இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, January 27

எம்.ஜி.ஆரிடம் இருந்த க்யூட்னஸ் விஜய்யிடம் இருக்கிறது : சத்யராஜ்

Vijay and Sathyarajபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்று இளைய தளபதி விஜயும் ரொம்ப கியூட்டாக இருக்கிறார். விஜயைப் பார்க்கும் போதெல்லாம் அவரது கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் போல் இருக்கிறது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

போக்கிரி வெற்றிவிழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் விஜயை இந்தியன் ப்ரூஸ்லி என்று புகழ்ந்தார். தற்போது எம்.ஜி.ஆர். போன்று விஜய் க்யூட்டாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நண்பன் படத்தில் கல்லூரி முதல்வராக நடித்துள்ளார் சத்யராஜ். இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் நண்பன் ஸ்பெஷல் ஷோ நடந்தது. அந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சங்கர், விஜய், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சத்யராஜ் கூறியதாவது,

ஒரு விஷயத்தை நானும் கன்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியல. இங்கே அதை சொல்லியே ஆக வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த நடிகர் ஆமீர் கான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நண்பன் படத்தில் ஆமீர் கானின் நடிப்பை விட விஜய் நடிப்பை ரசித்தேன்.

என் மனதில் என்ன படுகிறதோ அதை சொல்லிவிடுவேன். விஜய்யை பார்க்கையில் அவரது கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அது ஒரு ஹீரோவுக்கு மிகவும் முக்கியம். அது தான் என் தலைவர் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. எம்.ஜி.ஆரிடம் இருந்த க்யூட்னஸ் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் தான் அதை சொல்கிறேன் என்றார்.

சத்யராஜ் புகழந்து தள்ளியைக் கேட்டு விஜய் கொஞ்சம் அசந்து தான் போனார்


Wednesday, January 25

தமிழி வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் இன்று முதல் சினேகிதுடு


விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த நண்பன் படம் மாபெரும் வெற்றியுடன் தமிழகம் மற்றும் கேரளா மற்றும் ஏனைய நாடுகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு நல்ல விமர்சனம் மற்றும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தெலுங்கில் இன்று வெளியாகிறது. சினேகிதுடு எனும் பெயரில் வெளியாகிறது.
இப்படம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு தரமான படமாக வந்துள்ளது. இப்படம் தொடங்கும் போது பலர் இப்படம் பற்றி தவறான விமர்சனம் சொன்னனர் எனினும் அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளது நண்பன். இப்படத்தில் தெலுங்கு பாடல்கள் அண்மையில் கைதரபாத்தில் வெளியிடப்பட்டன. அங்கு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இலியான சத்தியராஜ் சத்தியன் ஜீவா சிறிகாந்த் அனுஜா மற்றும் பலர் நடிக்க சங்கர் இயத்தில் ஹரிசின் இசையில் ஜெமினி பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. நண்பன் ஹிந்தி மற்றும் தமிழில் வெற்றி பெற்றதை போல தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வெற்றி பாதையில் இளைய தளபதி விஜய்

விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படங்கள் வரவேற்பை பெறாத போதும் விஜய் நடிப்பில் இறுதியாக வந்த மூன்று படங்கள் அமோக வெற்றி பெற்றன. காவலன் பல எதிர்பின் மத்தியில் வெளிவந்து வெற்றி பெற்றது. வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நூறுநாளை தாண்டி ஓடியது. அடுத்து வெளிவந்த வேலாயுதம் படமும் நல்ல வரவேற்பை பெற்று இன்னமும் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. நண்பன் படம் வெளிவந்து மெகா ஹிட் ஆகியுள்ளது. இவ்வாறு மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று ஹற்றிக் நாயகனாக விஜயை மாற்றியுள்ளது. இம்மூன்று படமும் வேறுபட்ட கதையை கொண்ட படங்களாகும். ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத மூன்று படமாகும். இம்மூன்றும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தவிர இனி வர உள்ள மூன்று படமும் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மூன்று படங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத படங்களாகும். துப்பாக்கி யோகன் மற்றும் இயக்குனர் விஜயின் படம் என்பனவாகும். விஜய் வெற்றி நாயகன் என அறிந்த நிலையிலும் இப்படங்களும் விஜயின் வெற்றிக்கு மேலும் பல மடங்கு அழகு சேர்த்துள்ளது.

