இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, March 28

அஜீத்=கமல்.. விஜய்=ரஜினி? இயக்குனர் = ம்ஹூம்!

ரஜினி - கமல் நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படம் மறுபடியும் தயாராக இருக்கிறது என்றும், அப்படத்தில் அஜீத் - விஜய் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


ரஜினி - கமல் நடித்து கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படம் 'நினைத்தாலே இனிக்கும்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. 


'நான் அவன் இல்லை' படத்தினை ரீமேக் செய்து வெளியிட்டார் இயக்குனர் செல்வா. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.


'அமராவதி' படத்தின் மூலம் அஜீத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்  இயக்குனர் செல்வா. அவர்  'நினைத்தாலே இனிக்கும்' ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்றும், கமல் வேடத்தில் அஜீத்தும், ரஜினி வேடத்தில் நடிக்க விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.


இது குறித்து செல்வா " இச்செய்தி முழுக்க முழுக்க தவறாகும். நான் அஜீத்தை சமீபத்தில் சந்திக்கவில்லை. சந்தித்தால் தானே நாங்கள் நினைத்தாலே இனிக்கும் படம் குறித்து பேசி இருப்போம் " என்று தெரிவித்து இருக்கிறார்.


இதைப் போலவே சென்ற ஆண்டு' ஷோலே' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜீத் - விஜய் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 27

உருமி'க்குப் பின் 'துப்பாக்கி' !


ஒளிப்பதிவாளராக இருந்த சந்தோஷ் சிவன் இயக்குனராக உருவாக்கிய படம் 'உருமி'. மலையாளத்தில் 'உருமி' படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தமிழில் அதே பெயரில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். சுமார் 30 கோடி செலவில் தயாரான 'உருமி' படத்தின் தமிழ் பதிப்பின் உலக விநியோக உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கி இருக்கிறார்.
தமிழகத்தை ஆண்ட அன்றைய மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னனின் வீர தீர பெருமைகளையும், அவனது கடல் ஆதிக்கத்தையும் கூறும் படமாக அமைந்திருக்கிறதாம் 'உருமி'. 'உருமி' படத்தினை அவர் ஒரு பொழுதுபோக்குப் படமாக மட்டும் இல்லாமல், நமது பெருமைகளைச் சொல்லும் படமாக அமைத்திருக்கிறாராம் சந்தோஷ் சிவன்.
'வேட்டை' படத்துக்குப் பிறகு ஆர்யாவின் இன்னொரு பரிமாணத்தை 'உருமி'யில் காணலாம்.

பிருதிவிராஜ், பிரபுதேவா, ஆர்யா, 'மதராஸப்பட்டினம்' அலெக்ஸ் ஆகியோருடன் ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே 'உருமி'யில் நடித்து இருக்கிறார்கள்.

விஜய்யின் 'துப்பாக்கி' படத்திற்கு முன் இப்படத்தை வெளியிட இருக்கிறார் தாணு.

வசனங்களை சசிகுமரன் எழுத, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தீபக் தேவ். ஸ்ரீகர்பிரசாத் எடிட் செய்திருக்கிறார்.

சவாலான 15 ஆம் நூற்றாண்டு காட்சிகளைத் தம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் சுனில் பாபு. அதே நேரம் சுருள்வாள்சண்டை, களரிச் சண்டை என்று தன் பங்குக்கு மிரட்டியிருக்கிறார் அனல் அரசு.
விரைவில் திரைக்கு வரவிருக்கிறது 'உருமி'

Saturday, March 24

ரூட்டை மாத்து !: விஜய்


ஆக்ஷன், அதிரடி கலந்த மசாலா படங்களை தனது ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வந்தார் விஜய்.

நடுவில் 'காவலன்', 'நண்பன்' உள்ளிட்ட படங்களின் வரவேற்பை தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிப்பேன் என்று நிரூபித்தார்.

'காவலன்', 'நண்பன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் படங்களை பார்த்தால், நல்ல கதையம்சம் உள்ள படங்களை விட தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதே முக்கியம் என்ற முடிவை எடுத்து இருக்கிறார் என்றே தெரிகிறது.

விஜய்யின் ஆக்ஷன், ஏ.ஆர்.முருகதாஸின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகிய இரண்டையும் கலந்து விஜய் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது 'துப்பாக்கி'.

அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ' யோஹன் ' படத்தில் விஜய்யை ஸ்டைலிஷான ஆக்ஷன் கதையின் நாயகனாக ஆக்கி இருக்கிறார் கெளதம்.

