6:49:00 PM
மூன்று முறை அதிமுக தலைமையை சந்தித்துவிட்டார் எஸ்.ஏ.சி. இன்னும் முப்பது படங்களில் நடித்துவிட்டுதான் விஜய் அரசியலுக்கு வருவார். ஆனால் நான் அதற்கு முன்பே வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார் அவர். இந்த விளக்கம், இதற்காகதான் அவர் ஜெ.வை சந்தித்தாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது மக்களிடம்.
என் பிள்ளைகளுக்கு (ரசிகர்களைதான் அப்படி சொல்கிறார்) ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி கொடுக்கிற பட்சத்தில் தன் தொண்டர்களுக்காக விஜய் குரல் கொடுப்பார் என்பதும் எஸ்.ஏ.சியின் மிக முக்கியமான ஸ்டேட்மென்ட்டாக இருக்கிறது. அப்படியென்றால் ரஜினியை போல தேர்தல் நேரத்தில் விஜய் 'வாய்ஸ்' கொடுப்பாரோ?
பிரபல வார இதழ் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கு பின் வருமாறு பதில் சொல்லியிருக்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. "விஜய் ரசிகர்களுக்கு, என் பிள்ளைகளுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது அளித்தால், அவர்களுக்கு விஜய்யின் அதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுக்காக அவர்களது வெற்றிக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். தனது தொண்டர்கள் ஜெயிக்க வேண்டும் என்று தலைவன் ஆசைப்படுவதில் தவறில்லையே!"
8:35:00 AM
தாஜ் ஹோட்டல்... அறை எண் 506... "வாங்க சார்!" என்று வரவேற்கிறது தென்றல் குரல்... அசின்!
ஷூட்டிங், மீட்டிங், டப்பிங் என்று களைப்பு, சோர்வு அனைத்தையும் மீறி மினுமினுக்கின்றன கண்கள். முகம் பார்த்து கனிவாகப் பேசத் துவங்குகிறார் அசின்!
"தமிழில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?"
"யெஸ்! 'நல்ல படமா செய்யலாம்'னு காத்திருந்ததுதான் காரணம். நடுவே, இந்தி கமிட்மென்ட்ஸ். எல்லாத்தையும் பார்த்துக்கணும் இல்லையா!
நான் கொஞ்சம் நல்ல கதையான்னு பார்ப்பேன். நமக்கு ஸ்கோப் இருக்குமான்னு சிந்திப்பேன். ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர் எல்லாம் பார்த்துதான் ஒரு படம் செய்ய முடியும். 'இந்தப் பொண்ணு நடிச்சா நம்பி வரலாம்'னு மக்கள் சொல்லணும். அதனால, அப்பப்போதான் தமிழுக்கு வருவேன்னு சொல்லலை. நல்ல வேஷம் கிடைச்சா, எப்பவும் நான் தமிழ்ப் படத்தில் நடிக்கத் தயார்!"
"அது என்ன, தமிழ்ல விஜய்கூட நடிக்க மட்டும் உங்களுக்கு நேரம் கிடைக்குது?"
" 'சிவகாசி', 'போக்கிரி'ன்னு ரெண்டு படங்கள்தான் அவர்கூட நடிச்சிருக்கேன். விஜய் எனக்கு சூப்பர் ஃப்ரெண்ட். அவர் மனைவி சங்கீதா, குழந்தைகள், அப்பா, அம்மா எல்லோரையும் எனக்குத் தெரியும். தெரிஞ்சவங்களோட, நம்மை நல்லாப் புரிஞ்சவங்களோட பழகுவதில் நமக்கு ஒரு நல்ல ஃபீல் கிடைக்குமே... அதுதான்!
சூர்யா, விக்ரம் என வாய்ப்பு கிடைக்கும்போது எல்லா ஹீரோக்களுடனும் நடிச்சுட்டுதான் இருக்கேன். கால்ஷீட், கதை செட் ஆச்சுன்னா, யார் கூடவும் நடிப்பேன்.
இப்போகூட 'காவலன்' படம் செம ஜாலியான அனுபவம். நான் டைரக்டர் சித்திக் இயக்கத்துக்கு ரசிகை. காமெடியோடு கதை சொல்வதில் இன்னிக்கு மலையாளத்தில் அவர் முக்கியமான ஆள். விஜய் ஹீரோ, சித்திக் டைரக்டர், 'பாடிகார்ட்' கதை. நானே பல தடவை பார்த்து ரசித்த படம். இந்த வாய்ப்பை மறுக்க முடியுமா?"
