இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, December 31

ஜனவரி 12 உலகம் முழுவதும் நண்பன்...!!!

அனைத்து நண்பர்களுக்கும் எனது 2012 இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...!
ஷங்கரின் முதலாவது ரீமேக் படமான நண்பன் படம் ஜனவரி 12 அமெரிக்காவில் வெளியிடப்பட உள்ளது. அந்த நாளே உலகம் முழுவதும் வெளிவர உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு ஜெமினி பிலிம்ஸ். இப்படம் 3 இடியட்ஸ் ஹிந்தி மெகா ஹிட் படத்தின் ரீமேக் ஆகும்.இப்படம் 2012ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கும் படம் ஆகும். தொடர்ந்து காவலன் வேலாயுதம் என ஹிட் படங்களை கொடுத்த விஜய் கோ வெற்றியை கொடுத்த ஜீவா சதுரங்கம் படம் மூலம் அனைவரையும் பாராட்ட வைத்த ஸ்ரீகாந்த் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகை இலியான sms புகழ் அனுயா பிரபல நடிகர் சத்தியராஜ் சிறந்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்க பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஹரிஸின் அருமையான இசையில் இப்படம் பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்பக அதாவது ஜனவரி 12 உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் அதிகளவான திரையரங்குகளை இதுவரை கைப்பற்றி உள்ளது .நல்ல கதை மற்றும் நகைசுவை மற்றும் அனைத்து விடயமும் கலந்த படமாக அமயும் ஆக மொதம் 2012ம் ஆண்டில் வரலாறு படைக்க வருகிறான் நண்பன்...!!!

Friday, December 30

பொங்கலுக்கு ரெண்டே ரெண்டு!

பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள் மட்டும் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள்:
நண்பன்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்துள்ள படம். இந்தியில் வெளியான ’3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் இது. பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இடம்பெற்றுள்ளது.
வேட்டை
ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் ஆகியோர் நடித்த படம் இது. லிங்குசாமி இயக்கியுள்ளார். அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்துள்ளார்.
தமிழகத்தில் மிகப் பெரிய விடுமுறை சீஸன் பொங்கல்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலம் விடுமுறை. தினசரி 5 காட்சிகள் வரை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கு பற்றாக்குறை மற்றும் போட்டிகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக பொங்கலுக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன

தமிழ் சினிமா 2011 - ஒரு சிறப்பு பார்வை!


தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சிறந்த வருடமாக கருதப்படுகிறது. 2011 ஆண்டு வெளியான படங்களில் எது எல்லாம் மக்களிடமும், திரைப்பட விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றன என்பது குறித்து ஒரு பார்வை :

காவலன் : 'பாடிகார்ட்' மலையாள படத்தின் தமிழ் ரீமேக். கமர்ஷியல் படங்களிலேயே விஜய்யை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சின்ன மாற்றம். நீண்ட நாட்கள்.. இல்லை.. நீண்ட மாதங்கள் கழித்து, கமர்ஷியல் மசாலாக்கள் குறைத்து, காமெடி கலந்த வேடத்தில் விஜய் நடித்த படம். பட வெளியீட்டிற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் தடைகளை தாண்டி வெளிவந்து வரவேற்பை பெற்ற படம்.


ஆடுகளம் : தனுஷின் எதார்த்தமான நடிப்பு, வெற்றிமாறனின் சிறப்பான திரைக்கதை அமைப்பு என இரண்டும் ஒரு சேர கலந்ததால் மக்களிடமும், திரைப்பட விமர்சகர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த எடிட்டர் (T.E.கிஷோர் ) என இப்படத்திற்கு மூன்று தேசியவிருதுகளைக் கொடுத்து கெளரவித்தது மத்திய அரசு.

சிறுத்தை : 'விக்ரமாக்குடு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். போலீஸ் அதிகாரி, திருடன் என முதன் முறையாக கார்த்தி இருவேடங்களில் நடித்த படம். கார்த்தியின் நடிப்பு, சந்தானத்தின் காமெடி, வேகமான திரைக்கதை அமைப்பு ஒன்றிணைந்த படம். வரவேற்பு மற்றும் வசூல் என இரண்டிலும் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்த படம்.


பயணம் : விமானத்தை கடத்தியவர்களிடம் இருந்து பயணிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொன்ன திரைக்கதை. ஒரு ஹைஜாக் படத்தில் காமெடியை சரியான இடத்தில் கலந்தது ராதாமோகனின் டச். 'ரட்சகன்' படத்திற்குப் பிறகு நாகர்ஜுனா நடித்த தமிழ் படம்.

குள்ளநரி கூட்டம் : நான்கு இளைஞர்கள் எப்படி போலீஸ் அதிகாரிகள் ஆகிறார்கள் என்ற கதையை நகைச்சுவையுடன் சொன்ன படம். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்த படம். 'வெண்ணிலா கபடிக் குழு' படத்திற்குப் பிறகு விஷ்ணுவுக்கு அமைந்த வெற்றிப்படம்.

பொன்னர் சங்கர் : கலைஞரின் வசனம், தியாகராஜன் அருமையான இயக்கத்தில் வெளிவந்தது பொன்னர் சங்கர். கிராபிக்ஸ் காட்சிகளா என்பது தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள், பிரம்மாண்டமான தயாரிப்பு என இரண்டுமே அமைந்தது இப்படத்தின் ப்ளஸ். பிரஷாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த படம்.

கோ : கே.வி.ஆனந்த இயக்கத்தில் வெளியான படம். பத்திரிக்கை புகைப்பட கலைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த படம். கே.வி.ஆனந்த, சுபா என மூவரின் திரைக்கதை அமைப்பு, கே.வி.ஆனந்தின் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் என மூன்றுமே மக்களிடம் வரவேற்பை பெற காரணமாக அமைந்தது.

வானம் : ' வேதம்' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். ஐந்து தனித்தனி கதைகள் ஒருகட்டத்தில் எல்லாம் ஒன்றாக இணைய, க்ளைமாக்ஸ் என்ற திரைக்கதை அமைப்பில் வெளிவந்த படம். ஐந்து கதைகளில் ஒரு கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தது தான் இப்படத்தின் ஹைலைட்.

அழகர்சாமியின் குதிரை : பாஸ்கர் சக்தியின் சிறுகதையை படமாக வடிவமைத்து சுசீந்திரன் இயக்கிய படம். எதார்த்தமான பாத்திர படைப்புகள், திரைக்கதை அமைப்பு என திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற படம்.

ஆரண்ய காண்டம் : ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலை சதிப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’. திரைக்கதை அமைப்பு, ஷார்ப்பான வசனங்கள் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டிய படம். வெளிவரும் முன்னே பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்தது. யுவன் சங்கர் ராஜா அமைத்த பின்னணி இசை, வினோத் ஒளிப்பதிவு என அனைத்து தரப்பினரின் உழைப்பு தான் இப்படத்தின் விருதுகளுக்கு காரணம்.

தெய்வத்திருமகள் : அஞ்சு வயசுப் பெண்ணின் அப்பாவுக்கும் அஞ்சு வயசு என்றால் என்ன ஆகும் என்பதை அழகாக காட்டிய படம். விக்ரமின் நடிப்பு, குழந்தை நட்சத்திரம் சாராவின் மழலை கொஞ்சும் நடிப்பு என தமிழக மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய படம். ஜி.வி.பிரகாஷ் இசை, இயக்குனரின் விஜய்யின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு இவ்விரண்டுமே இப்படத்திற்கு பலமாக அமைந்தது.

காஞ்சனா : தன் கனவைச் சிதைத்த வில்லன்களை லாரன்ஸின் உடலில் புகுந்து பழி தீர்க்கும் திருநங்கை ஆவி... 'காஞ்சனா’!. லாரன்ஸ் கதை, திரைக்கதை அமைப்பு, கோவை சரளா காமெடி என மக்களை ரசிக்க வைத்தப் படம். படம் பார்த்தவர்கள் ஒன்று, ஆவியைப் பார்த்துச் சிரிப்பார்கள். அல்லது திருநங்கைகளைப் பார்த்தால் மரியாதை கொடுப்பார்கள். இந்த இரண்டுமே 'காஞ்சனா’வுக்குக் கிடைத்த வெற்றிகள்!

