6:34:00 PM
விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புல்லட் போட்டு வரும் 'துப்பாக்கி' பளபளப்பாக தயாராகி வருகிறது.
'துப்பாக்கி' படம் குறித்தும், எந்த அளவிற்கு பணிகள் முடிந்து இருக்கின்றன என்பது குறித்தும் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்து இருக்கும் பேட்டியில் இருந்து,
" துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 60% முடிவடைந்து விட்டது. மும்பை வாழும் ஒரு தமிழ் குடும்பத்தினை பற்றிய கதை. அதனால் முழுக்க முழுக்க மும்பையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விஜய்யிடம் நான் இவ்வளவு TIMING, SENSE OF HUMOUR எதிர்பார்க்கவில்லை. படத்தில் ஒரு பக்க வசனம் ஆகட்டும், நீளமான காட்சிகள் ஆகட்டும் எல்லாவற்றையும் ஒரே டேக்கில் செய்து முடித்து விடுகிறார்.
உண்மையிலேயே இதனை நான் ஒரு கமர்ஷியல், மாஸ் ஹீரோ விஜய்யிடம் நான் எதிர்பார்க்கவில்லை. இதனை நான் அவரிடமே கூறி இருக்கிறேன்.
கமல் சாருக்கு பிறகு விஜய் சார் தான் தொடர்ந்து பாடல்களை பாடி வந்தார். ஏனோ அவரும் 6 வருடங்களாக பாடல் எதுவும் பாடுவது இல்லை.
விஜய்யை பாட வைத்து அதனை நமது படத்திற்கு உபயோகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஹாரிஸ் சாரும் அந்த பாடலை கம்போஸ் செய்து முடித்தவுடன் விஜய்யை இந்த பாடலை பாட வைக்கலாமா என்று கேட்டார். நானும் நம்ம நினைத்தோம், இவர் கேட்கிறாரே என்று உடனே சரி என்று கூறி விட்டேன். அப்பாடல் கண்டிப்பாக 'துப்பாக்கி' ஆல்பத்தில் ஒரு சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
'துப்பாக்கி' படத்தின் கதையினை முதலில் இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் விஜய் சாரின் கால்ஷீட் தயாராக இருக்கிறது என்றவுடன் அக்கதையினை விஜய் சார் வைத்து தமிழில் உடனே துவங்கி விட்டேன். இப்படத்தினை முடிந்தவுடன் இதே கதையினை அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் பண்ண இருக்கிறேன்.
'கஜினி' படத்தினை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. " என்று தெரிவித்து இருக்கிறார்.
6:37:00 PM
தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் ரீமா சென். விஜய்யுடன் 'பகவதி', விக்ரமுடன் 'தூள்', கார்த்தியுடன் 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் நடித்தவர், கடைசியாக தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ராஜபாட்டை' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார்.
இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழிலதிபருக்கும் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்தையொட்டி படங்களில் நடிப்பதை ரீமா சென் தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடிகர் விஜய் தயாரிக்க இருக்கும் 'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரீமா சென்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1981ம் ஆண்டு வெளிவந்த படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. தமிழில் வரவேற்பை பெற்றதையடுத்து பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் ரஜினிகாந்த் நடிக்க 'அந்தாகானூன்' என்ற பெயரில் வெளியாகி, ரஜினிக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
அனைத்து மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது அப்படத்தினை மீண்டும் தமிழில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் விஜய்.
இப்படத்தை இயக்கப் போவது விஜய்யின் உறவுக்காரப் பெண் சினேகா.
விஜயகாந்த் நடித்த பாத்திரத்தில் நடிக்க பிரபுவின் மகன் விக்ரம்பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். பியா, கார்த்திகா, ரீமா சென் உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தில் ரீமாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம்.
'சட்டம் ஒரு இருட்டறை' தனக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரியாக இருக்க வேண்டும் என்பதால், போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக இருக்க, யோகா, உடற்பயிற்சி என தயாராகிவருகிறாராம் ரீமா
6:41:00 PM
தமிழ் திரையுலகின் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் சினேகாவிற்கு அடுத்த மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
பிரசன்னா - சினேகா இருவருமே தங்களது திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருக்கிறார்கள்.
