தமிழ் திரையுலகின் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் சினேகாவிற்கு அடுத்த மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
பிரசன்னா - சினேகா இருவருமே தங்களது திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருக்கிறார்கள்.
பிரசன்னா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழை தானே நேரில் சென்று அளித்து வருகிறார். கமலை சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்தாராம். ' கோச்சடையான் ' படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருக்கும் ரஜினி, தமிழ்நாடு திரும்பிய உடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளிக்க இருக்கிறார் பிரசன்னா.
விஜய் மற்றும் அஜீத் இருவரையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்த பிரசன்னா, மிக சந்தோஷமாகத் திரும்பினாராம். இருவருமே தங்களது வாழ்த்துகளை பிரசன்னாவுடன் பகிர்ந்து கொண்டார்களாம். அதுமட்டுமல்லாமல், சினேகாவையும் போனில் தொடர்பு கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
மே 11-ம் தேதி கல்யாண மண்டபத்தில் நட்சத்திர திருவிழாவைப் பார்க்கலாம்..













0 Comments:
Post a Comment