இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, January 21

நான் ஹெல்ப் பண்ணவா? - விஜய்யிடம் பேசிய விஜயகாந்த்!

Kavalan

அவ்வளவு பெரிய அடையாறு ஆலமரமே திடீரென்று பொட்டிக்குள் அடங்குகிற போன்சாய் மரமாகிவிட்டால்? அதே கதிதான் இப்போது விஜய்யின் காவலனுக்கும்!

கொண்டை ஊசி வளைவுகளாக ஏகப்பட்ட திருப்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது படம். நேற்றைய நிலவரம் ஒன்று. இன்றைய நிலவரம் வேறொன்றாக திடுக்கிடும் திருப்பங்கள் இப்படத்தின் வெளியீட்டு விஷயத்தில். நாலாபுறத்திலிருந்தும் கடனை வாங்கியிருக்கும் இப்படத்தின் 'திடீர்' தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்தின் பெயர், இன்றைய காவலன் விளம்பத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது. (அதுவும் முன்னணி நாளிதழான தினத்தந்தியில் காவலன் விளம்பரம் வரவேயில்லை) படத்தின் முதல் தயாரிப்பாளரான ரொமேஷ் பாபுவை 15 கோடி கட்டிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய சொல்லிவிட்டது நீதிமன்றம்.

இதில் மூன்று கோடியை தருவதாக ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கும் பிரச்சனை. சொந்த வீட்டிலிருந்தே அதற்கும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் தனிக்கட்சி மூட், எஸ்.ஏ.சியின் ஜெயலலிதா சந்திப்பு இவ்விரண்டும்தான் அவரது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற எண்ணம் அழுத்தமாக விதைக்கப்பட்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில்.

"இந்த பிரச்சனையில் நான் உதவட்டுமா?" என்று, தானே முன்வந்து விஜய்யிடம் பேசினாராம் கேப்டன் விஜயகாந்த். அது மேலும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இப்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இறுதி நேரம் வரைக்கும் நம்பிக்கையை விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்! நாளைக்கு காவலன் வரலாம். அல்லது வராமலும் போகலாம் என்பதுதான் இப்போதைய நிஜ நிலவரம்.

பின் குறிப்பு- இதற்கிடையில் ராஜபோகமான சேனல் ஒன்றும் இப்படத்தின் சேட்டிலைட் ரைட்சுக்காக மூன்று கோடியை கொடுத்திருந்ததாம். ஆனால் இவர்கள் கைக்கு படம் போகவில்லை. மாறாக சன் டி.விக்கு விற்கப்பட்டு விட்டது. கடைசி நேரத்தில் இந்த சேனல் காரர்களும் கோர்ட் படியேறலாம்

திருச்சி மாநாட்டில் இருவர்.. விஜய்யின் அப்பா போடும் புதுக்கணக்கு







நியூட்டனின் மூன்றாம் விதி பற்றி அதிகம யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய்யின்Vijayakanth - Seemanஅப்பா எஸ்.ஏ.சி. (அட! இது எஸ்.ஜே.சூர்யா படத்தை பற்றிய யோசனை இல்லீங்க. 'ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான...' அந்த மேட்டர்)

விஜய்க்கு எதிராக பின்னப்பட்டிருக்கும் இந்த வலை அரசியல் சார்ந்தது என்றாலும், அதை கடன் பிரச்சனையாக்கி விட்ட சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்தாராம் அவர். இனிமேலும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்கிற அளவுக்கு சூடாகிக் கிடக்கிறாராம்.

பிப்ரவரி 6 ந் தேதி திருச்சியில் கூடுகிறது விஜய் ரசிகர்களின் மாநாடு. தனது பலத்தை காட்டப் போகும் மாநாடாகவே இதை பார்க்கிறார் எஸ்.ஏ.சி. நான் தனி ஆள் இல்லை என்பதையும் அங்கு நிரூபிக்க திட்டமிட்டிருக்கிறாராம் அவர். அந்த மேடையில் இரண்டும் முக்கியமான தலைகளை மேடையேற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு இருவருமே சம்மதம் தெரிவித்திருப்பதுதான் இந்த செய்தியின் சாராம்சம்.

ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் சீமான்!

ராஜா சின்ன ரோஜா மாதிரி... -விஜய்யின் லட்சிய பேட்டி!


Velayudhamஅதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் கலந்து கொள்வாரா? முன்னாள் முதல்வர் ஜெ.விடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, "இந்த கேள்வியை நீங்க அவரிடம்தான் கேட்கணும்" என்றார் ஜெ. கடந்த வாரமே ஜெயலலிதாவை சந்திக்கப் போகிறார் விஜய் என்று பரபரப்பு கிளம்பிய நிலையில் இந்த பதில் ஏராளமான அர்த்தங்களை உள்ளடக்கியது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்!

