![]() |
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதான 'சிமா விருது' வழங்கும் விழா, செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது.
சென்ற ஆண்டு தான் இந்த விருது அறிமுகபடுத்தப்பட்டது. இந்த வருட விழாவை ஆர்யா, ஸ்ரேயா, ராணா மற்றும் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
இதில், விஜய், காஜல் அகர்வால் நடித்த 'துப்பாக்கி' படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், நகைச்சுவை நடிகர் உள்பட 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த '3', சிறந்த நடிகர், நடிகை உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த படம், இயக்குநர், புதுமுக ஹீரோ உள்பட 7 பிரிவுகளில் 'கும்கி' படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 'நீர்ப்பறவை' படம், சிறந்த நடிகர், இயக்குநர், பின்னணிப் பாடகர் உள்பட 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
'வழக்கு எண் 18/9' படம், சிறந்த படம், இயக்குநர் உள்பட 5 பிரிவுகளிலும், 'பீட்சா' படம், 4 பிரிவுகளிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த 'சுந்தர பாண்டியன்' 5 பிரிவுகளிலும், உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' 4 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சூர்யா இரண்டு வேடங்களில் நடித்த 'மாற்றான்' 4 பிரிவுகளிலும், ஷங்கர் இயக்கிய 'நண்பன்' மற்றும் விஜய் இயக்கிய 'தாண்டவம்' ஆகிய படங்கள், சிறந்த பாடலாசிரியர் மற்றும் ஸ்டண்ட் பிரிவுகளிலும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, 'தோனி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'மெரினா', 'அட்டகத்தி' உள்ளிட்ட படங்களும் சிமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன














0 Comments:
Post a Comment