10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து அவர்களுக்கு விருந்தும் பரிசும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட ”இளையதளபதி விஜய்” ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய், "இப்போது நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுடன் ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக கொண்டாடப் போகிறேன்.
இதை மனதில் கொண்டு மாணவர்கள் நன்கு படித்து பரீட்சை எழுத வேண்டும். மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து, பரிசு வழங்க ஆசைப்படுகிறேன்," என்றார் விஜய்,
மாணவர்களுக்கு விஜய்யின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த ஆசையில் இன்னும் நன்றாகப் படிப்பார்களே என்ற மகிழ்ச்சி பெற்றோருக்கு!













0 Comments:
Post a Comment