"சல்மான் கூட இந்தி 'ரெடி' எப்படி வந்திருக்கு?"
"சல்மான் இப்ப இந்தியில் டாப் மோஸ்ட் ஆக்டர். இரண்டே வெற்றிகளில் ரொம்ப உயரத்துக்குப் போயிட்டார். 'ரெடி' படத்தில் எனக்கு அவர்கூட சரி சமமா மல்லுக்கு நிற்கிற கேரக்டர். ரொம்ப சூப்பரா வந்திருக்கு. உங்களைவிட, ஆர்வமா நானே அந்தப் பட ரிலீஸை எதிர்பார்த்துட்டு இருக்கேன்!"
"இங்கே ஸ்ரேயாவும், த்ரிஷாவும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். உங்களுக்கு அப்படி எல்லாம் யாரும் இல்லையா?"
"என்னுடன் யாருமே சேர்ந்து நடிச்சது இல்லையே? எங்கேயாவது, ஏர்போர்ட், நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொண்டால் 'ஹலோ... ஹவ் ஆர் யூ?' அவ்வளவுதான். நேரமே இல்லாமல் இருக்கேன். கொஞ்சம் லீவு கிடைச்சா, உடனே சொந்த ஊருக்குப் போய் அம்மா மடியில் படுத்துக்குவேன். இப்பக்கூட, த்ரிஷாவுக்கு போன் பண்ணி, 'விண்ணைத் தாண்டி வருவாயா' பிரமாதமாப் பண்ணி இருக்கீங்கன்னு விஷ் பண்ணினேன்!"
"உங்களுக்கு 'விண்ணைத்தாண்டி வருவாயா' பிடிச்சு இருந்ததா?"
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அந்தப் படத்தில் நான் நடிச்சு இருக்க வேண்டியது. என்னிடம் கௌதம் கதை சொன்னார். 'கிறிஸ்டியன் மலையாளி கேர்ள்' இன்ஸ்பிரேஷன்கூட என்னிடம் இருந்து வந்ததுதானாம். பாருங்க, அப்பா பெயர்கூட ஜோசப்னு வெச்சு இருக்கார். ஏதேதோ காரணங்களால் தட்டிப்போயிருச்சு வாய்ப்பு. என்னிடம் சொன்னபடியே ரொம்ப அழகா எடுத்திருக்கார் கௌதம். ஒரு படத்தை சின்னக் கதையோடு அவர் கொண்டுபோகிற விதம் பிடிச்சு இருக்கு!"
"அப்படி ஒரு காதல்... கல்யாணம்?"
"என்னங்க இப்போ அவசரம்? இன்னும் கொஞ்சம் நடிப்போம். 'அசின் அருமையான ஆர்ட்டிஸ்ட்'னு இன்னும் நல்ல பேர் வாங்கிட்டு, அப்புறமா 'பை பை' சொல்லுவோமே. சரியா?"- தலை சாய்த்துக் கேட்கிறார் அசின்.
3:32:00 PM
தேர்தல் நேரத்தில் எங்கு போய் ஒளியலாம் என்று பெரிய நடிகர்கள் எல்லாரும் இப்போதே பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் ரஜினி என்கிறார்கள். ராணா படத்திற்காக அந்த நேரத்தில் எங்காவது டூயட் பாடிக் கொண்டிருப்பாராம் ரஜினி. இவராவது பொதுவானவர். யார் வலையிலும் சிக்கிவிடக் கூடாது என்று ஒளிந்து கொள்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் தனது படம் தடுக்கப்பட்டதற்கு காரணமே அரசியல்வாதிகள்தான் என்று காரசாரமாக பேட்டியெல்லாம் கொடுத்த விஜய் மனசிலும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக சொல்லப்படுவதுதான் 'ஐயே' ரகம்!
இப்பவே விஜய் ஒரு எண்ணத்திலும், அவரது அப்பா ஒரு எண்ணத்திலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இழுபறியின் காரணமாகதான் அவர் இன்னும் அதிமுக பொதுச்செயலார் ஜெயலலிதாவை சந்திக்காமல் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இலங்கை ராணுவத்தினரால் பந்தாடப்படும் மீனவர்களுக்கு ஆதரவாக விஜய் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தினாலும், தேர்தல் நேர சுற்றுப்பயணம் மட்டும் இருக்கவே இருக்காது என்கிறார்கள் விஜய் தரப்பில்!