நண்பன் விஜய்க்கு ஒரு சபாஷ் பாராட்டிய கமல்!


கமல ஹாசனுக்காக விஜய் தனது நண்பன் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். படத்தைப் பார்த்த கமல் விஜய்யை மனதாரப் பாராட்டியுள்ளார்.

இளைய தளபதி விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நண்பர்களாக நடித்த நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஹிட்டாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தலைகாட்டியிருக்கிறார் நடிகை இலியானா. இந்தியில் ஆமீர் கான், மாதவன் மற்றும் ஷர்மான் ஜோஷி நடித்து சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஷங்கர்.

படம் ஹிட்டான குஷியில் இருக்கும் விஜய் கமலுக்காக தனது படத்தை ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த உலக நாயகன் இளைய தளபதியின் நடிப்பை பாராட்டினார். இதனால் விஜய் படுகுஷியாகிவிட்டார்.

முன்னதாக போக்கிரி படத்தைப் பார்த்த கமல் விஜயை பாராட்டினார். அண்மையில் நடந்த கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய் அவருடன் சேர்ந்து நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜீத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நெருக்கமாக உள்ளார். தற்போது இளைய தளபதி விஜய் கமலுடன் நெருக்கமாகி வருகிறார்

Tuesday, January 24

நண்பன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது :இலியானா

நண்பன் திரைப்படத்தில் கரினா கபூர் பாணியை பின்பற்ற வில்லை என்று இலியானா தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நாயகி இலியானா நடித்துள்ளார்.


நண்பன் திரைப்படத்தை பற்றி நாயகி இலியானா, நண்பன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. நிறைய பாராட்டுகளும் குவிகிறது.
பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழாக்கமே நண்பன் என்றாலும் படத்தில் நடிப்பதற்காக 3 இடியட்ஸ் படத்தை பல தடவை பார்த்தேன். ஆனால் அதில் நடித்த கரீனா கபூர் நடிப்பை காப்பி அடித்து நடிக்க வில்லை.
கரினா கபூர் பாணி வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். என் நண்பர்கள் கரீனா கபூருடன் ஒப்பிட்டு பேசவில்லை. என் பாணியில் நடித்திருப்பதாக என்னை பாராட்டினார்கள்.
கொலிவுட்டில் கேடி படத்துக்கு பின் 5 ஆண்டுகளுக்கு பின்பு நல்ல கதை அமைந்ததால் நண்பனில் நடித்தேன்.
இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவர் திறமையானவர். அனுஷ்கா உட்பட சக நடிகைகளிடம் இருந்து பாராட்டு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்துள்ளார்

நண்பன் வெற்றி பெற்றது மிக்க மகிழ்ச்சி : மாதவன்

நண்பன் படத்தில் நான் நடிக்காததில் வருத்தம் இல்லை. உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன், என்கிறார் மாதவன்.

ஆர்யாவுடன் இணைந்து மாதவன் நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் குறித்து மாதவன் கூறுகையில், 'வேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்தது ரொம்பப் பிடித்திருந்தது. தமிழில் இரண்டு ஹீரோ படங்கள் இனி நிறைய வரும் என நினைக்கிறேன்.

நண்பன் படம் நன்றாக வந்தது மகிழ்ச்சி. ஆனாலும் அதில் நடிக்கவில்லையே என்ற வருத்தம் துளியும் இல்லை. நடிக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான்.

நானும், பிபாஷாபாசுவும் 'ஜோடி பிரேக்கர்ஸ்' (இந்தி) படத்தில் நடித்த போது, எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த படம் வெளி வந்து, அதைப் பார்த்த போது நாங்கள் இருவரும் அவ்வளவு பொருத்தமான ஜோடியாக தெரிந்தோம். பிபாஷாவைப்போல் தீபிகா படுகோனேயும் எனக்கு பொருத்தமானவராக இருப்பார்.