இயக்குனர் விஜய்யுடன் விஜய் சேரும் படமும் ஆக்ஷன் கதை தான்

Thursday, March 15

துப்பாக்கியில் ஜெய் நடிக்கவில்லை - ஏ ஆர் முருகதாஸ் மறுப்பு

AR Murugadassதுப்பாக்கி படத்தில் ஜெய் நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

அசப்பில் விஜய்யின் சாயல் நடிகர் ஜெய்யிடம் உண்டு. ஒரு வேளை அவர் தம்பியாக இருக்குமோ என்றுதான் பகவதி படம் பார்த்தபோது நினைத்தனர். அந்தப் படத்தில் விஜய்யின் தம்பியாகத்தான் அவர் நடித்திருந்தார்.

இப்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி படத்தில் அவர் நடிப்பதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் வெளியாகின.

இந்தப் படத்தில் தான் நடிப்பது உண்மைதான் ஜெய்யும் கூறிவந்த நிலையில், இந்த செய்திகள் தவறானவை என மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்தப் படத்தில் விஜய்க்கு தம்பி வேடமே இல்லை. அப்புறம் எங்கே ஜெய் நடிப்பது. இது தவறான செய்தி, என்று மறுத்தார் முருகதாஸ்

Tuesday, March 13

துப்பாக்கிக்காக ஷூட் செய்த விஜய்!

விஜய் நடிக்க, முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி'யின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. காட்சிப்படி கும்பல் நிறைந்த தெருவில் விஜய் செல்வது போல எடுக்க வேண்டியிருந்ததாம். படத்தின் முக்கியமான காட்சி அது என்பதால், பொதுமக்களுக்குத் தெரியாமல் அக்காட்சியை கும்பல் இருக்கும் சாலையில் படம்பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள்.

பொதுமக்கள் விஜய் படப்பிடிப்பு நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், அவசரமாக எடுக்க வேண்டிய காட்சி என்பதால், படக்குழுவினர் தயாராக, விஜய் சட்டென்று தானே கேமராவைக் கையாண்டு அக்காட்சியை படம் பிடித்துள்ளார்.

விஜய் எடுத்த படப்பதிவைப் பார்த்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அந்த காட்சியை விஜய் மிக அழகாக எடுத்துள்ளதாக பாராட்டியிருக்கிறார்.

'கொசுறு' கபாலி : " சீக்கிரமே, விஜய நடிக்க, சந்தோஷ் சிவன் டைரக்ட் பண்ணப் போறாரு.. படத்துக்கு பேர் இன்னும் முடிவு பண்ணலை!

Thursday, March 8

துப்பாக்கில் தளபதி விஜய்யுடன் இணைந்த ஜெய்


துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நாயகன் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இளையதளபதி விஜய் நடித்து வருகிறார்.
துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் நாயகன் ஜெய்யிடம், துப்பாக்கியில் விஜய்யின் தம்பியாக நடிப்பதற்கு திகதிகள் கேட்டுள்ளார்.
நாயகன் ஜெய், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உடனே திகதிகளை தந்துள்ளார்.
ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி திரைப்படத்தில் நாயகன் ஜெய் நடித்துள்ளார்.
தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்பு இளைய தளபதியுடன் மீண்டும் ஜெய் இணைகிறார்.

Monday, March 5

'துப்பாக்கிக்கு ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம்




விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ். மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

Thursday, March 1

சொந்தக் குரலில் விஜய் பாடல்!



விஜய் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடியுள்ளார். 'சச்சின்' படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' என்ற பாடல் தான் கடைசியாக பாடினார்.

அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய்.

'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன் ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி, விஜய்யிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

'பாட வேண்டுமா.. உடனே தயார்' என்று கூறினாராம் விஜய். ஹாரிஸ் இசையில் விஜய் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக' வரும் விஜய்!


Vijay

இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தில் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம்.

ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், திடீரென்று இந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விஜயிடம் கேட்டதற்கு, 'படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சனை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்" என்றார்.

தற்போது பெப்சி பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததையடுத்து தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் அவர் திருடர்களை டொப்பு, டொப்புன்னு சுட்டுத் தள்ளும் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகத்தை ஒரு என்கெளன்டர் பரபரப்புக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் வேறு துப்பாக்கியைத் தூக்குகிறார்...!

ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம்


ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.

ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.

இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன்.
இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. "
என்று தெரிவித்து இருக்கிறார்

Related Posts Plugin for WordPress, Blogger...