
ஜில்லா' படத்திற்காக மெலோடி பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் நடிகர் விஜய்.
தன் படத்தில் பாடல் பாடுவது விஜய்க்கு புதிதல்ல. 'துப்பாக்கி' படத்தில் 'கூகுள் கூகுள்', தலைவா படத்தில் “வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா..” போன்ற பாடல்கள் பாடியது விஜய்தான். இப்பாடல்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இதையடுத்து விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரை பாட வைப்பதில் இசையமைப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது விஜய் 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு டி.இமான்தான் இசை. அவர் மட்டும் சும்மா விட்டுவிடுவாரா விஜய்யை? ‘ஜில்லா’ படத்திலும் ஒரு பாட்டு பாடியே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றுவிட்டார்.
அப்புறம் என்ன? ‘ஜில்லா’வுக்காக “கண்டாங்கி.. கண்டாங்கி” என ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து விஜய் பாடியிருக்கும் இந்தப்பாடல்தான் விஜய் ரசிகர்களுக்கு 2014ஆம் ஆண்டின் பொங்கல் வாழ்த்தாக இருக்கப்போகிறது. இந்தப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.
இவைதவிர, அடுத்து நடிக்கவிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும் விஜய் பாட இருக்கிறார். அப்படத்திற்கு இசையமைக்க இருக்கும் அனிருத், இப்போதே 'கொலவெறி' இசை போன்று ஒரு துள்ளலான இசையை தயார் செய்துவிட்டாராம்













0 Comments:
Post a Comment