வேட்டையில் சமீரா எனக்கு சரியான ஜோடியாக இருந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். எப்படியோ, என்னுடன் நடிப்பவர்களுக்கு நான் பொருத்தமாக இருப்பது சந்தோஷம்தான்," என்றார்

Monday, January 23

நண்பனில் நானும் ஒருவன்-விஜய்


நண்பன் என்னும் நல்ல படத்தில் நானும் நடித்துள்ளேன் என்று 'இளைய தளபதி' விஜய் அமைதியாகத் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடித்த நண்பன் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது. தினமும் செய்தித்தாள்களில் அந்த படத்தைப் பற்றிய செய்தி தான். இந்நிலையில் படம் குறித்து அடக்க ஒடுக்கமாக பேசி வருகிறார் விஜய்.

இந்த படத்தின் வெற்றி குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நண்பன் இயக்குனர் ஷங்கரின் படம், என்னுடையதல்ல. திரைக்கதை தான் படத்தின் ஹீரோ என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் ஹீரோ செய்ய வேண்டியதை திரைக்கதை செய்துள்ளது. நான் படத்தில் ஒருவன் அவ்வளவு தான். நண்பன் படப்பிடிப்பு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.

இந்த படம் கல்வியைப் பற்றியது. ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கிறதோ அதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். நான் எனது மனம் சொல்லியதை கேட்டதால் தான் இன்று நடிகனாகியுள்ளேன். இந்த கருத்தை தான் நண்பன் சொல்கிறது என்றார்

100 கோடியை தாண்டிய !: நண்பன்


ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் 'நண்பன்'. இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள்.

தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது நண்பன்.

முதல் வாரத்தில் சுமார் 40 கோடியை கல்லா கட்டியிருக்கிறது நண்பன். படம் வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் 95% நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூலாம்.

'எந்திரன்' படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள், மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு, கேரளா, வெளிநாட்டு உரிமை, தெலுங்கு டப்பிங் உரிமை, இசை உரிமை, டிவி உரிமை என அனைத்தையும் கணக்கிட்டால் 100 கோடியை தாண்டுவது உறுதி என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் கொடுக்காத விலையை கொடுத்து ' நண்பன் ' படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கி இருக்கிறது விஜய் டிவி என்பது குறிப்பிடத்தக்கது

ஆசை நண்பனால் நிறைவேறியது ! : விஜய்


ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து இருக்கிறது.

தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் இது. 'நண்பன்' மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

'நண்பன்' படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்த விஜய் நேற்று பத்திரிகையாளர்களிடம் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் பேசும்போது " நண்பன் படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

எனக்கு வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் '3 இடியட்ஸ்' பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் அதன் அப்பட ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி பாத்திரங்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்தும் நல்லபடியாக அமைய வேண்டும். 'நண்பன்' படத்தில் அது அமைந்தது.

இதில் ஆக்ஷன், பஞ்ச் வசனங்கள் என எதுவும் கிடையாது. பத்து பேருடன் சண்டை போடுவது ஒரு ஹீரோயிசம் என்றால் 'நண்பன்' படத்தில் எனது பாத்திரம் வேறு விதமான ஹீரோயிசம்.

என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது 'நண்பன்' படத்தின் மூலம் நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. 'நண்பன்' படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராகிங்குகளில் நடப்பவை தான். 'நண்பன்' படத்தின் மூலம் ஸ்ரீகாந்த், ஜீவா இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

தற்கால கல்வி முறையின் தவறுகள் நண்பன் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன்.

எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறேன். 'துப்பாக்கி' படத்தில் எனது ரசிகர்கள் அடுத்து ஒரு வித்தியாசமான விஜய்யை பார்ப்பார்கள்.

' நண்பன்' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதலமைச்சருக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். " என்று கூறினார்.

விஜய். கமல் தனது குடும்பத்தினருடன் நண்பன்' திரைப்படத்தைப் பார்த்தார்

தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் 'நண்பன்'. இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

தன் 'விஸ்வரூபம்' பட பணிகளில் மும்முரமாக இருந்த கமல்ஹாசன் பார்ப்பதற்கென்று 'நண்பன்' படத்தின் பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்தார் விஜய். கமல் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (ஜன 21 ) இரவு 'நண்பன்' திரைப்படத்தைப் பார்த்தார்.