வெங்காயம் : ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம். சமூக அக்கறையுடன் பகுத்தறிவுக் கதை சொன்ன விதத்தில் இந்த வெங்காயம்... காரம்தான்!

மங்காத்தா : கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே 'மங்காத்தா’! 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் உருவாக்கப்பட்ட 'தல’ சினிமா!. அஜீத் 50வது படம், அஜீத்தின் வில்லத்தனமான நடிப்பு, வெங்கட்பிரபு திரைக்கதை அமைப்பு, யுவனின் இசை என தமிழக மக்களிடம் வரவேற்பையும் கல்லா நிறைய காசையும் அள்ளிக் கொடுத்த படம்.

எங்கேயும் எப்போதும் : எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக்கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்! முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளாராகவும் ஆனார்.

வாகை சூட வா : மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாத 1960-கள் காலகட்டம். 'கண்டெடுத்தான்காடு’ என்கிற கிராமம். செங்கல் சூளைக் கூலிவேலைதான் அங்கு பிழைப்பு. படிப்பறிவு இல்லாக் கூட்டத்தைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார் முதலாளி. அங்கு வாத்தியாராக வரும் விமல், குழந்தைகளைக் கல்விப் பாதைக்கு இழுக்க முயற்சிக்கிறார். அது உண்டாக்கும் சலசலப்பு கிராமத்துக்கே ஒரு விடியலை உண்டாக்குகிற கதை! 'களவாணி' சற்குணம் இயக்கி இருந்தார்.

சதுரங்கம் : நேர்மையான நிருபர் ஸ்ரீகாந்த் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகளால் அமைச்சர்கள், அதிகாரிகள், தாதாக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்ரீகாந்த்தின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார். சோனியாவைக் கடத்தியது யார்? அவர் மீட்கப்பட்டாரா என்பதைப் பரபரப்பாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது 'சதுரங்கம்’. கரு.பழனியப்பன் இயக்கத்தில் படம் தயாராகி, பல மாதங்கள் கழித்தே வெளியானது இப்படம்.

வேலாயுதம் : நகரத்தில் நடக் கும் அநீதியை அழிக்க, ஒரு பாசக்காரக் கிராமத்து அண்ணன் எடுக்கும் அவதாரமே வேலாயுதம்! விஜய் நடிப்பு, ஜெயம் ராஜாவின் திரைக்கதை, விஜய் ஆண்டனி இசை, சந்தானத்தின் காமெடி, என அனைத்து கலந்து மக்களிடன் வரவேற்பை பெற்ற படம்.


ஏழாம் அறிவு : சீனத்தின் சிறப்புகளாக இன்று உலகமே கொண்டாடும் அரிய மருத்துவத்தையும் அதிரடித் தற்காப்புக் கலையையும் சீனர் களுக்குக் கற்றுக் கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற சரித்திரமே '7ஆம் அறிவு’ சொல்லும் செய்தி! ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை அமைப்பு, ரவி. கே.சந்திரனின் ஒளிப்பதிவு, சூர்யா மற்றும் JOHNNYயின் மிரட்டலான நடிப்பு என அனைத்துமே கலந்து மக்களிடம் வரவேற்பை பெற்ற படம். ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார்.


மயக்கம் என்ன : காதல், லட்சியம் இரண்டிலும் மனசு சொல்கிற திசையில் செல்லும் ஒருவன் கரை சேர்ந்தானா என்று சொல்லும் 'மயக்கம் என்ன’! செல்வராகவனின் திரைக்கதை, ராம்ஜியின் ஒளிப்பதிவு, தனுஷின் நடிப்பு, ஜி,வி.பிரகாஷின் துள்ளல் மிகுந்த பாடல்கள் என அனைத்தும் ஒருங்கே அமைந்து இளைஞர்கள் கொண்டாடிய படம்.

பாலை : வடக்கில் இருந்து வந்த கூட்டம் ஆயக்குடியைக் கைப்பற்றி, தமிழர்களைத் தாய் நிலத்தில் இருந்து துரத்துகிறது. அருகில் இருக்கும் நிலப்பரப்புக்கு முல்லைக்குடி என்று பெயர் சூட்டி, அங்கு வாழத் தொடங்கும் தமிழர்கள் பாலையின் பஞ்சத்தையும் எதிரிகளையும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை!

போராளி : பகை தீர்க்கத் துரத்தும் மனித விலங்குகளிடம் இருந்து வாழ்க்கையைக் காப்பாற்றப் போராடும் 'போராளி’!. சமுத்திரக்கனியின் திரைக்கதை, சசிக்குமார் நடிப்பு மற்றும் தயாரிப்பு, கஞ்சாகருப்பு மற்றும் சூரியின் காமெடி என மக்களிடம் வரவேற்பை பெற்ற படம்.

மெளனகுரு : போலீஸ் நினைத்தால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து, ஒரு சாதாரணனை என்ன பாடுபடுத்த முடியும் என்பதே மௌன குரு. ஒரு சாதாரணக் கதையை செம சஸ்பென்ஸ் த்ரில்லராக்கி கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சாந்தகுமார். காவல் துறையின் கறுப்பு ஆடுகளைப் பதிவு செய்த அதே பாதையில், சின்சியர் அதிகாரிகளின் சிரமத்தையும் கச்சிதமாகச் சொன்ன விதத்துக்காக சாந்தகுமாருக்கு... ஒரு புன்னகைப் பூங்கொத்து!

மும்பையில் சுடச்சுட தயாராகி வரும் ' துப்பாக்கி


விஜய் எப்போதுமே ஒரு படத்திற்காக தனது கெட்டப்பை மாற்ற மாட்டார். 'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார் விஜய்.

'துப்பாக்கி'யில் மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட தன்னாலான எல்லாவற்றையும் செய்து வருகிறாராம். 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தவர், விழா முடிந்தவுடன் விமானத்தில் மும்பைக்கு பறந்துவிட்டார்.

மும்பையில் சுடச்சுட தயாராகி வருகிறதாம் ' துப்பாக்கி . ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Thursday, December 29

நண்பனின் அஸ்க் லஸ்கா இலியானா




இலியானாவைப் பார்த்து சிரித்த விஜய், 'அஸ்க் லஸ்கா' என்று பாடியதும் இலியும் சிரித்தார். இந்த ரகளையான பாடல் இடம் பெற்ற படம் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக ஷங்கர் இயக்கியிருக்கும் 'நண்பன்'. அதென்ன 'அஸ்க் லஸ்கா?' என்று தேடிப் பார்த்தால், அதற்கு அநேகமாக இந்தியாவுக்குள் அர்த்தம் தேட முடியாது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்திருப்பதால் 'ஒமகசீயா' போல பொத்தாம் பொதுவில் எழுதப்பட்ட வார்த்தையும் கிடையாது. இதன் பொருள் சொல்லக்கூடிய ஒரே ஒருவர், பாடலை எழுதியிருக்கும் மதன் கார்க்கி மட்டுமே.
'கோ'வில் இடம்பெற்ற 'என்னமோ, ஏதோ...' பாடலில் அரிதான தமிழ் வார்த்தைகளைக் கொண்டே அசத்திய மதன் கார்க்கி, 'ஏழாம் அறிவி'ல் முதல் முதலாக தமிழ்ப் படத்தில் சீன மொழிப் பாடலை எழுதி சிலிர்க்க வைத்தார். அந்த வரிசையில் இடம்பெறத் தக்க பாடலாகிறது 'அஸ்க் லஸ்கா'
''இதுல 'அஸ்க்'ங்கிறது துருக்கிய மொழி வார்த்தை. 'லஸ்கா' ங்கிறது ஸ்லோவேக்கிய மொழி வார்த்தை. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றேதான். அது, 'காதல்'... இதே போல இந்தப் பாடல்ல பதினாறு உலக மொழிகள்ல காதலைக் குறிக்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கு..!'' என்று சிரித்த கார்க்கி தொடர்ந்தார்...