இதை தவிர்க்கதான் வெளிநாடு ட்ரிப் அடிக்கப் போகிறாராம் விஜய். கழுவுற மீனுல நழுவுற மீனா இருக்கறதுதானே நல்லது!
2:14:00 PM

த்ரீ இடியட்ஸ்’ஸில் அமீர்கானும், மாதவனும் இணைந்து நடித்திருந்தார்கள்.‘நண்பன்’னில் மாதவனுக்குப் பதிலாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இன்னொரு நண்பனாக ஜீவா. கதாநாயகியான இலியானாவின் தந்தையாக பேராசிரியர் வேடத்தில் சத்யராஜ் வருகிறார். கோவையில் நடைபெற்ற ‘நண்பன்’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றோம்.உள்ளே பிரதமர் இருக்கிறாரோ என்ற அளவில் ஏக கெடுபிடி. சஃபாரி அணிந்த செக்யூரிட்டிகள் வாசலிலே தடுத்து நிறுத்துகிறார்கள்.இருந்தாலும் குமுதம் வாசகர்களுக்காக ஒரு எக்ஸ்குளுசிவ் ரிப்போர்ட். காட்சி இதுதான்: ஜீவாவும் ஸ்ரீகாந்தும் ஒரு காரில் வந்து திருமணக் கோலத்திலிருக்கும் இலியானாவைக் கடத்த வேண்டும்.ஷங்கர் பரபரப்பாய் படமாக்கிக் கொண்டிருந் தார். மூன்று நண்பர்களில் விஜய் திடீரென்று மாயமாகிப் போக அவரைப் பற்றி தகவல் அறிந்துகொள்ள விஜய்யின் காதலியான இலியானாவைத் தேடி ஜீவாவும், ஸ்ரீகாந்தும் வர, அங்கு திடீர் திருப்பமாக இலியானாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
வடஇந்திய முறைப்படியான திருமணத்திற்கு பிரமாண்ட வெள்ளை துணிப் பந்தல் போடப்பட்டு ஏகப்பட்ட மார்வாடிகளை அழைத்து வந்து உட்கார வைத்திருந்தார்கள்

மணப்பெண்ணை கடத்துவதற்காக முகத்தில் மல்லிகைப் பூக்களால் மறைத்துக்கொண்ட தலைப்பாகை அணிந்தபடி ஜீவா, மாப்பிள்ளையாக மேடையில் அமர்ந்து இலியானா காதில் ஏதோ ரகசியம் சொல்ல, ஜீவா சொன்னதைக் கேட்டு இலியானா திடுக்கிட்டுப் போகிறார்.இது முதல் ஷாட்.ஷங்கர் ஏன் இத்தனை பெரிய இயக்குநராய் இ ருக்கிறார் என்பதற்கு அந்தக் காட்சியை படமாக்கிய விதத்தில் தெரிந்தது. அத்தனை சிரத்தை. ஒவ்வொருவர் முகபாவம், அசைவுகள் என மிக நுணுக்கமாய் பார்க்கிறார்.
அடுத்த காட்சி,ஜீவா மீது சந்தேகம்கொள்ளும் சத்யராஜ் அவரது மல்லிகை அலங்காரத்தை விலக்கி முகத்தைப் பார்ப்பது, உடனே ஜீவா, இலியானாவை இழுத்துக்கொண்டு காருக்கு ஓடுவது.
காரை ஸ்ரீகாந்த் ஓட்டுவதாக காட்சி எடுத்துக்கொண்டிருந்தபோது வேக வேகமாய் வந்த ஜீவா காரின் மீது மோதி நிஜமாகவே கீழே விழ, ‘கட்’ என்று கேமரா நிறுத்தப்பட்டது.வலியை மறைத்தபடி ‘ஒன்றுமில்லை சார்’என்று ஷங்கரிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஓடி வந்து காரில் பரபரப்பாக ஏறிக்கொண்டார். தொழில் பக்தி

அழகுப் பதுமையான இலியானாவிடம் ஜீவா காதில் ரகசியம் சொல்லும்போது இலியானா முகத்தைப் பார்த்து ஜீவா சிரித்துவிட. பிறகு மீண்டும் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. அப்படி என்ன ரகசியம் சொன்னாரோ ஜீவா. விஜய்யின் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட-வில்லை. அவர் தொடர்பான காட்சிகள், கோவை, பொள்ளாச்சி, ஊட்டி பகுதிகளில் எடுக்கப்பட இருப்பதாக யூனிட் ஆட்கள் பேசிக்கொண்டார்கள்.சில பிரச்னைகளுக்குப் பிறகு விஜய் மீண்டும் நண்பனில் ஹீரோவாகியிருப்பதில் யூனிட் ஆட்களுக்கு மகிழ்ச்சி.
இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் யாரும் படத்தைப் பற்றி பேசக்கூடாது என்று உத்தரவாம். எல்லோரும் கப்சிப். தன் படம்தான் பேசவேண்டும் என்று நினைப்பவராயிற்றே ஷங்கர்
2:00:00 PM
இந்தத் தகவலைக் கேட்டபோது நம்ப மறுத்தது மனசு. ஆனால் சொன்னவர் படத்தின் முக்கியமான ஒரு நிர்வாகி என்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை.நடக்கிறதோ இல்லையோ... இப்போது அதற்கான முயற்சிகள் ஒரு முக்கிய கட்டத்துக்கு வந்திருப்பதாகத் தெரிவதால் இந்தத் தகவலை காதில் போட்டு வைக்கிறோம். தனது பொன்னியின் செல்வன் படத்தில் இசைஞானியையும், இசைப்புயலையும் இணைய வைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம் இயக்குநர் மணிரத்னம். வந்தியத் தேவனாக விஜய், பொன்னியின் செல்வனாக விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தின், தலையாய பாத்திரமான ஆதித்த கரிகாலன் வேடத்தில் விஷால் நடிப்பதாக இப்போதைக்கு முடிவாகியுள்ளது. உத்தம சோழன் எனும் பாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவைத் தேர்வு செய்து, அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளனர். நடிகர்களில் இத்தனைப் பேரையும் சந்தித்துப் பேசி, ஒரு வழியாக ஒப்புக் கொள்ள வைத்தாலும், கதாநாயகி தேர்வுதான் பெரும் சவாலாக உள்ளதாம்.
இன்னொரு பக்கம் டெக்னிகலாக இந்தப் படம் இந்தியாவின் தலைசிறந்த படைப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் மணிரத்னம், முதல் கட்டமாக இசைத் துறையின் சிகரங்களான இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானை இந்தப் படத்தில் இணைய வைக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.
பாடல்களுக்கான இசை ஒருவர், பின்னணி இசை மற்றொருவர் என்றில்லாமல், இரண்டையுமே இருவரும் இணைந்து செய்ய வேண்டும் என்று மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளாராம். இருதரப்பிலிருந்தும் இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்பதால், நகம் கடித்தபடி காத்திருக்கிறார் மணிரத்னம்.
இந்த புராஜெக்டில் பெரிய ஆறுதல் ஒன்றுண்டு... அது, படத்துக்கு வசனம் சுஹாஸினி அல்ல.. ஜெயமோகன்
2:20:00 AM
2010-ல் 150 தமிழ்ப் படங்கள் வந்தன. அவற்றில் 90 சதவீதம் தோல்விப் படங்கள்... ஜெயித்தவையோ குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் தயாரித்த படங்கள் மட்டுமே! 2011-லாவது இந்த நிலை மாறுமா என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் ஆரம்பமே அவர்களுக்கு பெரும் தடுமாற்றமாக உள்ளது. புத்தாண்டு தொடங்கி, கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 16 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அடுத்து வரும் பிப்ரவரி 18-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் நடுநிசி நாய்கள், ஆடுபுலி, காதலர் குடியிருப்பு மற்றும் மார்கழி 16 ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இவற்றையும் சேர்த்தால் ஒன்றரை மாதங்களில் 20 படங்கள் கணக்கு வருகிறது. இவற்றில் இதுவரை வெளியான 16 படங்களின் பாக்ஸ் ஆபீஸ் முடிவு என்று பார்த்தால், பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வெற்றிப் படங்கள் என்று பார்த்தால் காவலன் மட்டுமே மிஞ்சுகிறது. யுத்தம் செய், பயணம் ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லை என்ற ரகம்தான். மீதிப் படங்கள் அனைத்துமே பப்படமாகியுள்ளன.