பிரசன்னா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழை தானே நேரில் சென்று அளித்து வருகிறார். கமலை சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்தாராம். ' கோச்சடையான் ' படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருக்கும் ரஜினி, தமிழ்நாடு திரும்பிய உடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளிக்க இருக்கிறார் பிரசன்னா.
விஜய் மற்றும் அஜீத் இருவரையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்த பிரசன்னா, மிக சந்தோஷமாகத் திரும்பினாராம். இருவருமே தங்களது வாழ்த்துகளை பிரசன்னாவுடன் பகிர்ந்து கொண்டார்களாம். அதுமட்டுமல்லாமல், சினேகாவையும் போனில் தொடர்பு கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
மே 11-ம் தேதி கல்யாண மண்டபத்தில் நட்சத்திர திருவிழாவைப் பார்க்கலாம்..
8:55:00 PM
இந்தியாவில் பல்வேறு முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரது படங்களும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ்சிவன்.
இவரது ஒளிப்பதிவினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி இருக்கிறார்கள். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
அவருக்கு ஆசியாவில் புகழ்பெற்ற AMERICAN SOCIETY OF CINEMATOGRAPHERS- இல் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிலிருந்து ASC-ல் இணைந்திருக்கும் முதல் ஒளிப்பதிவாளர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்த படங்களைப் பார்த்து பிரபல ஒளிப்பதிவாளர் Michael Chapman (ASC) இவரது பெயரை பரிந்துரை செய்தாராம்.
ASC-ல் இணைந்திருக்கும் ஒளிப்பதிவாளர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் ASC எனப் போட்டுக் கொள்வதை மிகப் பெரிய விஷயமாகக் கொள்வார்கள்.
8:49:00 PM
கமர்ஷியல் படங்களில் ரசிகர்களை மகிழ்விக்க நடித்து வந்த விஜய், வித்தியாசமான கதைக்களம் கொண்ட 'நண்பன்' படத்தில் நடித்தார்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் மற்றும் பலர் நடித்த அப்படத்தினை இயக்கினார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அப்படத்தினை ஜெமினி நிறுவனம் தயாரித்தது.
'நண்பன்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகியுள்ளது. தமிழ்பட விமர்சகர்கள் மத்தியிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் படம் வரவேற்பை பெற்று இருந்தது. 2012ம் ஆண்டில் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற இடத்தினையும் பிடித்தது.
'நண்பன்' படத்தின் 100 வது நாள் விழா ஏப்ரல் 21ம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற இருக்கிறது.
இப்படத்தினை டிவி உரிமையை கடும் போட்டி இடையே வாங்கி இருக்கும் விஜய் டிவி நிறுவனம், இத்திரைப்படத்தினை மே 1 அன்று ஒளிபரப்ப இருப்பது குறிப்பிடத்தக்க
8:52:00 PM
'மங்காத்தா' படப்பிடிப்பில் அஜீத்தை விஜய் சந்தித்து பேசினாரோ அன்று முதல் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள் என்ற பேச்சுகள் அவர்களது ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக "அஜீத் எனது நண்பர்!" என்று பேட்டியளித்து இருக்கிறார் விஜய்.
அஜீத் உங்களுக்கு போட்டியா என்ற கேள்விக்கு " அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் குறித்து நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம். நடித்து வரும் படங்கள் குறித்தும் பேசுவோம்.
அஜீத் வீட்டிற்கு நான் செல்வேன். அவர் என் வீட்டிற்கு வருவார். எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.
சினிமாவில் எங்களுக்குள் கொஞ்சம் நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. ஆனால் நிஜத்தில் நாங்கள் நல்ல நண்பர்கள்!" என்று தெரிவித்து இருக்கிறார்
3:47:00 AM
விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முன்னோட்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை நாளை வெளியிடுகிறார் இயக்குநர் முருகதாஸும் ஹீரோ விஜய்யும்.
விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை திரையுலகை பெருமளவு பாதித்தது. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டாலும், துப்பாக்கி மட்டும் எந்தத் தடங்களும் இல்லாமல் ஜோராக முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது!
