இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, August 28

பத்து விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'துப்பாக்கி'


தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதான 'சிமா விருது' வழங்கும் விழா, செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது. 

சென்ற ஆண்டு தான் இந்த விருது அறிமுகபடுத்தப்பட்டது. இந்த வருட விழாவை ஆர்யா, ஸ்ரேயா, ராணா மற்றும் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்க இருக்கிறார்கள். 

இதில், விஜய், காஜல் அகர்வால் நடித்த 'துப்பாக்கி' படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், நகைச்சுவை நடிகர் உள்பட 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த '3', சிறந்த நடிகர், நடிகை உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

சிறந்த படம், இயக்குநர், புதுமுக ஹீரோ உள்பட 7 பிரிவுகளில் 'கும்கி' படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 'நீர்ப்பறவை' படம், சிறந்த நடிகர், இயக்குநர், பின்னணிப் பாடகர் உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

'வழக்கு எண் 18/9' படம், சிறந்த படம், இயக்குநர் உள்பட 5 பிரிவுகளிலும், 'பீட்சா' படம், 4 பிரிவுகளிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த 'சுந்தர பாண்டியன்' 5 பிரிவுகளிலும், உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' 4 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சூர்யா இரண்டு வேடங்களில் நடித்த 'மாற்றான்' 4 பிரிவுகளிலும், ஷங்கர் இயக்கிய 'நண்பன்' மற்றும் விஜய் இயக்கிய 'தாண்டவம்' ஆகிய படங்கள், சிறந்த பாடலாசிரியர் மற்றும் ஸ்டண்ட் பிரிவுகளிலும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, 'தோனி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'மெரினா', 'அட்டகத்தி' உள்ளிட்ட படங்களும் சிமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன

Monday, August 12

பெங்களூரில் சூப்பர் ஹிட் தலைவா!

தலைவா 



பெங்களூர்: தமிழகத்தில்தான் தலைவா படத்துக்கு தடை. ஆனால் பெங்களூரில் படம் பிய்த்துக் கொண்டு போகிறதாம். தமிழக ரசிகர்களும் பெருமளவில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்களாம். பெங்களூர் பாக்ஸ் ஆபீஸில் படம் ஹிட்டாகி விட்டதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல கூட்டம் வருவதால் பிற படங்களை தூக்கி விட்டு தலைவா படத்தைப் போட்டு வருகிறார்களாம் தியேட்டர் உரிமையாளர்கள். தலைவா படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர்களும் கூட வந்து பார்க்கிறார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்கள்

Sunday, August 11

சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!

சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!


விஜய் நடித்து தமிழகத்தில் மட்டும் இன்னும் வெளியாகாத தலைவா படத்தின் 3000 டிவிடிக்களை சேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் விஜய், நடிகை அமலபால், சத்யராஜ் நடித்து இயக்குநர் விஜய் இயக்கியுள்ள தலைவா படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீசாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இந்தப் படம் வெளியான இரண்டாவது நாளே டொரன்ட் உள்ளிட்ட தளங்களில் இந்தப் படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு இலவசமாகக் கிடைத்தது. இதனை டவுன்லோடு செய்து சிடியாக்கி சென்னை - புதுவை நகரங்களின் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே தலைவா புதுப்பட டிவிடிக்கள் ரகசியமாக தயாரிக்கப்படுவதாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே விஜய் ரசிகர்கள் அந்த வீடியோ சி.டி.க்கள் தயாரித்த கட்டிடம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். 3 பேர் கைது அப்போது அந்த வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தலைவா டிவிடிகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பேர்லேண்ட்ஸ் போலீசாருக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, நடிகர் விஜய் நடித்து இன்னும் வெளியாகாமல் உள்ள தலைவா படத்தை திருட்டுத்தனமாக சி.டி.க்களில் தயாரித்து கொண்டிருந்த கடையின் ஊழியர்கள் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த அருள்பிரபு (36), தர்மபுரியை சேர்ந்த முரளி (28), குமார் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சி.டி. தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் தலைவா, பட்டத்துயானை, மரியான் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட புதுப்பட சி.டி.க்கள் மற்றும் கவர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Thursday, August 1

ஆகஸ்ட் 9-ம் தேதி உலகம் முழுவதும் 'தலைவா' ரிலீஸ்!

தலைவா

விஜய் - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவா.' 'தெய்வத் திருமகள்', 'தாண்டவம்' படங்களின் இயக்குநர் விஜய் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சத்யராஜ், சந்தானம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமிடும் படம் என்று சொல்லப்படுவதாலும், பாடல்கள் ஹிட்டாகி இருப்பதாலும் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தை இந்த மாதத்தில் வெளியிட எண்ணி விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், ரிலீஸ் தேதியை மட்டும் தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று நினைத்தனர்.

படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால், 'யு' சான்றிதழ் கிடைத்தால் 30 சதவிகிதம் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், மறுதணிக்கைக்கு அனுப்பினர்.

காரணம், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்தப் படம். வரிவிலக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினாராம் தயாரிப்பாளர். சமீபத்தில் வெளியான 'மரியான்' படத்துக்கு முதலில் 'யு/ஏ' சான்றிதழ் தரப்பட்டது. அவர்கள் மறுதணிக்கைக்கு அனுப்பியதும் 'யு' சான்றிதழ் கிடைத்தது.

அவர்கள் நினைத்தது போலவே சிறிய திருத்தங்களுக்குப் பின் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே, ஆகஸ்ட் 9-ம் தேதி உலகம் முழுவதும் 'தலைவா' ரிலீஸ்!

Related Posts Plugin for WordPress, Blogger...