''இலியானாகிட்ட தன் காதலை விஜய் சொல்ற பாடலானதால, அதுக்கு வித்தியாசமான கான்செப்ட் யோசிச்சு இப்படி உலக மொழிகள்ல காதலைச் சொல்ல முடிவாச்சு. இதுக்காக 60 மொழிகள்ல இருந்து காதலுக்கான வார்த்தைகளை சேகரிச்சு அதுல ஹாரிஸோட இசைக்குப் பொருந்தி வர்ற ஒலிகளோடயும், எதுகை மோனைக்குப் பொருத்தமா வர்றது போலவும் இப்படி பதினாறு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். உலக மொழிகளோட தொடர்ற பாடல் அப்படியே இந்திய மொழிகளுக்கும் வந்து தமிழ்ப்பாடலா ஒலிக்கிற விதத்துல எழுதினேன். விஜய் ஒருமுறை அப்பாவை சந்திச்சப்ப இந்தப் பாடலைச் சொல்லி, 'கார்க்கி நல்லா எழுதியிருக்கார்'னு பாராட்டி யிருக்கார்..!''
மேற்படி பாடலோடு ஒரு மாணவனின் ஏமாற்ற மனநிலையைக் குறிக்கும், 'எந்தன் கண்முன்னே காணாமல் போனேனே...' என்ற பாடலையும் எழுதியிருக்கும் கார்க்கி, 'எந்திரனை'த் தொடர்ந்து இந்தப்படத்தில் ஷங்கருடன் சேர்ந்து வசனங்களையும் எழுதியிருக்கிறார்.
'ரோபோ தொழில்நுட்பம் 'எந்திரன்' வசனங்களுக்குத் தேவைப்பட்டதைப் போல இன்றைய கல்வி முறையைப் பற்றிய செய்தி சொல்ற இது எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களோட கதையா ஆனதால அப்படி மாணவர்களோடவே பழகி வர்ற பேராசிரியரான எனக்கு இதுல எழுத வாய்ப்புக் கொடுத்தார் ஷங்கர். நான் முழுப்படத்துக்கும் வசனம் எழுத, அவரும் ஒரு லேயர் எழுதி ரெண்டிலும் சிறந்ததை எடுத்துக்கிட்டோம். ஒரிஜினல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தோட செய்திகளை மாற்றாம இன்னும் சிறந்ததை ஹானஸ்டா சொல்லியிருக்கோம்..!'' என்றார் கல்லூரியில் கல்விக்கும், படங்களில் காதலுக்கும் அர்த்தம் பல சொல்லும் பேராசிரியர் மதன் கார்க்கி

Wednesday, December 28

நண்பன் இசை வெளியீடுக்கு இலியானா வராத காரணம்?




சங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிரமாண்ட படமான நண்பன் பட பாடல் வெளியீடு கோவையில் டிசம்பர் 23 ம் திகதி இடம்பெற்றது. இவ் பிரமாண்ட விழாவுக்கு பலர் கலந்து கொண்டனர் ஆனால் படத்தின் கதாநாயகி இலியான வரவில்லை.
விஜய் ஜீவா சிறிகாந்த் எஸ்.ஜே.சூர்யா சத்தியன் அனுயா மற்றும் பலர் இவ்விழா நடப்பதற்கு முதல் வந்தனர். ஆனால் விழா தொடங்கிய பின்னும் இலியான வரவில்லை. ஆனால் இலியான கட்டயாம் வருவார் என கூறப்பட்டது. அதன் பின் இலியானாவோடு தொடர்பு கொண்டபோது ஹிந்தி படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கு கொண்டதால் அவர் உடல் நலம் சரி இல்லாததால் வரவில்லை என கூறப்பட்டது.
விஜய் ஜீவா சத்தியராஜ் சிறிகாந்த் அனுஜா இலியான சத்தியன் ராகவா லோரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்க சங்கர் இயக்கத்தில் ஹரிசின் இசையில் ஜெமினி பிலிம் தயாரிப்பில் இப்படம் பொங்கல் வெளியீடாக 2012 ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளிவர உள்ளது. மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்

Tuesday, December 27

நண்பன் ஸ்பெஷல் சில தகவல்கள்


ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் ' நண்பன் '. சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள் :


* ஒரு பாடலுக்கு HARMONY பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பாட வைத்து இருக்கிறார் ஹாரிஸ்.

* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். " ஷாட் ரெடி ! " என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.

* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு சீனாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கர் ஸ்பெஷல்.

* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

* 'HEART-ல BATTERY' என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து RECORD செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.

* " ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்பது போன்ற நிறைய 'சுளீர்' வசனங்கள் இருக்கிறது 'நண்பன்' படத்தில்

விஜய் ரொம்பவே கடமை உணர்வு மிக்க நடிகர் :ஷங்கர்

Alexander Skarsgard
விஜய் ரொம்பவே கடமை உணர்வு மிக்க நடிகர் என்று நண்பன் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் டைரக்டர் ஷங்கர் பேசினார். இந்தியில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமான 3-இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியிருக்கும் படம் நண்பன். இப்படத்தின் நாயகர்களாக விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் நடிக்க, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சில தினங்களுக்கு முன்னர் கோவையில் பிரம்மாண்டமாக நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, நடிகர் பிரபு பெற்று கொண்டார்.

விழாவில் பேசிய டைரக்டர் ஷங்கர், சூட்டிங் ஒன்றிற்காக மும்பை சென்றேன். அப்போது தான் 3-இடியட்ஸ் படத்தை பார்த்தேன். படத்தை பார்த்து வெளிவந்த அடுத்த நிமிடமே இதே ரீ-மேக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன் வெளிபாடு தான் நண்பன். 3-இடியட்ஸ் படம் போலவே, நண்பன் படமும் நன்றாக வந்துள்ளது. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அதிலும் விஜய்யின் நடிப்பும், ஈடுபாடும் பிரமாதம். ரொம்ப கடமையுணர்வு மிக்க நடிராக விஜய் இருக்கிறார். எல்லோருக்‌குமே விஜய்யை பிடிக்கும். அப்படியே பிடிக்காத சிலருக்கும், இந்த நண்பன் படத்தை பார்த்தால் விஜய்யை ரொம்ப பிடிக்கும். சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போன்று கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசுகையில், ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள். சூட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம். அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன் என்றார்

Sunday, December 25

நண்பன் இசை விமர்சனம் ஒரு பார்வை

விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் நண்பன். இயக்கம் சங்கர். இசை ஹரிஸ்ஜெயராஜ். தயாரிப்பு ஜெமினி பிலிம்ஸ் .
இப்பதில் மொத்தம் ஆறு பாடல்கள்.
முதலாவது பாடல் அஸ்கு லஸ்கா
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ் சின்மயி சுவி ஆகியோர் பாடியுள்ளனர். வித்தியாசமான சொற்களை கையாண்டுள்ளார் மதன் கார்கி. பல மொழி வசனங்களை உள்ளடிக்கி தொடங்கும் இப்பாடல் விஜய் இலியானா காதலை மையப்படுத்தி அமைக்கப்படுள்ளது. வித்தியாசமான சொற்களுடன் இனிமையான மெலடி இசைக்கு ஏற்ற வரிகளை கொண்டுள்ளது. இப்பாடலில் ஹரிசின் இசையும் மிக அருமையாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இப்பாடல் காதலர்களுக்கு பெரிய பிளஸ் . ஏனையவர்களின் காதுக்கும் மனதுக்கும் இனிமைதரும் பாடலாக அமைந்துள்ளது இப்பாடலை லண்டனில் படமாக்கியுள்ளார் சங்கர்

