இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, February 29

சந்தோஷ்சிவனுக்கு விஜய் கால்ஷீட்!


'நண்பன்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி. எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.


முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய் 'துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து தனது கால்ஷீட் தேதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார்.


இப்படத்தினை யார் தயாரிக்க இருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை

Friday, February 24

பெப்சி பிரச்சினைக்கு மத்தியில் விஜய்யின் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது!

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.

Thuppaki Movie

இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், பெப்சி - தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவுக்கு வராததால் அனைத்து படப்பிடிப்புகளும் நின்றுபோய், கோடம்பாக்கமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது.

Wednesday, February 15

துப்பாக்கியில் விஜய்க்கு வில்லனா?



'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.

ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.

'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.

சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !

Tuesday, February 14

விஜய்-விக்ராந்த்தின் பாட்டி மரணம்!

ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.
Lalitha Neelakandan


லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.

பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.

அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Monday, February 13

துப்பாக்கி முன் குறும்படம்!

விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சிக்கும் ஏற்பட்ட பிரச்னையால் 'துப்பாக்கி' படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் 'நண்பன்' படத்தினை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வருகிறார்.

இந்த நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு குறும்படத்தினை இயக்க முடிவு செய்து இருக்கிறார்.

முருகதாஸ் தன் வீட்டிற்கு வெளியே வாக்கிங் சென்ற போது ஒரு காதலர் ஜோடி பேசி கொண்டு இருந்தார்களாம். அவர்கள் பேசியதை கேட்டு திடுக்கிட்டவர், உடனே காதலர்களை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.

அந்த குறுபடத்திற்காக பள்ளியில் படிக்கும் மாணவன் - மாணவியை தேடி வருகிறார். குறும்படத்திற்கு ஏற்றவாறு நடிகர்கள் கிடைத்துவிட்டால் 10 நிமிட குறும்படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

'துப்பாக்கி' படத்தினை பொறுத்தவரை பெரும் அளவு படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது. இதற்கான 2 பாடல்களையும் முடித்து கொடுத்து இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Sunday, February 12

சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய்

Vijay சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. விரைவில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன், என்றார் நடிகர் விஜய்.

மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றிப் பேசினார்.

பின்னர் மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள ஷைன் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கினார் விஜய்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.

நண்பன் படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.

நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.

தற்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

வேலாயுதம் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கிடைத்தது விருது.


கொலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு எடிசன் விருதுகள் வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது.
இதில் சிறந்த நடிகருக்கான ரஜினி விருது, வேலாயுதம் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கிடைத்தது. ராகவா லாரன்ஸ் இவ்விருதை விஜய்க்கு வழங்கினார்.
சிறந்த நடிகைக்கான விருது மயக்கம் என்ன நாயகி ரிச்சாவிற்கு வழங்கப்பட்டது. வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவுக்கும் விருது கிடைத்தது.
நடிகர்கள் ஜெயம் ரவி, மகத் ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பிரேம்ஜிக்கு கிடைத்தது.
கொலிவுட்டின் சிறந்த பாடலாக தனுசின் கொலை வெறி பாடல் தெரிவு செய்யப்பட்டது. தனுசின் மனைவி ஐஸ்வர்யா விருதை பெற்றார்.
இதையடுத்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஹாரீஸ் ஜெயராஜ்க்கும், குணசித்திர நடிகை விருது கோவை சரளாவுக்கும், துணை நடிகருக்கான விருது சரவணனுக்கும் வழங்கப்பட்டன.
சிறந்த வில்லன் நடிகர் விருதை ஆர்.கே. பெற்றார். பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்த பேபி சராவுக்கும் விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை மௌனகுரு இயக்குனர் சாந்தகுமார் பெற்றார்.

Friday, February 10

துப்பாக்கி விஜய், எப்பூடி...காஜல் குஷி

Kajal Agarwalநடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.

நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் ஒப்பந்தமாகி ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

ஏற்கனவே தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவுடன் நடித்த பெருமிதத்தில் இருந்த காஜல் அடுத்து நம்ம இளைய தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அப்புறம் அவர் குஷியாக இருக்க மாட்டாரா என்ன. மாற்றான் ஷூட்டிங் முடிந்த கையோடு விஜயுடன் நடிக்க சென்றுவிட்டார் காஜல்.

ஏய், பார்த்தியா முதலில் சூர்யாவுடன் நடித்தேன். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தற்போது கோலிவுட்டின் இன்னொரு முன்னணி ஹீரோவான விஜய்யுடன் நடிக்கிறேன். இதெல்லாம் நான் செய்த பாக்கியம் தான் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பூரிக்கிறாராம்.

பத்திரிக்கை பிரச்சனைக்குப் பிறகு காஜலின் மார்க்கெட் சரியும் என்று நினைத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அது இப்போதைக்கு சரியாது என்றுதான் தெரிகிறது...!.

Thursday, February 9

பிடிச்சதை செய்யுங்க ! : விஜய்



ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பலர் நடித்து வெளியானது 'நண்பன்'.

விஜய் தற்போது நடித்து வரும் ' துப்பாக்கி ' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திரையரங்குகளுக்கு சென்று நண்பன் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார்.

' நண்பன் ' படத்தினை விளம்பரப்படுத்த மதுரை சென்ற விஜய் அங்கு நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்கள் முன்னிலையில் பேசினார்.

அப்போது " என்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன். இந்த படத்தை வெற்றி பெற செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு மனிதனுக்கு எதிர்பாராதவிதமாக பெற்றோர் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'நண்பன்' இல்லாமல் இருக்க முடியாது. அந்த கருத்து இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எனது ரசி்கர்களுக்கும் நான் அதைத்தான் கூறுவேன். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்யுங்கள். அதில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.

என்னை டாக்டர் ஆக்க என் அப்பா விரும்பினார். ஆனால் எனக்கோ சினிமாவின் மீது ஆர்வம் அதிகம் இருந்ததால் வீட்டில் சண்டைபோட்டு இந்த துறைக்கு வந்தேன். இப்போது இந்த துறையில் வெற்றியும் பெற்று இருக்கிறேன் " என்று பேசினார்.

Sunday, February 5

விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' திடீர் நிறுத்தம்

நடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் "துப்பாக்கி" என்ற படத்தை இயக்கி வந்தார்.

பெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் மகன் படமே படப்பிடிப்பைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெப்சி தொழிலாளர்களிடையே கேலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Wednesday, February 1

இனி மொழிமாற்றம் படங்களை இயக்கமாட்டேன்: ஷங்கர்



இனிமேல் மொழிமாற்றுப் படங்களை இயக்கமாட்டேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படம் வெளியாகி, வெற்றியடைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மொழிமாற்றமாகும். இனிமேல் மொழிமாற்றுத் திரைப்படங்களை இயக்கமாட்டேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பி்ல் சங்கர் கூறியதாவது, ஹிந்தியில் தயாரான 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் நண்பன் பெயரில் மொழிமாற்றம் செய்தது பெரிய சவாலாக இருந்தது.
உண்மைப்படத்தின் தன்மைகள் கெடாதவாறு படத்தை எடுக்கவேண்டும் என்று விஜய்யிடம் கேட்டேன். விஜய் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமாக நடித்துக் கொடுத்தார்.
3 இடியட்ஸ் திரைப்படத்தை விட நண்பன் திரைப்பட பாடல்கள் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள்.
மொழிமாற்றுத் திரைப்படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இனிமேல் மொழிமாற்று திரைப்படங்களை இயக்கமாட்டேன்.
நான் தயாரித்து பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன்.தற்போது அடுத்து தயாரிப்பதற்காக ஓர் நல்ல கதையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
நிறைய கதைகள் மனதில் உள்ளது, அடுத்த படம் எனது சொந்தக சிந்தனைக் கதையாகவே இருக்கும்.மார்ச் மாதத்தில் எனது அடுத்த திரைப்படம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்

Related Posts Plugin for WordPress, Blogger...