
கலைப்புலிதாணுவின் தயாரிப்பில் சீமான் இயக்கி விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் அது உறுதியில்லாமல் இருந்தது. காரணம்,ஆளும்கட்சிக்கு எதிராக இருக்கிறார் சீமான் அவர் இயக்கத்தில் நீ நடித்தால் அது நமக்குச் சிக்கல் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர்.இது சீமான் சிறைக்குப் போவதற்கு முன்பு நடந்தது கதை. சீமான் சிறையிலிருந்து வருவதற்குள் எஸ்.ஏ.சந்தரசேகரே ஜெயலலிதாவைச் சந்திக்குமளவுக்கு ஆகிவிட்டது. இதனால் இப்போது சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பது நிச்சயமாகிவிட்டது. முதலில் ஒருவரிக்கதையை மட்டும் விஜய்க்குச் சொல்லியிருந்தாராம் சீமான்.சிறையில் அதை முழுமையாக்கியவர் அண்மையில் விஜய்யைச் சந்தித்து வரிக்குவரி மொத்தக் கதையையும் சொல்லியிருக்கிறார். அதிரடி அரசியல் நிகழ்வுகளையும் கதையில் சேர்த்திருக்கிறாராம் சீமான்.
கதையை முழுமையாகக் கேட்ட விஜய்க்கு அது மிகவும் பிடித்துவிட்டதாம்.இந்தப்படத்தை நிச்சயம் செய்கிறோம் என்று உறுதியளித்த விஜய்,இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வேலாயுதம் படத்தை முடித்தவுடன் இதைத் தொடங்குவதா அல்லது அதற்கடுத்து ஏற்கெனவே ஒப்புக்கொண்ட இன்னொரு படத்தை முடித்துவிட்டு இதைத் தொடங்குவதா என்பதைச் சொல்லவிருக்கிறாராம்.
அதற்கு முன்பு சீமானுக்கு இவர் ஒரு நிபந்தனை விதித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.அது,படம் தொடங்கினால் அது முடிகிறவரை தீவிர அரசியலில் இறங்கி சிறைக்குச் செல்லும்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதுதானாம்.அதை சீமானும் ஏற்றுக்கொண்டார் என்றே சொல்கிறார்கள்.
Thursday, January 20
சீமானுக்கு விஜய் விதித்த நிபந்தனை
7:04:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment