ரஜினி - கமல் நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படம் மறுபடியும் தயாராக இருக்கிறது என்றும், அப்படத்தில் அஜீத் - விஜய் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ரஜினி - கமல் நடித்து கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படம் 'நினைத்தாலே இனிக்கும்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
'நான் அவன் இல்லை' படத்தினை ரீமேக் செய்து வெளியிட்டார் இயக்குனர் செல்வா. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'அமராவதி' படத்தின் மூலம் அஜீத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வா. அவர் 'நினைத்தாலே இனிக்கும்' ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்றும், கமல் வேடத்தில் அஜீத்தும், ரஜினி வேடத்தில் நடிக்க விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து செல்வா " இச்செய்தி முழுக்க முழுக்க தவறாகும். நான் அஜீத்தை சமீபத்தில் சந்திக்கவில்லை. சந்தித்தால் தானே நாங்கள் நினைத்தாலே இனிக்கும் படம் குறித்து பேசி இருப்போம் " என்று தெரிவித்து இருக்கிறார்.
இதைப் போலவே சென்ற ஆண்டு' ஷோலே' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜீத் - விஜய் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.













0 Comments:
Post a Comment