நண்பன் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவினரையும் விஜய்யையும் வெகுவாக பாராட்டினார் கமல்.

' நண்பன்' படம் குறித்து கமல் " விஜய், ஷங்கர், படத்தின் தயாரிப்பாளர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

ஒரு பெரிய நடிகர் செய்த படத்தினை ரீமேக் செய்யும் போது, ஒரு COMPARSION வரும். அப்படி செய்து இருக்கலாம், இப்படி செய்து இருக்கலாம் என்று கூறுவார்கள்.

நான் ' 3 இடியட்ஸ்' படத்தினை சில பகுதிகள் மட்டும் தான் பார்த்தேன். விஜய் தனக்கு ஏற்றது போல் பாத்திரத்தை மாற்றிக் கொண்டது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது ஷங்கர், விஜய் என இருவரின் முயற்சி. அவர்களின் முயற்சிக்கு நல்ல களம் அமைத்து கொடுத்த தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்.

விஜய்யுடன் நண்பர்களாக நடித்து இருப்பவர்கள், நல்ல நட்பை பார்த்த சந்தோஷத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் தான் நாயகன் என்ற ஈகோ படத்தில் தெரியவே இல்லை.

நிறைய MULTI STARRER படங்கள் வர வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான ஆரம்பமாக 'நண்பன்' படம் இருக்கும். மக்களும் இப்படத்திற்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். " என்று தெரிவித்துள்ளார்

Thursday, January 19

துப்பாக்கி முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது


இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கொலிவுட்டில் இளையதளபதி விஜய், முருகதாஸ், ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணியில் துப்பாக்கி படம் வேகமாக உருவாகி வருகிறது.

துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு துப்பாக்கியை தயாரிக்கிறார்.

இந்தப்படத்துக்காக நாயகன் விஜய்யின் வேடத்தை இயக்குனர் முருகதாஸ் மாற்றியுள்ளார்.

இந்தப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை வானகரம் சந்தையில் சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார்கள்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. தன்னுடைய படத்திற்கு நீண்ட நாட்கள் ஆகக்கூடாது என்பதற்காக, பணிகளை வேகமாக விஜய் முடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

'ஸ்மாக் தட்' என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் அகான். முதன் முதலாக இந்தி திரைப்படமான 'ரா.ஒன்' படத்தில் 'சம்மக் சலோ..' என்ற பாடலை பாடினார். அப்பாடல் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.

மும்பை வழியே சென்னைக்குள்ளும் நுழைகிறது அகான் குரல். அகான் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடல் பதிவு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

ரா.ஒன் 'சம்மக் சலோ' பாடலைவிட அதிகமாக இப்பாடல் வரவேற்பை பெற வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறாராம் ஹாரிஸ்.

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், ஹாரிஸ் ஜெயராஜ், அகான் என தோட்டாக்களை நிரப்பி வருகிறது 'துப்பாக்கி' !

Wednesday, January 18

துப்பாக்கியில் நான்தன் புல்லட் விஜய்

துப்பாக்கி படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என்று முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வருகிறார்.

நண்பன் திரைப்படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் அவர் நடித்து வருகிறார்.
துப்பாக்கி படத்தில் நடித்த அனுபவம் குறித்து விஜய் கூறியதாவது, துப்பாக்கி படம் என்னை இன்னொரு விஜய்யாக ரசிகர்களுக்கு காட்டும்.
இந்தப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும், துப்பாக்கி தான் படத்தின் கதை என்றால் துப்பாக்கியில் இருக்கும் தோட்டா நான்.
துப்பாக்கியில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் நண்பன் படம் குறித்து அவர் கூறுகையில், நண்பன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே நண்பன் படம் பெரிய வெற்றியடையும் என்று எனக்குத் தெரியும்.
சங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.
சங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்போது நண்பன் திரைப்படம் மூலம் நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்