Nanban
இரண்டாவது பாடல் :- என் பிரண்டை போல யாரு மச்சான்
இப்பாடல ஏற்கனவே பட முன்னோட்டதுடன் வெளியாகி ஹிட் அடைந்தது. இப்பாடலை கேட்க அனைவரும் காத்திருந்தனர் . அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. இப்பாடலின் இடையிடையே வித்தியாசமான இசை கருவிகளை பயன்படுத்தியுள்ளார் ஹரிஸ். கிரிஸ் மற்றும் சுசித் சுரேசன் இப்பாடலை பாடியுள்ளனர். நண்பனை பற்றிய பாடலாகவும் நண்பனை தேடும் பாடலாகவும் அமைந்துள்ளது.இப்பாடலை ஜீவா மற்றும் சிறிகாந்த் விஜயை தேடும் விதமாக படமாக்கியுள்ளார் சங்கர். பாடலை எழுதியவர் விவேகா.
முன்றாவது பாடல் :- எந்தன் கண் முன்னே
ஆலப் ராஜு இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்குரிய வரிகளை எழுதியவர் மதன் கார்கி. கோ படத்தில் என்னமோ எதோ படலை பாடியவர் ராஜு அதன் பின் ஹரிசின் இசையில் இப்பாடலை பாடியுள்ளார். ஹரிசின் ஹிட்டர் இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. நல்ல இசை மிகவும் அருமையான உணர்வை ஏற்படுத்துகிறது.
நான்காவது பாடல் :- ஆல் இஸ் வெல்
ஹேமசந்திரன் மற்றும் முகேஷ் பாடியுள்ளனர். ந.முத்துக்குமார் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். த்ரி இடியட்ஸ் ஹிந்தி படத்தில் வெற்றி பெற்ற ஆல் இஸ் வெல் வரிகளை பயன்படுத்தியுள்ளார் முத்துக்குமார். இப்பாடலில் இளம் சந்ததியின் துடிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைத்துள்ளார் ஹரிஸ்.
Nanban
ஐந்தாவது பாடல் :- இருக்கான
பா.விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். விஜய் பிரகாஸ் ஜாவேத் அலி சுனிதி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இப்படத்தின் குத்துப்பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்கு அழகான செட் போட்டு படமாக்கியுள்ளார் சங்கர். இப்பாடல் ஹரிசின் மைகள் என்று சொல்லும் அளவுக்கு அருமையாக வந்துள்ளது.

.ஆறாவது பாடல் :- நல்ல நண்பன்
நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு ராமகிரிச்ணன் மூர்த்தி இப்பாடலை பாடியுள்ளார். நண்பர்களுக்கு பிடிக்கும் வகையில் நட்பின் பெருமையை கூறும் பாடல்களாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ஆறு பாடல்களையும் வித்தியாசமாக அமைத்து மிகவும் இனிமையான இசையை வழங்கியுள்ளார் ஹரிஸ். நண்பன் பாடல்கள் அனைவரது இதயத்தையும் கவரும் பாடல்களாக வந்துள்ளது

ஹசாரேவை சந்திக்காதது ஏன்? : விஜய்


ஊழல் எதிரான லோக்பால் மாசோதாவை தாக்கல் செய்யக் கோரி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக டெல்லி நேரில் சென்று அன்னாவிற்கு தன் ஆதரவை தெரிவித்தார் இளைய தளபதி விஜய். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அன்னா ஹசாரேவை விஜய் சநத்திக்கவில்லை. அர்ஜூன் மட்டுமே அன்னாவை நேரில் சந்தித்தார். இந்நிலையில் 'துப்பாக்கி' பட ஷூட்டிங்கில் தான் பிசியாக இருந்ததால், என்னால் அன்னாவை பார்க்க முடியவில்லை என்று விஜய் கூறியுள்ளார். அன்றைய தினம் தான் மும்பையில் இருந்ததாகவும், அதனால் தன் அப்பா சந்திரசேகரை அனுப்பி வைத்து தன் ஆதரவை தெரிவித்ததாக விஜய் கூறினார்

நண்பன்! எலோருக்கும் பிடிக்கும் - ஷங்கர்

Nanban

நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் கோவையில் வெளியிடப்பட்டன. நண்பன் ஆடியோ சி.டி.யை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட அதை நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:-
இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. நடிகர் சத்யராஜ் புதுமையான வேடத்தில் இப்படத்தில் தோன்றுகிறார். தான் ஒரு இயக்குனர் என்ற போதும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் சத்யன் ஒவ்வொரு காலகட்டத்தில் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள்.
ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம். அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன்.
இவ்வாறு விஜய் கூறினார்.
இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:-
எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.
நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.
சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.
சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள்.
இவ்வாறு ஷங்கர் கூறினார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசியதாவது:-
எனது மாணவர் உலகம் போற்றக்கூடிய இயக்குனராக வளர்ந்திருப்பது மிகவும் பெருமைப்படக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற பயம் இயக்குனர் ஷங்கரிடம் இருக்கும். அதுவே அவரது வெற்றியின் அடிப்படையாக உள்ளது.
நண்பன் திரைப்படத்தை ஷங்கர் தயாரிக்க விரும்பினார். ஆனால் அதற்கான உரிமையை ஜெர்மினி சர்க்யூட் நிறுவனம் முன் கூட்டியே பெற்றுவிட்டது. இருப்பினும் அவர் விரும்பியபடியே இப்படத்துக்கு இயக்குனராகிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, நடிகை அனுயா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்

Saturday, December 24

கோவையில் நண்பன் இசை வெளியீட்டு விழா


கோவையில் நண்பன் இசை வெளியீட்டு விழா பெல்லி டான்சுடன் கோலாகலமாக துவங்கியது. விஜய், எஸ்.ஏ. சந்திரசேகர், சத்யராஜ், பிரபு, சங்கர், ஜீவா,நா.முத்துகுமார், யுகபாரதி, சின்மயி, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார்.

"படத்துல விஜய் கலக்கியிருக்காரு.. ஜீவா பின்னியிருக்காரு.. சத்யராஜ் சார் பின்னி எடுத்திருக்காரு.." என்று சக நடிகர்களை ஸ்ரீகாந்த் பாராட்டினார்

நடிகர் ஜீவா விஜய் பற்றி குறிப்பிடும் போது "இவ்ளோ வெற்றிக்கப்பறமும் ரொம்ப சிம்பிளான நபர் விஜய். அவர்கிட்டேந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்" என்று கூறினார்.

விஜய் மேடையேறும் போது கரகோசங்களுடன், பட்டாசு வெடியின் ஓசையிம் சேர்ந்து கொண்டது.

"நான் பிறந்தது சென்னைன்னாலும் கோயம்புத்தூர் பாஷை எனக்கு நல்லா வருது. ண்ணா..!" என்று ஆரம்பித்த விஜய், ஷங்கர் ஒரு அற்புதமான மனிதர். அவரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம்!, ஸ்ரீகாந்த் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்க வெக்கறது ஜீவா அண்ணன் தான்!, ஜீவா என்னுடைய நல்ல நண்பன் ஆகிட்டார் ! இந்த படத்தின் மூலமா நல்ல நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் ! படத்துல எல்லா பாட்டுமே நல்லா வந்திருக்கு ! என்று கூறி " ஏதோ உன்னாலே.. " பாடலைப் பாடி முடிக்க, கைத்தட்டல் காதை பிளந்தது.

விஜய் பேசி முடித்ததும், விஜய்க்கு ஆளுயரய மாலையும் கிரீடமும் அணிவித்தார்கள்.

சங்கர் பேசும் போது "எந்திரன் ஷுட்டிங்ல ஒரு காரணத்தால் ஒரு நாள் தாமதம் ஆக, நான் 3 இடியட்ஸ் படம் பார்க்கப் போனேன். அப்படி உருவானது தான் நண்பன், ரஜினிக்கு அப்பறம் கரெக்ட் டயத்துக்கு ஷுட்டிங்குக்கு வருவது விஜய் தான் !, விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும் ! என்று கூறினார்.



நண்பன் இசை வெளியீட்டு விழா - Nanban Audio Launch- Sankar- Vijay- Jiiva- Srikanth- Harris Jayaraj - நண்பன் இசை வெளியீடு- சங்கர்- விஜய்- ஜீவா- ஸ்ரீகாந்த் | ACCESS - KOLLYWOOD |

Friday, December 23

நண்பன் ' 3 இசை - இன்று லைவ் அப்டேட்ஸ் !

