ஒளிப்பதிவாளராக இருந்த சந்தோஷ் சிவன் இயக்குனராக உருவாக்கிய படம் 'உருமி'. மலையாளத்தில் 'உருமி' படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தமிழில் அதே பெயரில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். சுமார் 30 கோடி செலவில் தயாரான 'உருமி' படத்தின் தமிழ் பதிப்பின் உலக விநியோக உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கி இருக்கிறார்.
தமிழகத்தை ஆண்ட அன்றைய மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னனின் வீர தீர பெருமைகளையும், அவனது கடல் ஆதிக்கத்தையும் கூறும் படமாக அமைந்திருக்கிறதாம் 'உருமி'. 'உருமி' படத்தினை அவர் ஒரு பொழுதுபோக்குப் படமாக மட்டும் இல்லாமல், நமது பெருமைகளைச் சொல்லும் படமாக அமைத்திருக்கிறாராம் சந்தோஷ் சிவன்.
'வேட்டை' படத்துக்குப் பிறகு ஆர்யாவின் இன்னொரு பரிமாணத்தை 'உருமி'யில் காணலாம்.
பிருதிவிராஜ், பிரபுதேவா, ஆர்யா, 'மதராஸப்பட்டினம்' அலெக்ஸ் ஆகியோருடன் ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே 'உருமி'யில் நடித்து இருக்கிறார்கள்.
விஜய்யின் 'துப்பாக்கி' படத்திற்கு முன் இப்படத்தை வெளியிட இருக்கிறார் தாணு.
வசனங்களை சசிகுமரன் எழுத, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் தீபக் தேவ். ஸ்ரீகர்பிரசாத் எடிட் செய்திருக்கிறார்.
சவாலான 15 ஆம் நூற்றாண்டு காட்சிகளைத் தம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் சுனில் பாபு. அதே நேரம் சுருள்வாள்சண்டை, களரிச் சண்டை என்று தன் பங்குக்கு மிரட்டியிருக்கிறார் அனல் அரசு.
விரைவில் திரைக்கு வரவிருக்கிறது 'உருமி'













0 Comments:
Post a Comment