இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, November 29

100 கோடி துப்பாக்கி வசூல் சாதனை..!





தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் காட்சிக்கு பிரச்னை, தலைப்பு பிரச்னை என்று பல பிரச்னைகளை சந்தித்து கடைசியாக தீபாவளிக்கு ரிலீசானது துப்பாக்கி படம்.
பொதுவாக விஜய் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப்படம் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. எதிர்பார்த்தபடியே துப்பாக்கி படமும் ரிலீசாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ.50கோடி வசூலை அள்ளிய இப்படம் இப்போது ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்து சாதனை படைத்து இருக்கிறது.
இதுகுறித்து துப்பாக்கி படத்திற்கான இணையதளத்தில் டைரக்டர் முருகதாஸ் கூறியிருப்பதாவது, துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது. 10நாளில் இந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில்‌ சேரும் 2வது தமிழ்படம் துப்பாக்கி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுவரை ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலான தமிழ்ப்படடம் என்று இருந்து வந்த நிலையில், இப்போது அந்த லிஸ்ட்டில் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய்யின் துப்பாக்கி படமும் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது. ‌மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே துப்பாக்கி படம் தான் ரூ.100 கோடியை தாண்டி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Friday, November 23

துப்பாக்கியில் கலக்கிட்டீங்க போங்க.பாராட்டிய அஜீத்





நடிகர் அஜீத் குமார் துப்பாக்கி படத்தைப் பார்த்துவிட்டு விஜய் மற்றும் முருகதாஸை அழைத்து பாராட்டியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய-காஜல் நடிப்பில் வெளியான துப்பாக்கி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் மற்றும் முருகதாஸுக்கு அஜீத் குமார் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்



Wednesday, November 21

விஜய்யுடன் இணையும் மோகன்லால்

Mohan Lal Join With Vijay

விஜய்யும் மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளனர். மோகன்லால் தமிழில் பாப்கார்ன் என்ற படத்திலும், இரு ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்' படத்திலும் நடித்துள்ளார். அடுத்து அவர் விஜய்யுடன் கைகோர்க்கிறார். விஜய், மோகன்லால் இணைந்து நடிப்பதற்கான கதை தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம். விஜய் தற்போது இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் - விஜய் படம் தொடங்கும் எனத் தெரிகிறது

Saturday, November 17

விஜய் - அமலா பால் நடிக்கும் பட பூஜை!

Vijay Amala Paul New Movie Pooja



துப்பாக்கி படத்துக்குப் பிறகு ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் - அமலா பால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்தப் படத்துக்கு முதலில் தலைவன் என்று பெயரிட்டிருந்தனர். ஆனால அந்தத் தலைப்பை, சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் நடிக்கும் படத்துக்கு வைத்துவிட்டதால், வேறு தலைப்பை யோசித்து வருகின்றனர். இந்த படத்தை மிஸ்ரி புரொடக்சன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். சத்யராஜ நடித்த பல படங்களின் தயாரிப்பாளர் - பைனான்ஸியர் என்பதாலோ என்னமோ, சென்டிமென்டாக அவருக்கும் ஒரு வேடத்தைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படப்பூஜை விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகை அமலாபால் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். படப்பிடிப்பை இம்மாத இறுதியி்ல் வெளிநாட்டில் ஆரம்பிக்கின்றனர்.

Thursday, November 15

துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: இயக்குநர் முடிவு


துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

படத்தின் காட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தினரைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டை இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சென்னையில் இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அக்காட்சிகளை உடனடியாக நீக்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எதிராக காட்சிகள் அமைப்பது எங்கள் நோக்கமல்ல. படத்தில் வரும் காட்சிகள் முஸ்லிம்களை புண்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ரஜினி (2 தடவை ) பார்த்த துப்பாக்கி !




ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'துப்பாக்கி' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

தீபாவளி அன்று மட்டும் 'துப்பாக்கி'  9 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வசூல் செய்து இருக்கிறது. கேரளாவில் முதல் நாள் மட்டும் 85 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.

மக்களிடையே கிடைத்து இருக்கும் வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் தாணு " துப்பாக்கி படம் வரவேற்பை பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி விஜய்யின் படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படமாக 'துப்பாக்கி' இருக்கும்.

இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மற்றும் மொத்த 'துப்பாக்கி' படக்குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டுமன்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று காலை தனது டிவிட்டர் இணையத்தில் "நம்ம தலைவர் ரஜினி சார் எனக்கு போன் செய்து பேசினார். " துப்பாக்கி படத்தினை இதுவரை ரெண்டு தடவை பார்த்து விட்டேன். அற்புதமான வேலை.. நல்ல படம்!" என்றார். சந்தோஷமாக இருக்கிறது " என்று தெரிவித்து இருக்கிறார்.

Thursday, November 8

துப்பாக்கி

'துப்பாக்கி' இசை வெளியீட்டு விழா
விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 

விஜய் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி  - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள். 

" விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல,  விஜய் "ஏ. ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.

பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது. 

'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.

சென்சார் முடித்து U சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ரசிகர்கள் கவர தீபாவளியன்று நவம்பர் 13ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...