இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, November 8

துப்பாக்கி

'துப்பாக்கி' இசை வெளியீட்டு விழா
விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 

விஜய் மாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி  - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள். 

" விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல,  விஜய் "ஏ. ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.

பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது. 

'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.

சென்சார் முடித்து U சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். படம் ரசிகர்கள் கவர தீபாவளியன்று நவம்பர் 13ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...