இன்று (டிசம்பர் 23) தமிழ் திரையுலக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இரண்டு படங்களின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'நண்பன்'. இந்தியில் வரவேற்பை பெற்ற' 3 இடியட்ஸ் ' படத்தின் தமிழ் ரீமேக் 'நண்பன்'.

இப்படத்தின் இசை வெளியீட்டிற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் 'HARRIS ON THE EDGE ' விழாவின் தொடக்கத்தில் இப்படத்தின் இசையை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்


உலகம் முழுவது இளைஞர்களைக் கவர்ந்த பாடல் ' WHY THIS KOLAVERI DI '. தனுஷ் எழுதி பாடிய இப்பாடலுக்கு புதுமுகம் அனிருத் இசையமைத்து இருந்தார். '3' படத்தில் இருந்து இந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே வெளியாகி இருக்கிறது.


இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு எந்த ஒரு திரையுலக பிரமுகரையும் அழைக்காமல், முழுவதுமே கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இந்த இசை வெளியீட்டு விழாவை சன்.டிவி நிறுவனம் பெரும் தொகை கொடுத்து ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி இருக்கிறது.


இந்த இரண்டு இசை வெளியீட்டு விழாக்களின் LIVE அப்டேட்ஸ் இன்று மாலை அரங்கில் இருந்தபடியே சினிமா விகடன் டிவிட்டர் (https://twitter.com/#!/CinemaVikatan) மற்றும் சினிமா விகடன் ஃபேஸ்புக் (www.facebook.com/Cinemavikatan) ஆகிய இணையங்களில் உங்களுக்காக வழங்க

நன்றி விகடன்....




Monday, December 19

'நண்பன்' இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில்



தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு இடையே பொங்கல் 2012 அன்று வெளியாக இருக்கும் படம் 'நண்பன்'. விஜய் நடிப்பு, ஷங்கர் இயக்கம், இந்தியில் வெளிவந்து வரவேற்பை பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் என அனைத்தும் சேர்ந்து படட்திற்கு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது வருகிற 23ம் தேதி 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது

Friday, December 16

விஜய் நடிக்கும் படத்திற்கு தீம் சாங் தயார் ஏ.ஆர்.ரகுமான்


முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்திற்கு ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ என பெயரிட்டுள்ளனர். இது ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காம்பினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் தயாரிக்கிறது.
தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தயாரிக்க உள்ளனர். இதனையடுத்து, கௌதம் மேனன், தற்போது தயாரித்து இயக்கி வரும் ‘நீ தானே என் பொன்வசந்தம’ படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம் ரகுமான்.
ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு, தான் இசை அமைப்பதாக கூறியதோடு, படத்திற்கு தீம் சாங் ஒன்றை காம்போஸிங் செய்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரகுமான்

நண்பனில் இரண்டு படல்கள் பாட இருக்கிறோம் ஹாரிஸ்

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு இடையே பொங்கல் 2012 அன்று வெளியாக இருக்கும் படம் 'நண்பன்'. விஜய் நடிப்பு, ஷங்கர் இயக்கம், இந்தியில் வெளிவந்து வரவேற்பை பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் என அனைத்தும் சேர்ந்து படட்திற்கு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் நிலவி வந்தன. இந்நிலையில் 23ம் தேதி 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து 'நண்பன்' படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது டிவிட்டர் இணையத்தில் " கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் 23ம் தேதி நடைபெற இருக்கும் ' HARRIS ON THE EDGE ' நிகழ்ச்சியில் விஜய் நடிக்கும் 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்.

அப்போது 'நண்பன்' படத்தில் இருந்து 2 பாடல்களை பாட இருக்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்

Thursday, December 15

எனக்கு பிடித்த தமிழில் நடிகர்கள் அபிசேக் பேட்டி

இளைய தளபதி விஜய்,சீயான் விக்ரம், சூர்யா மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என அபிஷேக் பச்சான் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு முக்கியமானது. அதும் சமீப காலத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் தெளிவான திரைக்கதையில் வெளியாகிறது என்று கூறிய அபிஷேக், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் சிம்புவின் படங்களை விரும்பி பார்த்த வருவதாகவும் அபிஷேக் கூறினார்.
இவர்களின் நடிப்பும், ஆக்ஷனும் தன்னை வெகுவாக கவர்ந்து உள்ளதாக அபிஷேக் கூறினார். மேலும் நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும், சரியான கதை அமைந்தால் நடிப்பேன் என்று அபிஷக் கூறியுள்ளார்

Wednesday, December 14

50 வது வெற்றி நாளை கொண்டாடுகிறது வேலாயுதம்..!

விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த திரைப்படம் வேலாயுதம் . இப்படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. விஜய் ஜெயம் ராஜா கூட்டனியில் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் பிரமாண்டமாக தயாரித்தார். இதன் பட்ஜெட் 45 கோடி . ஆனாலும் இப்படம் 90 கோடி வரை வசூலிதுள்ளது . இப்படத்துக்கு அணைத்து தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனம் கிடைத்தது.
விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்யா மோகன் சந்தானம் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்தனர். இசை விஜய் அன்டனி. சண்டைபயிற்சி மிலன். வசனம் சுபா. ஒளிபதிவு பிரியன். படத்தொகுப்பு வி.ரி.விஜயன்.
இப்படம் இன்றுடன் தனது 50 வது வெற்றி நாளை கொண்டாடுகிறது. இப்படம் அதிக திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டிருகிறது. இப்படம் 100 வது நாளை கொண்டாட எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Tuesday, December 13

உருதி செய்யப்பட்டது நண்பன் இசை வெளியீடு


இன்று கிரிக்கெட் விளையாட்டு சேப்பாக்கம் ஸ்ரேடியமில் நடைபெற்றது. அங்கு திடீரென விஜயின் நண்பன் பட முன்னோட்டம் ஒளிபரப்பபட்டது.
அந்த முன்னோட்டத்தின் இறுதியில் டபுள் டமாக்கா என வெளிப்படுத்தி விஜயின் நண்பன் பட பாடல் வெளியீடும் ஹரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியும் டிசம்பர் மாதம் 23 ம் தேதி கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் என விளம்பரப்படுத்தப்பட்டது.
விஜயின் நண்பன் பட இசையை எதிர்பார்த்த ரசிகர்கள் 23 ம் தேதி முதல் நண்பன் பாடல்களையும் கீட்க முடியும். கோயம்புத்தூர் விழாவில் பங்கு பற்றுபவர்களுக்கு மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சியாக அமையும். இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கு பற்ற உள்ளனர் என்ற விடயங்களை மிகவில் அறியத்தருவோம் எங்களுடன் இணைந்திருங்கள் . கிறிஸ்மஸ் வெளியீடாக நண்பன் பாடல்கள் விஜய் ரசிகர்களை மட்டும் அல்ல ஏனைய ரசிகர்களையும் கவரும் என நம்பலாம்

யோஹன்' சர்வதேச திரைபடம்!: கெளதம் மேனன்


விஜய் - கெளதம் மேனன் இணைய இருக்கும் படம் 'யோஹன்'. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. படத்தின் போஸ்டர்கள் வெளியான சமயத்தில் இருந்தே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வெளியாகும் என கெளதம் மேனன் கூறியிருக்கிறார். போட்டான் கதாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் நிறுவனமும் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது.

இதுகுறித்து கெளதம் மேனன் கூறியிருப்பது " நான் யோஹன் படம் எப்போது துவங்கும் என பெரும் ஆர்வத்துடன் இருக்கிறேன். வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு ஒரு முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தினை இயக்க இருக்கிறேன்.

விஜய்யுடன் முதன் முறையாக இணைந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. யோஹன் ஒரு சர்வதேச சினிமா. இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்காக ஒரு தீம் பாடலை இப்போதே தயார் செய்து விட்டார். " என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் " போட்டான் கதாஸ் மற்றும் ஈராஸ் நிறுவனத்துடன் யோஹன் படத்தில் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கெளதமிற்கும் எனக்கும் இப்படம் புதிய களம். மக்களுக்கு பிடிக்கக்கூடிய, வித்யாசமான பாடல்களுடன் வருவோம் என நம்புகிறேன் " என்று கூறியுள்ளார்.

2012 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டுள்ளார்கள்

மகிழ்ச்சியில் இருக்கும் பின்னணி பாடகரான ஹிரிஷ்


பின்னணி பாடகரான ஹிரிஷ் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் காரணம் அவர் பாடிய பாடல் வெளிவர முதலே மாபெரும் வெற்றியடந்ததே காரணம் ஆகும். ஹிரிஷ் நண்பன் படத்தில் பாடியுள்ள பாடல் என் பிரண்டை போல பாடலாகும். இப்பாடல் நண்பன் படத்தின் முன்னோட்டதுடன் வெளியானது. வெளிவந்த நாள் முதலே இப்பாடல் அனைவரும் மிக நல்லக வந்துள்ளது என பாராட்டியுள்ளனர். இப்பாடல் முழுமையாக வெளிவந்ததும் இன்னும் பாராட்டு குவியும் என நம்பிக்கையில் உள்ளார் ஹிரிஷ். விஜய் படத்தில் ஏற்கனவே இவர் பாடிய சின்னதாமரை பாடல் மிக பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். விஜயின் ரசிகர் ஹிரிஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

நண்பன் படத்தின் இடைவெளியில் பில்லா 2 டிரெய்லர்

வரும் தைப்பொங்கல் திருநாளில் நண்பன் படம் வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
விஜய் ,ஸ்ரீகாந்த் ,ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தின் இடைவெளியில் பில்லா 2 டிரெய்லர் ஒளிபரப்பபடும் என்று அஜித்தும் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.
தல தளபதி இருவரும் நல்ல நண்பர்கள்.அதேபோல் ரசிகர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை.ரசிகர்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்

Saturday, December 10

தளபதியால் இனைந்த கவுதம் ஒளிப்பதிவாளர் மனோஜ்


பிரிந்த பின்பும் ஒருவரையொருவர் ஏசிக் கொள்ளாமல் இருந்தார்கள் கவுதம் மேனனும், அவரது ‘விண்ணை தாண்டி வருவாயா’ ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும். இப்படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் இந்த மனோஜும்தான். ஆனால் இந்த கூட்டணி அடுத்தடுத்த படத்தில் இணைய முடியாதளவுக்கு விழுந்தது திருஷ்டி. டைரக்டர் ஷங்கர் தனது நண்பன் படத்தில் ஒளிப்பதிவு செய்ய அழைத்ததும் கவுதம் மேனனின் பேச்சையும் கேட்காமல் அங்கு போனார் இவர்.

இதன்பின் எந்த சந்தர்பத்திலும் மனோஜை தொடர்பு கொள்ளாமலிருந்தார் கவுதம். ஆனால் எல்லா வைராக்கியங்களையும் பொடி பொடியாக்குகிற அளவுக்கு ஒரு பிரச்சனை. கவுதம் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் யாரை ஒளிப்பதிவாளராக நியமிப்பது என்ற பேச்சு எழுந்தது.

ஏன், விண்ணை தாண்டி வருவாயா பட ஒளிப்பதிவாளர் மனோஜ் இருந்தால் நன்றாக இருக்குமே? என்றாராம் விஜய். அவரே சொல்லிவிட்ட பிறகு, தனது ஜென்ம பகையை பற்றி பேசிக் கொண்டிருந்தால் ஆகுமா? மனோஜுக்கே போன் அடித்தாராம் கவுதம்

இளைய தளபதி விஜய் மீண்டும் பாடுகிறார்


இளைய விஜய் இயக்குனர் விஜயின் படத்தில் நடிக்க உள்ளார். விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படம் தொடங்க உள்ளதை தனது டுவிட்டரில் தெரிவித்தார். இப்படதிற்குரிய முற்பணத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி விட்டதாகவும் அறிவித்தார்.

விஜய், ஜி.வி.பிரகாஷ்குமார் இணைவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் என ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியுள்ளார். எனவே மீண்டும் விஜயின் குரலில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். விஜய் ஏற்கனவே பாடிய பாடல்கள் ஹிட் அடைந்தது என்பது குறிபிடதக்கதாகும்.

இளைய தளபதி விஜய் ஆதரவை தெரிவிப்பார்


இந்தியாவையே தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருப்பது, முல்லை பெரியாறு பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு கேரளாவில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் கேரள அரசிற்கு ஆதரவளித்து வருகின்றன.

முக்கியமாக மளையாள திரையுலகம் கேரள அரசிற்கு பெரும் ஆதரவளித்து வருகிறது.பெரிய ஜாம்பாவான்களிலிருந்து புதிதாக அறிமுகமாகியிருக்கும் திரைக்கலைஞர்கள் வரை கேரள அரசின் பின் நின்று குரல் கொடுக்கின்றனர்.

ஆனால் தமிழ் திரையுலகில் இருக்கும் ஜாம்பாவான்களும், முக்கிய நடிகர்களும் மௌனம் சாதித்து வருகின்றனர். இதற்கு முன் ஏற்பட்ட காவிரி பிரச்சினையின் போது தமிழ் திரைக்கலைஞர்கள் ஆதரவு அளித்தது தமிழக அரசிற்கு பக்கபலமாக இருந்தது. தமிழ் நடிகர்களில் விஜய்க்கு தான் கேரளாவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது.
விஜய்யின் மேல் கொண்ட அன்பினால் அவருக்கு கேரளாவில் சிலை ஒன்றை நிறுவி தங்கள் பாசத்தை நிரூபித்தனர் கேரள ரசிகர்கள். காவிரி பிரச்சினையின் போது விஜய் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு தன் எதிர்ப்பை காட்டினார்.
கேரளாவில், தீபாவளிக்கு வெளியான மளையாளப் படங்களை விட, விஜய் நடித்து வெளியான “வேலாயுதம்” படத்திற்கே மாபெரும் வறவேற்பு காணப்பட்டது.சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரும் வாய் திறக்காமல் இருந்தால், இந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களும் சில நாட்களில் அடங்கி விடுவார்கள் அல்லது அடக்கப்பட்டுவிடுவார்கள்.
சமுதாய நலனில் அக்கறை கொண்ட விஜய் போன்ற திரையுலக முக்கிய நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களா? இல்லை அவர்களது மௌனம் தொடருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சீனாவில் வெளியாகிறது 'நண்பன்


நவீனக் கல்விமுறையை பகடி செய்யும் '3 இடியட்ஸ்' படம் பாலிவுட்டில் 200 கோடிகளை வசூல் செய்தது. அமீர்கான், கரீனா கபூர், மாதவன், ஷர்மா ஜோஷி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப்படத்தின் படத்தின் மூலம் அமீர்கானை தரமான சினிமாவின் காதலர் என்று மீடியா கொண்டாடியது. இதனால் தனது சொந்த தயாரிப்பில் தொடர்ந்து தரமான படங்களை எடுத்து வருகிறார் அமீர்கான். இவரோடு இந்தப் படத்தில் நடித்த மாதவன், ஷர்மா ஜோஷி ஆகியோருக்கும் மார்கெட் நிலவரம் உயர்ந்தது. '3 இடியட்ஸின்' அசாதாரண வெற்றியும், அதன் கதையமைப்பும் பிரம்மாண்டமாக மட்டுமே படமெடுத்து பழக்கப்பட்ட இயக்குநர் ஷங்கரை கவர அவரே இந்தபடத்தை தமிழில் இயக்கும் பொறுப்பை செய்து முடித்திருக்கிறார். மாஸ் ஹீரோவான விஜய், '3 இடியட்ஸ்' ரீமேக் ஒரு மல்டி ஸ்டாரர் என்று தெரிந்தும் அதில் நடித்திருக்கிறார். 'நண்பன்' என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் '3 இடியட்ஸின்' தமிழ்பதிப்பின் இசை டிசம்பர் இறுதியிலும், படம் பொங்கலுக்கும் வெளியாக இருக்கிறது. தமிழைத் தொடர்ந்து இந்தப்படம் கடல் கடந்து பயணமாக இருக்கிறது. முதலில் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கிறிஸ்மஸ் வெளியீடாக சீனாவில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ஹாங்காங்கில் '3 இடியட்ஸ்' டப் செய்யப்படாமல் ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளியாகி வசூலை அள்ளியதால் சீனாவில் இருந்து நல்ல விலைக்கு வாங்கி விட்டார்களாம் இந்தப் படத்தை! சீனாவில் படம் வெளியாகிறது என்று தெரிந்ததும், ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ உட்பட மூன்று பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் படத்தின் ஆங்கில ரீமேக் உரிமையை பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். ஹாலிவுட் படங்களை இந்தியர்கள் காப்பியடித்த காலம் போய் தற்போது இந்தியப் படங்களின் ஆங்கில ரீமேக் உரிமையை பெற ஹாலிவுட் முன் வந்திருப்பது அதிரடி மாற்றம்தான்