தனது படங்கள் வெளியாகிற நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பது விஜய்யின் வழக்கம்தான். என்றாலும், அவசரம் அவசரமாக நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்திக்க முன் வந்தார் விஜய். துறைமுகத்திற்குள் நடந்த வேலாயுதம் படப்பிடிப்புக்கே அழைக்கப்பட்டார்கள் நிருபர்கள். எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அழைக்கப்பட்டதால், துறைமுக வாசலிலேயே சுமார் முக்கால் மணி நேரம் நிற்க வைக்கப்பட்டார்கள். காரணம் செக்யூரிடி சம்பிரதாயங்கள். எப்படியோ கெஞ்சி கூத்தாடிதான் அவர்களை உள்ளே அழைத்துப் போனது விஜய் தரப்பு.

"அண்ணே... அரசியல் கேள்விகள் வேணாம்ணே" என்று அன்பாக கேட்டுக் கொண்டார் விஜய். அப்பவும் விடாமல் கேட்டு மடக்கிய நிருபர்களிடம், "இந்த சந்திப்பு காவலன் ரிலீஸ் நேரத்தில் பொறுமையா இருந்த என் ரசிகர்களுக்கு உங்க மூலமா நன்றி சொல்றதுக்குதான். அரசியல் விஷயங்களை இப்போ பேச வேண்டாம்" என்றார் திரும்ப திரும்ப. "வேலாயுதம் படம் பற்றிதான் இப்போ என்னோட முழு சிந்தனையும் இருக்கு. அடுத்து பகலவன் படத்தில் நடிக்கிறேன். முழு கதையையும் கேட்டுட்டேன். திருப்தியா இருக்கு".

"'ராஜா சின்ன ரோஜா' மாதிரி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஒரு படம் பண்ணணும். கிராமத்தில் விவசாயிகள் குறைஞ்சுட்டாங்க. விவசாயத்தின் முக்கியத்துவமும் குறைஞ்சுகிட்டே வருது. இந்த மனப்போக்கு மாறணும். இதையும் வெளிப்படுத்துற மாதிரி ஒரு படத்தில் நடிக்கப் போறேன்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்!

அஜீத் - விஜய் இணையும் ஆக்ஷன் ஷோலே!

ஓ.கே... கோலிவுட்டில் இப்போது 'மோஸ்ட் வான்டட்’ எதிர்பார்ப்பில் இருக்கும் படம் 'மங்காத்தா’! சில வருடங்களாகவே சீரியஸ் தொனி படங்களில் நடித்து வரும் அஜீத், வேண்டி விரும்பி வெங்கட் பிரபுவின் காமெடி ட்ரீட்மென்ட் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டு இருக்கிறார். 'தல’ ஹீரோ, 'வாலு’ டைரக்டர் என்ற வித்தியாச காம்பினேஷன் நிச்சயம் அஜீத் ரசிகர்களை உற்சாகமூட்டும். பரபரவென முன்னேறி வரும் படப்பிடிப்பு கூடாரத்தினுள் எட்டிப் பார்த்ததில் இருந்து...

அஜீத் - த்ரிஷா இடையே முத்தக் காட்சி ஒன்று அவசியம் என்று ஒற்றைக் காலில் நின்றிருக்கிறார் வெங்கட் பிரபு. முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் த்ரிஷா ஓ.கே சொல்ல, அஜீத்துக்கோ ஏகத் தயக்கம். 'அவசியமா... கட்டாயம் வேண்டுமா? உறுத்தலா இருந்துராதே!’ என்று பலமுறை கேட்டுச் சமாதானமான பிறகுதான் இசைந்திருக்கிறார் அஜீத். மிக நெருக்கமான அந்த முத்தக் காட்சி நாலு டேக்குகள் வரை நீண்டது.

'எல்லோரும் கெட்டவன்னா, இவன் ரொம்பக் கெட்டவன்!’ படத்தில் அஜீத்துக்கான பஞ்ச் லைன் இது.