இப்போது வெளியாகவிருக்கும் நான்கு படங்களிலும் கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள் மட்டுமே ஓரளவு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அது கூட கவுதம் மேனன் திட்டமிட்டு செய்துவரும் விளம்பரங்களால். அது எந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என்பது படம் வந்த பிறகு வெளிச்சமாகிவிடும். அப்போது இந்த எதிர்ப்பார்ப்பும் இருக்குமா என்பது சந்தேகமே.
ஏன் இந்த நிலை தொடர்கிறது?
"பெரும்பாலான இயக்குநர்களுக்கு சொந்த சரக்கில்லை. சமீபத்தில் வெளி வந்த ஒரு த்ரில்லர் படம், மூன்று ஆங்கிலப் படங்களின் அப்பட்டமான தழுவல். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது. எந்த ஹாலிவுட் படமாவது தமிழ்நாட்டுப் படத்தை... அட குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக் கதையை மையப்படுத்தி வந்துள்ளதா... ஆனால் 90 சதவீத தமிழ்ப் படங்கள் ஹாலிவுட் / கொரிய / ஜப்பானிய/ மெக்சிகன் படங்களின் அப்பட்டக் காப்பியாகவே இருக்கின்றன. இப்படி அந்நியமாக உள்ள கதைகள் எங்கே மக்களைச் சென்று சேரப்போகின்றன", என்கிறார் பிரபல விநியோகஸ்தர் -கம்- தயாரிப்பாளர் ஒருவர்.
சொந்த சரக்குதான் சினிமாவாகணும்னா, வருஷத்துக்கு இரண்டு டஜன் படங்கள் தேறுவதே கடினமாச்சே!!
2:27:00 PM
ஏக உற்சாகத்திலிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வரும் பிப்ரவரி 22-ம் தேதி மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் நடத்தும் போராட்டத்தில் விஜய் பங்கேற்பதோடு, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதலும் உதவியும் வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளனர். இப்போதே தமிழகம் முழுக்க உள்ள மன்றங்கள் போராட்டத்துக்கு ஆள்சேர்ப்புப் பணியில் இறங்கியுள்ளனர். மக்கள் பிரச்சினையில் விஜய் களமிறங்கும் முதல் போராட்டம் என்பதால், ஆட்சியாளர்களை மிரள வைக்கும் அளவுக்கு பலம் காட்ட, பல ஊர்களிலும் உள்ள லோக்கல் பிரமுகர்களிடம் பேசி வருகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள். அவசியமாக இருந்தால் விஜய்யின் தந்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறாராம். இன்னொரு பக்கம் விஜய்யின் இந்தப் போராட்டத்துக்கு ரசிகர்கள் கணிசமான அளவு குவிந்து விடாமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்து போலீசாருக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாக விஜய் தரப்பிலிருந்தே சொல்கிறார்கள்.
"இது உண்மையா... அல்லது அப்படி ஒரு திட்டம் ஆட்சியாளர்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அம்பலப்படுத்தி போராட்டத்துக்கான தடைகளை அகற்றும் உத்தியா என்று தெரியவில்லை", என்கிறார்கள் விமர்சகர்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே, அதிமுகவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டையும் விஜய் அறிவிப்பார் என்கிறார்கள். பார்க்கலாம்!
2:23:00 AM
நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்பு கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் பொள்ளாச்சி வந்த நடிகர் விஜய் “காவலன்” படம் திரையிடப்பட்டுள்ள துரைஸ் தியேட்டருக்கு வந்தார். அவரை தியேட்டர் உரிமையாளரும், பொள்ளாச்சி வர்த்தக சபை தலைவருமான ஜி.டி. பாலகிருஷ்ணன் மலர் கொடுத்து வரவேற்றார். பின்னர் விஜய் தியேட்ட ருக்குள் சென்று ரசிகர் முன் தோன்றினார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவரை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். நிறைய ரசிகர்கள் விஜய்யுடன் கைகுலுக்க முண்டியடித்தனர். சில ரசிகர்கள் விசில் அடித்து துள்ளி குதித்தனர். அவர்களிடம் காவலன் படம் பற்றி விஜய் கேட்டார். படத்தில் குத்துபாட்டு இல்லையே என்று சிலர் குறைபட்டனர். உங்கள் குறையை எனது அடுத்தபடமான வேலாயுதம் தீர்த்து வைக்கும் என்று விஜய் பதில் அளித்தார்.