துப்பாக்கின் பரபரப்பான தகவல்கள்


விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படம் வெற்றியடைந்ததால் சந்தோத்தில் இருக்கிறார் விஜய். தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார். இது பற்றி விஜய் கூறியதாவது
நான் துப்பாக்கி படத்தின் கதையை கேட்டதும் சந்தோசமடைந்தேன்.இப்படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். துப்பாக்கியின் குண்டு போன்றது இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை. எனது படங்களில் மாறு பட்ட படமாக அமைய உள்ளது இப்படம். என்னை இன்னும் வித்தியாசமாக எனது ரசிகர்கள் பார்ப்பார்கள். எனது ரசிகர்களுக்கு நல்ல ஒரு படத்தை எடுத்துள்ளார் முருகதாஸ்.
விஜய் ஜோடியாக காஜல் மற்றும் இன்னுமொரு கதாநாயகி நடிக்கின்றனர். இசை ஹரிஸ் ஜெயராஜ். பாடல்களை மதன் வர உள்ளது. இதனை விஜயும் உறுதிப்படுத்தினார்

நண்பனை வாங்கிய விஜய் தொலைக்காட்சி


தனியார் தொலைக்காட்சிகளில் புதுமையான நிகழ்ச்சியை வழங்கும் விஜய் தொலைக்காட்சி என்பது அனைவரும் அறிந்தது அந்த தொலைக்காட்சி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த நண்பன் படத்தின் சடிலைட் உரிமையை வாங்கியுள்ளது.
இப்படம் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த 3இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது விஜய் ரி.வி.எனினும் இப்படம் இதுவரை எவ்வளவுக்கு விற்றது என உத்தியோக பூர்வ செய்தியை வெளியிடவில்லை. விரைவில் இப்படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரங்களை வெளியிட உள்ளது ஜெமினி பிலிம்ஸ். இப்படம் இதுவரை 75 கோடியை வசூலித்துள்ளது.

நண்பனும் வேட்டையும் ஒரு பார்வை

பொங்கல் விடுமுறைக்கு விஜய் நடிக்கும் நண்பன், மாதவன், ஆர்யா நடிக்கும் வேட்டை என இரண்டு படங்கள் வெளியாகின. அப்படங்கள் குறித்து ஒரு பார்வை:

நண்பன் : ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள்.

12, 13 உள்ளிட்ட தேதிகளில் எந்த படமும் வெளியாகாததால் 'நண்பன்' படம் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நன்றாக கல்லா கட்டியது வழக்கமான மாஸ் படத்தினை போல இல்லாமல் விஜய்யின் எதார்த்தமான நடிப்பு, ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கம், இந்தியில் வரவேற்பைப் பெற்ற கதை என படம் பார்க்க வரும் ரசிகர்களை நண்பனாக்கி இருக்கிறது 'நண்பன்'.

வேட்டை : மாதவன், ஆர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். 'ரன்', 'பையா' படத்தினை போல, இளமைத் துள்ளலுடன் திரைக்கதை அமைத்து இருக்கிறார் லிங்குசாமி.

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிப்பு, லிங்குசாமி வேகமான திரைக்கதை அமைப்பு உள்ளிட்டவை படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

ரசிகர்களை மனதை வேட்டையாடி வருகிறது 'வேட்டை'. இதுவரை தாவணியில் வலம் வந்த அமலா பால், இப்படத்தில் 'கட்டிப்புடி என்னை கட்டிப்புடி' பாடலில் கவர்ச்சிகரமான உடைகளில் ஆடியிருக்கிறார்.

'நண்பன்' படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு, 'வேட்டை' படத்திற்கு யு.டிவி நிறுவனத்தின் விளம்பர யுத்தி, இரண்டு படங்களுக்குமே அரசாங்கத்தில் இருந்து கிடைத்த வரி விலக்கு என தமிழ் திரையுலகத்திற்கு 2012 நல்லதொரு தொடக்கமாக அமைந்து இருக்கிறது.


Tuesday, January 17

தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் உதவி


புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுவை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடிகர் விஜய் புதுவை வந்துள்ளார்.
புதுவை சுப்பையா சாலையில் குபேர் திருமண மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிற்கு நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, உடை, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் தலைமை தாங்கியுள்ளார். நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Monday, January 16

விஜய்-ஷங்கரின் கூட்டணியில் மெகா ஹிட்டான நண்பன்!


