இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, February 2

விஜய்-கார்த்தி போட்டா போட்டி பரபரப்பான போஸ்டர் யுத்தம்!

சென்னையின் மையப்பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் இரு போஸ்டர்கள் ரசிகர்களைSiruthai கீழ்பாக்கத்திற்கே கொண்டு போய் விட்டு விடும் போலிருக்கிறது. ஒன்று சிறுத்தை போஸ்டர். மற்றொன்று காவலன் போஸ்டர்.

பொங்கல் ஜல்லிக்கட்டில் முதலிடத்தில் நாங்கதான்.... என்று அச்சிட்டிருந்தார்கள் இரு போஸ்டர்களிலும். அதிலும் சிறுத்தை போஸ்டரில் கால் கால் போட்டுக் கொண்டு கம்பீரமாக அறிவித்துக் கொண்டிருந்தார் கார்த்தி. வேடிக்கை என்னவென்றால் போஸ்டர் ஒட்டும் குறும்பர்கள் இரண்டையும் அருகருகே ஒட்டிவிட்டு சென்றதுதான். நெசமா சொல்லுங்க. யாருதான்யா முதல்ல இருக்காங்க என்று ரசிகர்களே விவாதித்துக் கொள்கிற அளவுக்கு விவகாரத்தை கிளப்பியது போஸ்டர். தீர்ப்பை இப்போதைக்கு தள்ளிப் போட்டுவிட்டு விஷயத்துக்கு வருவோம்.

கார்த்தியின் அடுத்தப்பட இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி இன்னும் சுடSiruthai சுட அப்படியே இருக்கிறது. இடையில் பொம்மரிலு பாஸ்கர் என்ற தெலுங்குப்பட இயக்குனர் கார்த்தியிடம் கதை சொல்லியிருந்தார். அவருக்குதான் அடுத்த படம் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது ஆட்டத்தை குளோஸ் பண்ணி அனுப்பிவிட்டார்களாம் கார்த்தி தரப்பிலிருந்து. காரணம் இவர் இயக்கி தெலுங்கில் வெளிவந்த ஆரஞ்ச் ரெண்டே நாளில் வெளுத்துப் போனதுதான்!

இவரது சேரில் இப்போது உட்கார்ந்து கார்த்தியுடன் கதைத்துக் கொண்டிருப்பவர் கருணாகரன் என்ற இயக்குனராம். இவரும் தெலுங்கில் முக்கியமான இயக்குனர்தான். அடிப்படையில் தமிழரான இவர் பவன் கல்யாண் நடிப்பில் ஆனந்த மழை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தெலுங்கர்களை கவர்ந்தவர். அநேகமாக இவருடைய இயக்கத்தில்தான் கார்த்தி அடுத்த படத்தில் நடிப்பார் என்று கிசுகிசுக்கிறார்கள்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...