இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Sunday, February 12

சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய்

Vijay சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. விரைவில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன், என்றார் நடிகர் விஜய்.


மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றிப் பேசினார்.

பின்னர் மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள ஷைன் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக் தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கினார் விஜய்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.

நண்பன் படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.

நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.

தற்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...