3:44:00 AM
துப்பாக்கி' படத்தினை அடுத்து விஜய் கால்ஷீட் யாருக்கு என்பது கோலிவுட்டின் விடைதெரியாத கேள்வியாக இருந்தது.
'துப்பாக்கி' படத்தினை முடித்து விட்டு கெளதம் மேனன் இயக்கத்தில் யோஹன் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.
' யோஹன் ' படம் குறித்து இயக்குனர் கெளதம் மேனன் " ' யோஹன் ' ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ் கூட விஜய் ‘துப்பாக்கி’ முடிச்சிட்டா, ‘யோஹன்’ ஆரம்பிச்சிடலாம். இந்தப் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம்.
ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான். ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும். ரஹ்மான் இசை. ‘யோஹன்’ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்யாயம் 1, 2னு அடுத்தடுத்து பண்ணலாம். " என்று தெரிவித்து இருக்கிறார்
3:53:00 AM
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து அவர்களுக்கு விருந்தும் பரிசும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட ”இளையதளபதி விஜய்” ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய், "இப்போது நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுடன் ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக கொண்டாடப் போகிறேன்.
இதை மனதில் கொண்டு மாணவர்கள் நன்கு படித்து பரீட்சை எழுத வேண்டும். மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து, பரிசு வழங்க ஆசைப்படுகிறேன்," என்றார் விஜய்,
மாணவர்களுக்கு விஜய்யின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த ஆசையில் இன்னும் நன்றாகப் படிப்பார்களே என்ற மகிழ்ச்சி பெற்றோருக்கு!
3:50:00 AM
தனக்காக ரசிகர்கள் உருவாக்கிய 'விஜய் கீதம் (Vijay Anthem)' என்ற இசை ஆல்பத்தை நேற்று வெளியிட்டு வாழ்த்தினார் நடிகர் விஜய்.
விஜய்யின் ஆன்லைன் ரசிகர்கள் பத்துப் பேர் இணைந்து இந்தப் பாடல் தொகுப்பை உருவாக்கினர்.
விஜய் ரசிகர்கள் அவரைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை. வரிக்கு வரி அவரை தலைவர் என்று புகழ்ந்து பாடலை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து பாடலை வெளியிட்டுள்ள சரிகமபதநீ நிறுவனத்தின் ராஜா கூறுகையில், " இந்தியாவிலேயே ரசிகர்கள் இசையமைத்து உருவாக்கியுள்ள ஆல்பம் இதுவே," என்றார்.
நடிகர் விஜய் கூறுகையில், "வணிக நோக்கமில்லாமல் ரசிகர்கள் உருவாக்கியுள்ள பாடல்கள் இவை. என்னிடம் வந்து, இந்தப் பாடல்களை வெளியிட வேண்டும் என அனுமதி கேட்டனர். பாடல்கள் நன்றாக இருந்ததால், வெளியிட ஒப்புக் கொண்டேன். இதனை உருவாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்," என்றார்.
10:04:00 AM
விஜய் ரசிகர்கள் தற்போது இணையங்களில் அதிகமாக விவாதித்து வருவது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்படி இருக்கும் என்பது பற்றி தான்.
விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOKல் விஜய் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார்.
'துப்பாக்கி' படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் " படத்தில் ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு சிறு பாடல் இருக்கிறது. துப்பாக்கி படத்திற்கான THEME MUSIC வரும் வாரத்தில் தயார் செய்ய இருக்கிறோம்.
படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 12ம் தேதி முதம் துவங்க இருக்கிறது.
படத்தின் விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருக்கிறேன். 'துப்பாக்கி' படத்திற்கான FIRST LOOKல் பணியாற்ற உள்ளோம்.
படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் வந்து விட்டால் அவரது தனது போனை தொடக் கூட மாட்டார். வேலையில் அவர் அவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார். அது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது " என்று தெரிவித்து இருக்கிறார்.
'துப்பாக்கி'யில் காஜல் அகர்வாலின் பெயர் 'நிஷா' வாம்.