இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Saturday, December 10

சீனாவில் வெளியாகிறது 'நண்பன்


நவீனக் கல்விமுறையை பகடி செய்யும் '3 இடியட்ஸ்' படம் பாலிவுட்டில் 200 கோடிகளை வசூல் செய்தது. அமீர்கான், கரீனா கபூர், மாதவன், ஷர்மா ஜோஷி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப்படத்தின் படத்தின் மூலம் அமீர்கானை தரமான சினிமாவின் காதலர் என்று மீடியா கொண்டாடியது. இதனால் தனது சொந்த தயாரிப்பில் தொடர்ந்து தரமான படங்களை எடுத்து வருகிறார் அமீர்கான். இவரோடு இந்தப் படத்தில் நடித்த மாதவன், ஷர்மா ஜோஷி ஆகியோருக்கும் மார்கெட் நிலவரம் உயர்ந்தது. '3 இடியட்ஸின்' அசாதாரண வெற்றியும், அதன் கதையமைப்பும் பிரம்மாண்டமாக மட்டுமே படமெடுத்து பழக்கப்பட்ட இயக்குநர் ஷங்கரை கவர அவரே இந்தபடத்தை தமிழில் இயக்கும் பொறுப்பை செய்து முடித்திருக்கிறார். மாஸ் ஹீரோவான விஜய், '3 இடியட்ஸ்' ரீமேக் ஒரு மல்டி ஸ்டாரர் என்று தெரிந்தும் அதில் நடித்திருக்கிறார். 'நண்பன்' என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் '3 இடியட்ஸின்' தமிழ்பதிப்பின் இசை டிசம்பர் இறுதியிலும், படம் பொங்கலுக்கும் வெளியாக இருக்கிறது. தமிழைத் தொடர்ந்து இந்தப்படம் கடல் கடந்து பயணமாக இருக்கிறது. முதலில் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கிறிஸ்மஸ் வெளியீடாக சீனாவில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ஹாங்காங்கில் '3 இடியட்ஸ்' டப் செய்யப்படாமல் ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளியாகி வசூலை அள்ளியதால் சீனாவில் இருந்து நல்ல விலைக்கு வாங்கி விட்டார்களாம் இந்தப் படத்தை! சீனாவில் படம் வெளியாகிறது என்று தெரிந்ததும், ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ உட்பட மூன்று பெரிய ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் படத்தின் ஆங்கில ரீமேக் உரிமையை பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம். ஹாலிவுட் படங்களை இந்தியர்கள் காப்பியடித்த காலம் போய் தற்போது இந்தியப் படங்களின் ஆங்கில ரீமேக் உரிமையை பெற ஹாலிவுட் முன் வந்திருப்பது அதிரடி மாற்றம்தான்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...