![]() |
| Jilla ஜில்லா படக்குழு பாடல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வேலை செய்துள்ளனர். ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விஜய், காஜல் உள்ளிட்ட படக்குழு ஜப்பான் சென்றது அந்த நேரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த ஆர்.பி. சௌத்ரி படக்குழுவினரை உடனே ஊர் திரும்புமாறு கூறினார். ஆனால் ஜப்பானில் குறிப்பிட்ட சீசனில் பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்று நினைத்து சென்ற படக்குழு ஊர் திரும்ப மறுத்துவிட்டது. இதையடுத்து தாங்கள் நினைத்தபடி பாடல் காட்சியை படமாக்கிவிட்டது தான் ஊர் திரும்பியுள்னர். படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க |













0 Comments:
Post a Comment