மேலும் விஜய் பேசும் போது நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங் கண்ணா... சொல்லுங் கண்ணா... என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்ற ஊர்களில் படப்பிடிப்பின் போது கூட்டத்துக்காக ஜுனியர் நடிகர்களை பயன் படுத்துவோம்.
ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் தான் அந்த ஊர்மக்கள் ஜுனியர் நடிகர்களாக நடிப்பார்கள். பொள்ளாச்சி மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். உடனே ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் விஜய் நற்பணி மன்ற நகர தலைவர் குட்டப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அ.தி.மு.க.வினரும் விழாவில் பங்கேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணாடி மணி, அருணா சலம், ஊஞ்சவேலாம்பட்டி தலைவர் சின்னு என்கிற முருகானந்தம் ஆகியோர் விஜய்யை சந்தித்து சால்வை அணிவித்தனர்.
3:10:00 AM

நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்பு கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் பொள்ளாச்சி வந்த நடிகர் விஜய் “காவலன்” படம் திரையிடப்பட்டுள்ள துரைஸ் தியேட்டருக்கு வந்தார். அவரை தியேட்டர் உரிமையாளரும், பொள்ளாச்சி வர்த்தக சபை தலைவருமான ஜி.டி. பாலகிருஷ்ணன் மலர் கொடுத்து வரவேற்றார்.
பின்னர் விஜய் தியேட்ட ருக்குள் சென்று ரசிகர் முன் தோன்றினார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவரை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். நிறைய ரசிகர்கள் விஜய்யுடன் கைகுலுக்க முண்டியடித்தனர். சில ரசிகர்கள் விசில் அடித்து துள்ளி குதித்தனர். அவர்களிடம் காவலன் படம் பற்றி விஜய் கேட்டார். படத்தில் குத்துபாட்டு இல்லையே என்று சிலர் குறைபட்டனர்.
உங்கள் குறையை எனது அடுத்தபடமான வேலாயுதம் தீர்த்து வைக்கும் என்று விஜய் பதில் அளித்தார். மேலும் விஜய் பேசும் போது நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங் கண்ணா... சொல்லுங் கண்ணா... என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்ற ஊர்களில் படப்பிடிப்பின் போது கூட்டத்துக்காக ஜுனியர் நடிகர்களை பயன் படுத்துவோம்.
ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் தான் அந்த ஊர்மக்கள் ஜுனியர் நடிகர்களாக நடிப்பார்கள். பொள்ளாச்சி மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். உடனே ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் விஜய் நற்பணி மன்ற நகர தலைவர் குட்டப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அ.தி.மு.க.வினரும் விழாவில் பங்கேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணாடி மணி, அருணா சலம், ஊஞ்சவேலாம்பட்டி தலைவர் சின்னு என்கிற முருகானந்தம் ஆகியோர் விஜய்யை சந்தித்து சால்வை அணிவித்தனர்.
4:30:00 PM
அண்மையில் கலைமாமணி விருதுகள் மாநில அரசால் அறிவிக்கப்பட்டன. அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகர், நடிகையர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஏதாவதொரு பெயரில் நடிகர், நடிகையர் பங்கேற்கும் விழாக்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் தொலைக் காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பாகின்றன. அதுவும் பல பாகங்களில் சின்னத்திரையில் மின்னுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமை சன் டிவி அல்லது கலைஞர் டி.வி. க்களுக்கு கிடைக்கின்றன. அவர்களுக்குக் கொள்ளை லாபம் இதில் கிடைக்கிறது. கலைமாமணி விருது வழங்கும் விழாவும் இந்தத் தொலைக்காட்சிகளில் ஒன்றிற்கே கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த நிகழ்ச்சிக்கு இப்போதைய நடிகைகளையும் வரவைக்க வேண்டுமே... விருது கொடுத்தால் அவசியம் வருவார்கள். இதனால்தான் மூன்றே மூன்று தமிழ்ப்படங்களில் நடித்துள்ள அனுஷ்கா கலைமாமணி ஆகிவிட்டார்.