அதிரடி ஆக்ஷன் இல்லாமல், டாடா சுமோக்கள் பறக்காமல், பிரமாண்ட கிராபிக்ஸ்கள் இல்லாமல் விஜய்-ஷங்கரின் கூட்டணியில் நல்ல கதையுடன் வந்திருக்கும் நண்பன், 2012ம் ஆண்டின் முதல் மெகா ஹிட் தமிழ்ப் படம் என்ற பெயரை வாங்கியுள்ளது.

வசூலில் அள்ளிக் குவித்து வரும் இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுந்துள்ளது.

3 இடியட்ஸ் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அப்படியே சீனுக்கு சீன் மாற்றாமல் எடுத்திருந்தாலும், ஷங்கர் தனது வேலையைக் காட்டி தமிழுக்கு ஏற்ற மாதிரி ட்யூன் செய்து அசத்தியிருக்கிறார்.

விஜய்க்கும் இது மிக மிக வித்தியாசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எதிரிகளை நோக்கி சுட்டு விரலை நீக்கி அடிக்குரலில் கத்தாமல், பார்வையாலேயே எதிரியை துளைக்காமல், மிக யதார்த்தமான பக்கத்து வீட்டு பையன் மாதிரியான ஒரு கேரக்டர்.

இளைய தளபதி என்ற பட்டத்தையெல்லாம் தூர ஒதுக்கி வைத்துவிட்டு, தனது கேரக்டரை மிக அழகாக உள்வாங்கி பின்னி எடுத்திருக்கிறார்.

ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் என அனைவருமே ஒரு டீமாக இறங்கி, அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்து காட்டியுள்ளனர். ஒரு ஸ்ட்ரெய்ட் என்டர்டெயின்மெண்ட் என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கொள்ளையடித்துள்ள இந்தப் படம், வசூலிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் படம் ரிலீசான இடமெல்லாம் சீட்கள் நிரம்பி வழிகிறதாம். இதனால் ரிலீசான 4 நாட்களிலேயே படத்தைத் தயாரித்த ஜெமின் சர்க்யூட் தயாரிப்பாளர்களுக்கு வசூல் மழை.

படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வெளியாகி வருவதால், ரிபீட் ஆடியன்ஸோடு, பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது இந்தப் படம்

Saturday, January 14

விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன். படம் வசூல் வேட்டை


Audience Reactions about Nanban
விஜய் நடிப்பில் வெளிவந்த படம் நண்பன். இப்படம் இவ்வருடத்தின் எதிர்பார்புக்களுக்குரிய படங்களில் முதலாவதாக இருந்தது. படம் வெளியாகி முன்று நாட்களில் அதிகளவு வசூலை குவித்துள்ளது. இதுவரை 43.5 கோடிக்கு மேல் வசூல் எடுத்துள்ளது. இன்று பொங்கல் தினம் அதனையை ஒட்டி விடுமுறைகள் வருவதால் இப்படத்தின் இரண்டாவது வார வசூலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழகம் முழுவதும் 450க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. இதில் சென்னையில் 27 திரையரங்குகளில் வெளியாகியது.
இப்படம் பற்றி நல்ல விமரசங்கள் வெளிவந்துள்ளதால் இப்படத்தின் வசூல் மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதலாவது வார இறுதியி 70 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படதுக்குரிய முதல் வார டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது. இப்படத்துக்கு ரிபிட் பார்வையாளர்கள் வருவதனால் இரண்டாவது வாரமும் நல்ல வசூல் எடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது. குடும்பம் குடும்பமாகவும் படம் பார்க்க ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதுவும் படத்துக்கு பெரிய வெற்றியாகும்.
விஜயின் ஹீரோ இமேயை தாண்டி நல்ல ஒரு படத்தில் நடித்துள்ளார்௦. விஜய்க்கு நடிக்க வராது என்பதை பொய்யாக்கியுள்ளது நண்பன். அனைத்து விமர்சனங்களும் விஜயின் நடிப்பை பாராட்டியுள்ளனர். பஞ்ஞவன் பாரிவேலாக வாழ்ந்துள்ளார் விஜய்.

