இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, March 10

ஜில்லா எனக்கு இன்னொரு "கில்லி"யாக அமையும்னு நம்புகிறேன்: விஜய்!

ஜில்லா


விஜய் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் "தலைவா" படத்தில் நடிக்கிறார். அடுத்து அவர் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் "ஜில்லா" படத்தில் நடிக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு இன்னு வெளியிடப்பட்டது. ஆர்.பி.சவுத்ரி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆர்.பி.சவுத்திரி இதனை முறைப்படி அறிவித்தார். 

"ஜில்லா"வில் விஜயக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பூர்ணிமா பாக்கயராஜ் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, பிரமானந்தம், பரோட்டா சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் மகத் வில்லனாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார் நட்ராஜ் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்கிறார். என்.பாஸ்கர் வசனம் எழுதுகிறார். தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ப்ரவீன்&ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்கள். ஆர்.டி.நேசன் இயக்குகிறார். மே மாதம் படப்பிடிப்புகள் சென்னையில் துவங்குகிறது.

அறிவிப்புக்கு பிறகு விஜய் அளித்த பேட்டி: சினிமாவில் என்னை உருவாக்கிய முக்கிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ். பூவே உனக்காக, லவ் டுடே, ஷாஜஹான், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி படங்களில் நடித்தேன். எல்லா படங்களுமே ஹிட் படங்கள். சூப்பர்குட் பேனரில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

வேலாயுதம் படத்தின்போதே அதில் அசோசியேட் இயக்குனராக இருந்த நேசன் இந்தக் கதையை எனக்குச் சொல்லியிருந்தார். கதை பவர்புல்லாக இருந்ததால் விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று சொல்லியிருந்தேன். அது இப்போது சூப்பர்குட் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜில்லா என்பது ஒரு பகுதியை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் படத்தில் என்னை நண்பர்கள் அழைக்கும் செல்லப் பெயராக பயன்படுத்தப்படுகிறது. மதுரையை பேக்ட்ராப்பில் நடக்கும் கதை. செண்டிமெண்டும், ஆக்ஷனும் நிறைந்த கதை. இந்தப் படம் எனக்கு இன்னொரு "கில்லி"யாக அமையும்னு நம்புகிறேன் என்றார்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...