அஜித்துக்கு அல்வா:
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும்படி எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அனைவரின் முன்பாக மேடையிலேயே பேசி அதிர வைத்த ‘தல’ அஜித், இதுவரை கலைமாமணி விருதுப்பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ள விஜய்க்கு கடந்த ஆண்டுதான் தரப்பட்டது. அனுஷ்காவிற்கு கலைமாமணி விருது என்பது ஒளிபரப்பு, விளம்பரம் ஆகியவற்றை மனதில் கொண்டே வழங்கப்பட்டுள்ளது என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முதல்வரைக் குளிரவைக்கும் வகையில் திரையுலகத்தினர் மேடையில் புகழ்ந்து தள்ளுகிறார்கள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும் உண்மையில் குமுறல்கள்தான் அதிகமாக உள்ளன. முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கதவை தொலைக்காட்சி நிறுவனத்தினர் அண்மையில் தட்டியிருக்கிறார்கள். என்ன என்று கேட்டதற்கு, வாழ்த்துச் செய்தி வாங்க வந்தோம் என்று வழிந்திருக்கிறார்கள். கண் சிவந்த ரஜினி, இடத்தைக் காலி செய்யுமாறு அவர்களிடம் கூறினார். பின்னர், நிறுவனத்தினர் பேசி வாழ்த்துச் செய்தியை வாங்கினார்கள்.
கிலி பிடிக்க செய்த விஜய்:
தனது படத்திற்கு முட்டுக்கட்டை போட்டதால் ஆளுங்கட்சியினரைக் கிலி பிடிக்கச் செய்து வருகிறார் விஜய். விழாக்களுக்கு வந்து மேடையில் ஆட முடியாது என்று சொல்வதால் ஏற்கெனவே வேண்டாதவராகி விட்டார் அஜித். இந்த மூவர்தான் திரையுலகில் இன்று கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பவர்கள். இதோடு, பணத்தைப் போட்டு படத்தை எடுத்துவிட்டு வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் பலர் என்று அரசுக்கு எதிரான மனப்பான்மையுடன் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்
நன்றி: www.maattru.com
1:40:00 PM
பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பது நூறு சதவீதம் உறுதியான விஷயமாகிவிட்டது. விஜய்தான் படத்தின் ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட வந்தியத் தேவன் பாத்திரத்தில் நடிக்கப் போகிறார் அவர். பொன்னியின் செல்வன் எனப்படும் ராஜ ராஜ சோழன் பாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்தபர் படத்தின் முக்கிய பாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனைவருமே மணிரத்னத்தின் இந்தப் படத்தில் தாங்கள் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யாரும் எதிர்ப்பார்க்காத முக்கிய வேடத்தில் விஷால் நடிக்கிறாராம். அநேகமாக அது ஆதித்த கரிகாலன் வேடமாக இருக்கும் என்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது. படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில் செய்திகள் வந்தன. இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள். மணிரத்னத்தின் ராவணன் படம் தயாரித்து நஷ்டப்பட்டவர்கள் பிக் பிக்சர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இப்படத்தில் விஜய் நடிப்பது வதந்தி என முன்னர் கூறப்பட்டது நினைவிருக்கலாம்
2:53:00 PM
நண்பன் படத்தின் இசையமைப்புக்காக லண்டன் செல்கிறார்கள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் படத்தின் இயக்குநர் ஷங்கரும். நண்பன் படம் அமீர்கானின் 3 இடியட்ஸ் தழுவல் என்றாலும், இந்தப் படத்துக்கு ஒரிஜினல் ஸ்கோர் வேண்டும் என்பதில் ஷங்கர் தெளிவாக உள்ளார். பொதுவாக ஷங்கர் - ரஹ்மான் கூட்டணியின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும். ரஹ்மான் இல்லாமல் ஹாரிஸுடன் ஷங்கர் பணியாற்றிய அந்நியன் பாடல்கள் ஹிட் என்றாலும், ஷங்கரின் மற்ற படங்கள் அளவுக்கு பேசப்படவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும் என்று கூறியுள்ளார் ஹாரிஸ். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள ட்விட்டர் செய்தியில், "இந்த முறை நண்பன் படத்துக்காக ஷங்கருடன் லண்டன் போகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக இந்தப் பட பாடல்கள் அமையும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். நண்பன் படத்தில் விஜய், ஜீவா, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் என 5 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். ஜெமினி நிறுவனம் தயாரிக்கிறது.
அத்துடன் ரஜினியை ஷங்கர் வெளிநாட்டில் சந்திப்பதாகவும் கிசுகிசுக்க படுகிறது
1:40:00 AM
Vijay in USA, Vijay @ Kaavalan Trailer Launch in US stills, Vijay at Bay Area stills, Vijay Kavalan trailer launch function at San Francisco Bay Area photo gallery, Vijay at Bay Area US Images, Vijay @ Bay Area pictures, wallpapers