'மங்காத்தா’ - 'வேலாயுதம்’ படப்பிடிப்பு இடைவேளைகளில் அஜீத் - விஜய் சந்தித்துக் கொண்டபோது, 'மங்காத்தா’வில் அர்ஜுன் கேரக்டர் பற்றி விஜய்யிடம் விவரித்திருக்கிறார் வெங்கட் பிரபு. 'அட, செம கேரக்டருங்க... எனக்கே அதைப் பண்ண ஆசையா இருக்கு!’ என்று வாய்விட்டு ஆதங்கப்பட்டு இருக்கிறார் விஜய்

' 'கில்லி’ படத்துல உங்க காமெடி பார்க் குறப்போ இப்பவும் நான் சிரிச்சுட்டு இருப்பேன். இந்தப் படத்துல அந்த அளவுக்கு காமெடி பண்ண ஸ்கோப் இருக்குற கேரக்டர். செமத்தியா ஹோம்வொர்க் பண்ணிட்டு இருக்கேன். என்னோட அல்ட்டிமேட் காமெடி படமா இது இருக்கும்!’ என்று அப்போது விஜய்யிடம் கூறி இருக்கிறார் அஜீத். 'ஆஹா.... அது ஒண்ணுதான் நம்ம டிபார்ட்மென்ட். அதுலயும் போட்டிக்கு வந்துட்டீங்களா!’ என்று ஜாலியாகக் கலாய்த்து இருக்கிறார் விஜய்.

ரஜினியின் ஹிட்டான 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!’ பாடலின் சில வரிகளை ரீ-மிக்ஸி ஒரு பாடல் துவங்குகிறது. தொடர்ந்து 'அம்பானி பரம்பரை... அஞ்சாவது தலைமுறை... ஆனந்தம் ஒருமுறைதான்!’ என்று அஜீத் பாணிக்கு மாறுகிறது பாடல்.

படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் டைரக்டருக்கே தெரியாத சஸ்பென்ஸ். காரணம், அவருக்கே தெரியாதே! இன்னும் அஜீத் கேரக்டருக்குப் பெயர் சூட்டப்படவில்லை!

அஜீத் - விஜய் இடையேயான நட்பு இறுக்கமாகி இருக்கிறது. எந்த அளவுக்கு இறுக்கம் என்றால், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு! 'மங்காத்தா’ பட பப்ளிசிட்டி சமயம், இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம் என்று ரகசியம் காக்கிறார்களாம்!

இருவரையும் இணைத்து இயக்குவது..? வெங்கட் பிரபு! இவர் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை அஜீத்- விஜய் இருவரிடமும் சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. 'எனக்கு அந்த கேரக்டர்!’ 'எனக்கு இந்த கேரக்டர்!’ என்று மல்லுக்கட்டத் துவங்கியிருக்கிறார்கள். அரண்டு போன வெங்கட், 'அதுக்குள்ள ஏன் அவசரம்? இன்னும் நான் ஸ்க்ரீன்ப்ளே சரி பண்ணிக்கிறேன்!’ என்று கூறியிருக்கிறாராம்.

'அமிதாப், தர்மேந்திரா சேர்ந்து நடிச்ச 'ஷோலே’ இந்திய சினிமாவில் மைல்கல். அது மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை. பவர்ஃபுல் ஆக்ஷன் சேருங்க, கலர்ஃபுல் காதல் சேருங்க, சியர்ஃபுல் காமெடி சேருங்க!’ என்று வெங்கட் பிரபுவின் தோள் தட்டி அனுப்பி இருக்கிறார்கள் இருவரும்!

ஷங்களின் 3 இடியட்ஸ் படத்தில் சத்தியராஜ் நடிக்கிறார்!

சிறியதொரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று இந்திய நட்சத்திரங்கள் பலபேர் காத்திருக்க, ஏற்கனவே சிவாஜி படத்தில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை உதறித்தள்ளியவர் சத்தியராஜ். ஆனால் இப்போது மறுபடியும் இயக்குநர் ஷங்கரின் 3 இடியட்ஸ்; படத்தில் நடிப்பதற்கு சம்மதித்திருக்கிறார் நடிகர் சத்தியராஜ்.

ஹிந்தியில் பல சாதனைகளை முறியடித்து, பல விருதுகளையும் பெற்றுக்கொண்ட 3 இடியட்ஸ் படத்தினை ஷங்கர் தமிழில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்றன. இப்படத்திற்கு தேவையாக கதாபாத்திரங்களை ஷங்கர் தேடி எடுத்துள்ளார். இந்நிலையில்தான் நடிகர் சத்தியராஜுக்கும் ஒரு பாத்திரத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே சிவாஜி படத்தில் ரஜனிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்தவர் இம்முறை உடனே ஒத்துக்கொண்டுள்ளார். இதுபற்றி சத்தியராஜ் குறிப்பிடுகையில்… 3இடியட்ஸ் படத்தில் எனக்கு முக்கியமான ஒரு பாத்திரம் காத்திருக்கிறது. இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. சிவாஜி படத்தில் எனக்கு அவ்வளவு முக்கியமான பாத்திரம் இல்லாததால் நடிப்பதற்கு மறுத்திருந்தேன். ஆனால் இப்போது எனது நடிப்பிற்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்

