
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'துப்பாக்கி' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
தீபாவளி அன்று மட்டும் 'துப்பாக்கி' 9 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வசூல் செய்து இருக்கிறது. கேரளாவில் முதல் நாள் மட்டும் 85 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.
மக்களிடையே கிடைத்து இருக்கும் வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் தாணு " துப்பாக்கி படம் வரவேற்பை பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தம்பி விஜய்யின் படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படமாக 'துப்பாக்கி' இருக்கும்.
இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மற்றும் மொத்த 'துப்பாக்கி' படக்குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமன்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று காலை தனது டிவிட்டர் இணையத்தில் "நம்ம தலைவர் ரஜினி சார் எனக்கு போன் செய்து பேசினார். " துப்பாக்கி படத்தினை இதுவரை ரெண்டு தடவை பார்த்து விட்டேன். அற்புதமான வேலை.. நல்ல படம்!" என்றார். சந்தோஷமாக இருக்கிறது " என்று தெரிவித்து இருக்கிறார்.













0 Comments:
Post a Comment