் என்றார் இயக்குனர்.
12:10:00 AM
.jpg) |
| ஜில்லா |
விஜய் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் "தலைவா" படத்தில் நடிக்கிறார். அடுத்து அவர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் "ஜில்லா" படத்தில் நடிக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னு வெளியிடப்பட்டது. ஆர்.பி.சவுத்ரி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆர்.பி.சவுத்திரி இதனை முறைப்படி அறிவித்தார்.
"ஜில்லா"வில் விஜயக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பூர்ணிமா பாக்கயராஜ் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, பிரமானந்தம், பரோட்டா சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் மகத் வில்லனாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார் நட்ராஜ் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்கிறார். என்.பாஸ்கர் வசனம் எழுதுகிறார். தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ப்ரவீன்&ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்கள். ஆர்.டி.நேசன் இயக்குகிறார். மே மாதம் படப்பிடிப்புகள் சென்னையில் துவங்குகிறது.
அறிவிப்புக்கு பிறகு விஜய் அளித்த பேட்டி: சினிமாவில் என்னை உருவாக்கிய முக்கிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ். பூவே உனக்காக, லவ் டுடே, ஷாஜஹான், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி படங்களில் நடித்தேன். எல்லா படங்களுமே ஹிட் படங்கள். சூப்பர்குட் பேனரில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
வேலாயுதம் படத்தின்போதே அதில் அசோசியேட் இயக்குனராக இருந்த நேசன் இந்தக் கதையை எனக்குச் சொல்லியிருந்தார். கதை பவர்புல்லாக இருந்ததால் விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று சொல்லியிருந்தேன். அது இப்போது சூப்பர்குட் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜில்லா என்பது ஒரு பகுதியை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் படத்தில் என்னை நண்பர்கள் அழைக்கும் செல்லப் பெயராக பயன்படுத்தப்படுகிறது. மதுரையை பேக்ட்ராப்பில் நடக்கும் கதை. செண்டிமெண்டும், ஆக்ஷனும் நிறைந்த கதை. இந்தப் படம் எனக்கு இன்னொரு "கில்லி"யாக அமையும்னு நம்புகிறேன் என்றார்.
3:34:00 AM
துப்பாக்கி 2ஆம் பாகம் இப்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அஜீத்தை வைத்து படம் இயக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று முருகதாஸ் கூறியதற்கு அஜீத் தரப்பிலிருந்து பாஸிடிவான சமிக்ஞை வரவில்லை. இதனால் தனது பார்வையை மீண்டும் விஜய் பக்கம் திருப்பியுள்ளார்.
துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் முருகதாஸ் இயக்குகிறார். அக்சய் குமார் ஹீரோ. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் விஜய்யை இயக்குகிறார். ஆனால் அது துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தலைவா படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து நேசன் இயக்கத்தில் ஜில்லா படத்தில் நடிக்க உள்ளார். அதனையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்
3:29:00 AM
விஜய் நடிக்கும் தலைவா படத்தில் வடஇந்திய நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறவர்.
ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஏற்கனவே அமலா பால் நடித்து வருகிறார். இவரைத் தவிர வேறொரு வடஇந்திய நடிகையையும் விஜய் நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியாயிருந்தன. இந்த வேடத்தை கைப்பற்ற லட்சுமிராய் முயன்றதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ராகினி என்பவரை விஜய் தேர்வு செய்திருக்கிறார்.
சத்யராஜ, சந்தானம், பொன்வண்ணன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்
3:11:00 AM
மீண்டும் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். ஆனால் இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என உறுதியாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்யப் போவதாக செய்திகள் கிளம்பின.
இதுகுறித்து இயக்குநர் முருகதாஸிடம் விசாரித்தபோது, "இருவரும் மீண்டும் இணையும் திட்டமிருக்கிறது. ஆனால் நிச்சயம் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது," என்றார்.
முருகதாஸ் இப்போது துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார்.
விஜய் தலைவா, ஜில்லா என இரு படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கைவசமுள்ள படங்களை முடித்ததும் புதிய படத்தைத் துவங்கப்போகிறார்களாம்