Thursday, January 20

சீமானுக்கு விஜய் விதித்த நிபந்தனை



கலைப்புலிதாணுவின் தயாரிப்பில் சீமான் இயக்கி விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் அது உறுதியில்லாமல் இருந்தது. காரணம்,ஆளும்கட்சிக்கு எதிராக இருக்கிறார் சீமான் அவர் இயக்கத்தில் நீ நடித்தால் அது நமக்குச் சிக்கல் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர்.இது சீமான் சிறைக்குப் போவதற்கு முன்பு நடந்தது கதை. சீமான் சிறையிலிருந்து வருவதற்குள் எஸ்.ஏ.சந்தரசேகரே ஜெயலலிதாவைச் சந்திக்குமளவுக்கு ஆகிவிட்டது. இதனால் இப்போது சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பது நிச்சயமாகிவிட்டது. முதலில் ஒருவரிக்கதையை மட்டும் விஜய்க்குச் சொல்லியிருந்தாராம் சீமான்.சிறையில் அதை முழுமையாக்கியவர் அண்மையில் விஜய்யைச் சந்தித்து வரிக்குவரி மொத்தக் கதையையும் சொல்லியிருக்கிறார். அதிரடி அரசியல் நிகழ்வுகளையும் கதையில் சேர்த்திருக்கிறாராம் சீமான்.
கதையை முழுமையாகக் கேட்ட விஜய்க்கு அது மிகவும் பிடித்துவிட்டதாம்.இந்தப்படத்தை நிச்சயம் செய்கிறோம் என்று உறுதியளித்த விஜய்,இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வேலாயுதம் படத்தை முடித்தவுடன் இதைத் தொடங்குவதா அல்லது அதற்கடுத்து ஏற்கெனவே ஒப்புக்கொண்ட இன்னொரு படத்தை முடித்துவிட்டு இதைத் தொடங்குவதா என்பதைச் சொல்லவிருக்கிறாராம்.




அதற்கு முன்பு சீமானுக்கு இவர் ஒரு நிபந்தனை விதித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.அது,படம் தொடங்கினால் அது முடிகிறவரை தீவிர அரசியலில் இறங்கி சிறைக்குச் செல்லும்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதுதானாம்.அதை சீமானும் ஏற்றுக்கொண்டார் என்றே சொல்கிறார்கள்.

விஜய் - ஜெயலலிதா சந்திப்பு பிற்போடப்பட்டது!



அதிமுக பொதுச் செயலளார் ஜெயலலிதா - நடிகர் விஜய் சந்திப்பு சில தினங்களுக்கு பிற் போடப்பட்டுள்ளதாகத் அறிய வருகிறது. நேற்று காலை அல்லது பிற்பகல் நடைபெறலாம் என எதிர் பார்க்கப்பட்ட இச் சந்திப்பு. விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் படப்பிடிப்பிலிருந்து உரிய நேரத்துக்கு வந்து கொள்ள முடியமற் போனதால் ஒத்திவைக்கப்பட்டதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காரணத்தினால் இன்று மாலை பத்திரிகையாளர்களை விஜய் சந்திக்கவிருந்த நிகழ்ச்சியும் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய சந்திப்புக்கு அதிமுக செயலர் தரப்பில் நேரம் ஓதுக்கபட்டிருந்த போதும், சந்திரசேகர் வருவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, இச் சந்திப்பு சில தினங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. மறு சந்திப்பக்கான சம்மதம் அதிமுக தரப்பில் வழங்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்ற போதும், அது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை.
ஆயினும் வார இறுதியிலோ அல்லது வரும் வாரத்திலோ இச் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்கலாம் எனவும், அதன் பின்னரே பத்திரிகையாளர்களை விஜய் சந்திப்பார் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக செயற்படுவதாக விஜய் தெரிவிக்காத பொதிலும் இச் சந்திப்புக் குறித்து பல தரப்பிலும் கவனிக்கப்படுகிறது என்பதனை செய்தியாளர்கள் உறுதி செய்தனர்.
நேரம் 7:27 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Google Buzz
லேபிள்கள்: அரசியல்