ராஜபாட்டையால் தள்ளிப்போன நண்பன்



விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் நண்பன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நேரு உள் விளையாட்டரங்கில் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட். ராஜபாட்டை படத்தின் ஆடியோ வெளியீட்டை டிசம்பர் 15ஆம் தேதி நடத்தவிருப்பதாலும் ராஜபாட்டை படத்தை 23ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாலும் அது சம்பந்தமான வேலைகளில் பிஸியாக இருக்கிறது ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம்.
நண்பன் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட வேண்டிய ஒன்று என்பதால் வெளியீட்டு விழாவை தற்போது தள்ளி வைத்திருக்கிறது அந்நிறுவனம். டிசம்பர் கடைசியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நண்பன் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நண்பன் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.

Thursday, December 8

விஜய் + விஜய் இணையும் படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறார் விஜய். அப்படத்தினை தொடர்ந்து கெளதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இன்று இயக்குனர் விஜய் - நடிகர் விஜய் இணையும் படம் உறுதியாகி உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறார் பிரபல பைனான்சியர் சந்திர பிரகாஷ் ஜெயின்.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " இப்போது தான் இயக்குனர் விஜய் - நடிகர் விஜய் இணையும் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினேன். இளைய தளபதி படத்தில் பணியாற்ற இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார் சந்திர பிரகாஷ் ஜெயின் " என்று தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் முதல் விஜய் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம் வெளியாவதை விரும்பவில்லை ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

விஜய் நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரிக்கிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளில் படத்தின் விளம்பரங்கள் பேப்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் படத்தை பிரபலப்படுத்த துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

ஏழாம் அறிவு படத்தின் அதிகாரபூர்வமான விளம்பரம் வெளிவரும் முன்பே படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதனால், இப்படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாவதை விரும்பவில்லையாம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சினிமா விகடன் இணையத்தில் முந்தியது நண்பன்..!

2012ம் ஆண்டில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தமிழ் படங்கள் சில வெளியாக இருக்கின்றன.


ரஜினி - 'கோச்சடையான்', கமல் - 'விஸ்வரூபம்', விஜய் - 'நண்பன்', அஜீத் - 'பில்லா 2', சூர்யா - 'மாற்றான்', விக்ரம் - ' தாண்டவம்',சிம்பு - ' வேட்டை மன்னன்', தனுஷ் - ' 3 ', ஆர்யா, மாதவன் - ' வேட்டை ' என அனைத்து படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.


இவ்வாறு அனைத்து நடிகர்களின் படங்களும் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் எந்த படத்தினை அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்று சினிமா விகடன் இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு நேற்றோடு (டிசம்பர் 06) முடிவடைந்தது.

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'நண்பன்', அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ' நண்பன் ' திரைப்படம் .19, 668 வாக்குகளும், 'பில்லா-2' திரைப்படம் 1,08,339 வாக்குகளும் பெற்றன. மற்ற படங்களுக்கு கம்மியான வாக்குகளே கிடைத்தன

நன்றி விகடன்.!


Tuesday, December 6

சினிமா உலகில் என் முக்கியமான படம் காஜல் அகர்வால்

இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கித் திரைப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தைப்பற்றி நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது, நான் சினிமா உலகில் நடிக்கும் முக்கியமான திரைப்படம் தான் இந்த துப்பாக்கி.
முதல் முறையாக இளைய தளபதி விஜய், இயக்குனர் முருகதாஸ் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றுகிறேன். துப்பாக்கி படத்தில் இயல்பான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.
இதுவரையில் முருகதாஸ் திரைப்படங்களில் உள்ள கதாநாயகி கதாப்பாத்திரங்களை விட துப்பாக்கி படத்தில் வரும் கதாநாயகி கதாப்பாத்திரம் பலமானது.
இயக்குனர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் கதாநாயகியாக நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்

Monday, December 5

நண்பன் இசை வெளியீட்டு விழாவில் அமீர்கான்

அமீர்கான், மாதவன் நடித்து இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் “நண்பன்” என்ற பெயரில் “ரீமேக்” ஆகிறது. விஜய், சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர். ஷங்கர் இயக்குகிறார். படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடக்கிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 15-ந் தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்த உள்ளனர். நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு அமீர்கானை அழைக்க முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே சல்மான்கான், பெப்சி விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன் படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தார். ஷாருக்கான் தனது “ரா ஒன்” பட ரிலீசையொட்டி சென்னைக்கு வருகை தந்ததுடன் ரஜினியையும சந்தித்து விட்டு சென்றார். இவர்களை தொடர்ந்து அமீர்கானும் வருகிறார்

Saturday, December 3

நண்பன் டிசம்பர் 14ம் தேதி நேரு அரங்கில் இசை வெளியீட்டு..!

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் பொங்கல் 2012ல் வெளியாக இருக்கும் படம் ' நண்பன் '. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ' 3 இடியட்ஸ் ' படத்தின் ரீமேக் ' நண்பன்' .

ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இலியானா நாயகியாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 14ம் தேதி நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.

3 இடியட்ஸ் படத்தின் நாயகன் அமீர்கான் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்.

டிசம்பர் 14ம் தேதி இசை வெளியான உடன் இப்படத்தினை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஜனவரி 14ல் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள்

துப்பாக்கி' படத்தின் முதல் பேப்பர் விளம்பரம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்போது துவங்குகிறது, யார் தயாரிப்பாளர் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வந்தன.

தயாரிப்பாளர் தாணு தான் என்று முதலில் முடிவானது. காஜல் அகர்வால் தான் நாயகி என்று கூறி வந்தாலும் இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளிவர வில்லை.

இந்நிலையில் இப்படத்திற்கு ' துப்பாக்கி ' என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். ' போக்கிரி ' படத்தினை அடுத்து இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன். போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதால் அதற்காக ஜிம்மிற்கு சென்று தனது உடம்பை ஏற்றி கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வலம் வந்தன.

இத்தகவலை விஜய் மறுத்துள்ளார். எந்த கதாபாத்திரத்திற்காகவும் ஜிம்மிற்கு போய் உடலை முறுக்கேற்றிக் கொள்வது இல்லை. நான் எப்போது ரெகுலராக உடற்பயிற்சி செய்பவன். வெளிவந்த அந்த தகவலில் உண்மை இல்லை " என்று தெரிவித்துள்ளார்.

'துப்பாக்கி' படத்தின் முதல் பேப்பர் விளம்பரம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல். 'துப்பாக்கி'க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்ப

Friday, December 2

துப்பாக்கி தலைப்பு மாற்றபடுமா....???


விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதி. இதன் தலைப்பு துப்பாக்கி என வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் விஜய்க்கு உடன்பாடு இல்லையாம் காரணம் இந்த தலைப்பு அவ்வளவு எதிர்பார்ப்பை கொடுக்கவில்லையாம் இதனால் இந்த தலைப்பை மாற்றும் படை முருகதாசை கேட்டுள்ளார் விஜய் . அதற்கு முருகதாஸ் ஆம் என கூறியுள்ளாராம் இதனால் முருகதாஸ் புதிய தலைப்பை தேடி வருகிறார். இப்படம் டிசம்பர் இரண்டாம் வரம் பத்திரிகை விளம்பரத்துடன் தொடங்க உள்ளது. விஜய் நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்க்கு ஜோடி சேர்கிறார். விஜயுடன் வேலாயுதம் படத்தில் ஹன்சிகா நடித்த பாத்திரத்துக்கு நடிக்க பரிந்துரைக்கப்படு பின் நீக்கபட்டர். விஜய் லிங்குசாமி இணைய இருந்த படத்திலும் இவர் பெயர் பரிந்துரைகபட்டது. எனினும் இப்படத்தில் ஜோடி சேர்வது உறுதியாகி உள்ளது. இரண்டாவது முறையாக விஜய் ஹரிஸ் இணைவது குறிபிடதக்கதாகும். நண்பன் பட சிறிய பாடல் நண்பன் பட பாடலை மேலும் கேட்க ஆசையை தூண்டுவதால் இப்பட பாடலும் கண்டிப்பாக ஹிட்டா அமையும்

நண்பன் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது



விஜய் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் நண்பன். இப்படத்தின் இசை வெளியீட்டை மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது ஜெமினி பிலிம். இந்த நிறுவனமானது தனுஸ் நடித்த மயக்கம் என்ன மற்றும் விக்ரமின் ராஜபாட்டை ஆகிய படங்களை தமது நிறுவனத்தின் உடாக வெளியிட்டுள்ளது. தனது சொந்த தயாரிப்பான நண்பன் படத்தின் இசை வெளியீட்டிற்கு பிரபலங்கள் பலரை அழைக்க உள்ளது என தெரிய வந்துள்ளது. ரஜனி கமல் முருகதாஸ் சங்கர் மற்றும் நண்பன் படக்குழுவினர் மற்றும் ஏனைய தமிழ் சினிமா பிரபலங்களும் வர உள்ளனர். ஹரிசின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மேடையில் பாடப்படும். இவ் இசை வெளியீட்டை டிசம்பர் 10௦ எதிர்பார்க்கலாம். விஜயின் சமிபத்திய படமான காவலன் வேலாயுதம் படங்களை தொடர்ந்து இப்படமும் ஹிட் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சங்கர் விஜய் கூட்டனி முதல் முதல் இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாக உள்ளது. புது குழு இப்படத்தில் பணி ஆற்றுவதால் இப்படம் கண்டிப்பாக வெற்றிக்கனி பறிக்கும் என நம்பலாம். பொங்கள் வெளியீட்டில் அதிகளவு திரையரங்குகளை நண்பன் படம் கைபற்றி உள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

விஜய் – அஜீத்தை இணைக்க ஸ்கிரிப்ட் ரெடி.! செல்வராகவன் பேட்டி



விஜய், அஜீத்தை இணைத்து படம் இயக்க கதை தயாராக உள்ளது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.

இதுபற்றி செல்வராகவன் கூறியதாவது: ‘மயக்கம் என்ன’ படம் பார்த்து பலர் பாராட்டினார்கள். என்னைப் பொருத்தவரை வழக்கமான மசாலா படங்கள் எடுப்பதைவிட வித்தியாசமான கதை களங்களுடன் படம் இயக்கவே விரும்புகிறேன்.

யுவன் சங்கர் ராஜாவுடன் எனக்கு எந்த சண்டையும் இல்லை. விரைவில் அவருடன் இணைந்து படம் தருவேன். விஜய், அஜீத்தை எப்போது இயக்கப்போகிறீர்கள் என்கிறார்கள்.

இருவரையும் இணைத்து ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். அந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எப்போது அது நிறைவேறும் என்று தெரியவில்லை.

எனது அடுத்த படம் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’. இதுதவிர திகில் படத்துக்காக 2 ஸ்கிரிப்ட் உள்ளது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளேன். இவ்வாறு செல்வராகவன் கூறினார்

Wednesday, November 30

துப்பாக்கியில் இளைய தளபதி விஜய் போலிஸ்..?



டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடக்க விழா இல்லாமல் பத்திரிகை விளம்பரத்தோடு ‘துப்பாக்கி படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது

ஏ.ஆர்.முருகதாஸ்- இளையதளபதி விஜய் கூட்டணி. முதல்முறையாக இந்தக் கூட்டணி ஒன்றினைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருகிறது.

ஆனால் இன்னும் துப்பாக்கி படம் பற்றிய தகவல்கள் சூடு பிடிக்க வில்லை. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரீஸ் ஜயராஜ் இசையமைக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்தப் படத்தில் விஜய் ஏற்க இருக்கும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் முருகதாஸ் வட்டாரத்தில் இருந்து அனல் பறக்கும் தகவல் கசிகிறது. துப்பாக்கி படத்தில் விஜய் இளம் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்தான் அது.

ஏற்கனவே போக்கிரி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய். ஆனால் அதில் முழுமையான போலீஸ் அதிகாரி கேரக்டர் அமைய வில்லை. ஆனால் துப்பாக்கி ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியின் கதை என்கிறார்கள். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முப்பைக்கு தூக்கி அடிக்கப் படும் ஒரு தமிழ் திகாரியின் கதை என்கிறார்கள். முருகதாஸுடன் சந்தோஷ் சிவன் மட்டுமல்ல, முதல் முறையாக எழுத்தாளர் ஜெயமோகனும் இணைய இருகிறார். இந்தபடத்துக்கு ஜெயமோகனே வசனம் எழுதுகிறார்.

இதற்கிடையில் தமிழ்தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரேநேரத்தில் எடுக்க திட்டமிட்ட முருகதாஸுக்கு ஒரு சிறு பின்னடைவாம். தெலுங்கிலும் ‘ துப்பாக்கி என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிட விரும்பி, தெலுங்கு பிலிம் சேம்பரில் இந்த தலைப்பை பதிவு செய்யச் சென்றாராம்.

ராஜபாட்டை திரையரங்குகள் அனைத்தும் நண்பன்' !



சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் படம் ' ராஜபாட்டை '. திக்ஷா சேத் நாயகியாக நடிக்க, 'சங்கராபரணம்' விஸ்வநாத் விக்ரமிற்கு அப்பாவாக நடித்து இருக்கிறார்.

யுவன்சங்கராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்தினை PVP CINEMAS பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.

முதலில் சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்து, பின்னர் திருப்பி கொடுத்து விட்டது. இந்நிலையில் இப்படத்தினை வெளியீட்டு உரிமையை தற்போது ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தின விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு வெளியிட இருக்கிறார்கள்.

சுசீந்திரன் மற்றும் விக்ரம் இருவருக்குமே ஆந்திராவில் நல்ல ஒப்பனிங் இருப்பதால் இப்படத்தில் தெலுங்கில் ' VEEDINTHE ' என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

டிசம்பரில் இப்படத்தினை ரிலீஸ் செய்து விட்டு 2012 பொங்கல் சமயத்தில் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்த அனைத்து திரையரங்குகளிலும் தாங்கள் தயாரித்த ' நண்பன் ' படத்தினை வெளியிட

Sunday, November 27

விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை பிரியங்கா சோப்ரா


நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். பர்பி என்ற இந்தி படபிடிப்பிற்காக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

அப்போது பிரியங்கா கூறியதாவது: விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்திருக்கிறேன். அதன் படபிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது.

கிட்டத்தட்ட அதே இடங்களில்தான் பர்பி படபிடிப்பு நடந்தது. இதில் பங்கேற்ற போது பழைய நினைவுகள் என் மனதில் நிழலாடியது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிக்க மறுத்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் விஜய் படம் மூலம்தான் அறிமுகமானேன்.

முருகதாஸ் மற்றும் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கால்ஷீட் கேட்கவில்லை. நல்ல வாய்ப்பாக வந்தால் மீண்டும் தமிழ் படத்தில் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார்

Friday, November 25

விஜய் அடுத்து நடிக்கும் துப்பாக்கி !


ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில்எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

நண்பன் படத்தை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் விஜய் நடிக்கும் இந்த படத்திற்க்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது

Related Posts Plugin for WordPress, Blogger...