ரசிகர்கள் துணையுடன் சதியை முறியடிப்பேன் - விஜய்


என் படம் ரிலீஸாகக் கூடாது, எனது கேரியரை பாழ்படுத்த வேண்டும் என சில வேண்டாக சக்திகள் சதி செய்வது எனக்குத் தெரியும். அவர்களை என் ரசிகர்கள் துணையுடன் முறியடிப்பேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். விஜய் நடித்த காவலன் படம் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் ரிலீசானது. படம் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் விஜய் நடித்த படங்களில் இது டாப் என்று விமர்சனங்களில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. படத்தின் பேனர்கள் அகற்றப்படுவதாக ரசிகர்கள் புகார்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடந்து வருவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: எனது திரையுலக வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரச்சினைகளைச் சந்தித்த பிறகு ஒரு படம் ரிலீஸாவது இதுவே முதல்முறை.
பொதுவா ஒரு படம் ரிலீஸாகும்போது சில பிரச்சினைகள் வருவது சகஜம்தான். பின்னர் அவை தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் காவலன் விஷயத்தில், பிரச்சினை தீரக்கூடாது என முடிவு செய்து பலர் வேலை செய்தனர். இந்த சதியில் பல விரும்பத்தகாத விஷ சக்திகளின் கை இருப்பது எனக்கும் தெரியும். அவர்கள் யார் என்பதும் தெரியும். ஆனால் இவர்களை எனது ரசிகர்களின் துணையுடன் நான் எதிர்கொள்வேன். அந்த வகையில் காவலன் எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்," என்றார் விஜய்

Monday, January 10

விஜய் அண்ணா... சிம்பு வாழ்த்து



ஜினி ரசிகனாகவே தன்னை எப்போதும் சொல்லிக் கொள்வார் சிம்பு. அதன் பிறகு சிம்பு நிகழ்ச்சிகளில் பேசுகையில் ரஜினிக்கு பிறகு எனக்கு விஜய் தான் பிடிக்கும். விஜய் படங்கள் பார்த்து தான் டான்ஸ் மேல எனக்கு இன்னும் ஆர்வம் வந்தது என்று சொல்லுவார். தன் படங்களை விஜய்யிக்கு போட்டு காண்பிப்பார்.


பிறகு அஜீத் ரசிகன் என்று சொன்னார். சிம்புவின் சிலம்பாட்டம் படத்தை அஜீத் குடும்பத்தோடு பார்க்க வந்ததும், சிம்பு பிறந்தநாளில் தன் மனைவி ஷாலினியோடு கலந்து கொண்டதும் இவர்களுக்குள் இருந்த ஒரு நல்ல நட்பை வளர்த்தது. அஜீத் நடிக்கும் மங்காத்தாவில் சிம்பு கௌரவ வேடத்தில் வருகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தல ரசிகர் இப்போது விஜய்க்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். அதுவும் வார்த்தைக்கு வார்த்தை விஜய் அண்ணா... விஜய் அண்ணா... என்று சொல்லியிருக்கிறார்.

பொதுவாகவே விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் உரசிக்கொள்வது வழக்கம். தல ரசிகர் தளபதி ரசிகராக இருப்பதில்லை. விஜய் ரசிகர்களும் அப்படித்தான். ஆனால் இப்போது அஜீத் ரசிகராக இருக்கும் சிம்பு விஜய்க்கு வாழ்த்து சொல்லியிருப்பது தல ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

சமீபமாக வானம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகையில், நான் பழைய சிம்பு இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு என்னை எனக்கே ரொம்ப புடிச்சிருக்கு. சினிமாவில் இன்னும் நல்ல வித்தியாசமான முயற்சிகளை செய்வேன் என்று சொல்லி அதனால் தான் இந்தப் படத்தில் பரத்துடன் சேர்ந்து நடிக்கிறேன் என்றார். தனுஷின் உத்தமப்புத்திரன் படத்தின் சிறப்புக் காட்சியிலும் சிம்பு கலந்து கொண்டு இதையே தான் சொன்னார்.

சிம்பு எழுதிய அந்த வாழ்த்தில், விஜய் அண்ணாவின் 'காவலன்' படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். நான் தல அஜீத் ரசிகன் தான். இருந்தாலும் ஒரு மசாலா படம் வெளிவந்து ரொம்ப நாளாச்சு... அது காவலன் படமாக இருக்கும் என எதிர் பார்க்கிறேன். விஜய் அண்ணாவிற்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

என்னப்பா இது புதுசாவுல இருக்கு! சமீபமாக நடந்த தல - தளபதி பர்சனல் சந்திப்பில் சிம்பு கிறங்கி போனாரோ என்னமோ!

Saturday, January 1

2011 விஜய் காலெண்டர்



Related Posts Plugin for WordPress, Blogger...