இளையதளபதி விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம்



இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘நண்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பாலிவுட்டில் அபார வெற்றி பெற்ற ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
ஆல்பர்ட் தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நான்கு நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை ரிசர்வ் செய்த ரசிகர்கள் இன்று கூட்டமாய் தியேட்டரில் படம்பார்க்க வந்திருந்தனர்.
தேவி தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய், ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட நண்பன் படக் குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம் திரையரங்கில் ‘நண்பன்’ படத்தை பார்த்து ரசித்தனர்

திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் நண்பன் : சத்யராஜ்


என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நண்பன் திரைப்படத்திற்கு முக்கியமான இடமுள்ளது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கியுள்ள நண்பன் திரைப்படத்தில் சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்த தன்னுடைய அனுபவத்தை சத்யராஜ் கூறியுள்ளார்.
தொடக்கத்திலேயே நண்பன் திரைப்படத்தில் வழக்கமான சத்யராஜின் தோற்றம் தெரியக்கூடாது. அதே சமயம் இந்தி 'த்ரீ இடியட்சில்' நடித்துள்ள பொம்மன் இரானியின் பாணியும் வந்து விடாமல் கதாப்பாத்திரத்தை வித்தியாசப்படுத்த இயக்குனர் ஷங்கர் கடுமையாக உழைத்துள்ளார்.
இதுவரையில் இருநூறு படங்களுக்கு மேல் நடித்து விட்ட எனக்கு இனி மேல் என்ன புதுசா செய்ய முடியும் என்ற யோசனை தட்டியது. ஆனால் ஷங்கர் என்னை புதிதாக மாற்றியுள்ளார்.
என்னுடைய சினிமா வாழ்க்கையில் நண்பனுக்கு முக்கியமான இடமுள்ளது என்று சத்யராஜ் புகழ்ந்துள்ளார். இயல்பாக நடிக்கிற எல்லோரையும் எனக்கு பிடிக்கும்.
இளையதளபதி விஜய்யும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் முதல் நபராக எனக்கு முன்னாடி தயாராக நிற்பார்.
பாதி இட்லி சாப்பிடும் போதே படப்பிடிப்பு தயார் என்று அறிவித்தால் உடனே தயாராகி விடுவார் என்று சத்யராஜ், விஜய்யை பாராட்டியுள்ளார்

ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம் நண்பன்..!!!


நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது... அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.

வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும். வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன் படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

நண்பன்- சிறப்பு திரை விமர்சனம்


நடிகர்கள்: விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா, எஸ் ஜே சூர்யா
சவுண்ட் டிசைன்: ரசூல் பூக்குட்டி
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்
திரைக்கதை- ராஜ்குமார் ஹிராணி - அபிஜித் ஜோஷி
வசனம் - ஷங்கர் - கார்க்கி

இயக்கம்: ஷங்கர்

ஒரிஜினலோ.. ரீமேக்கோ... ஒரு படம் பார்ப்பவர் மனதை அப்படியே தன்வசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தரமும், நம்பகத்தன்மையும் கொண்டதாய் இருந்தாலே போதும்... நிச்சயம் வெற்றி கிடைத்துவிடும்.

அந்த வகையில் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்து, வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறது ஷங்கர் - விஜய் கூட்டணியில் வெளிவந்துள்ள நண்பன்.

பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான கருத்துக்கள் அல்லது விஷுவல் பிரம்மாண்டங்களுக்காக அறியப்பட்ட இயக்குநர் ஷங்கர், இன்றைய கல்வி முறை மாறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய 3 இடியட்ஸ் இந்திப் படத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். அப்படியே என்றால்.... ஒரு காட்சியைக் கூட மாற்றவில்லை. பெயர்களில் கூட அதே உச்சரிப்பு வருவதுபோன்ற ஒற்றுமை... அங்கே வீரு, இங்கே விருமாண்டி... அங்கே பியா, இங்கே ரியா, அங்கே ராஞ்சோ, இங்கே பஞ்சமன்.... ஆனால் இந்தியில் பார்த்தபோது கிடைத்த அதே உணர்வுகளை இந்தப் படம் இன்னொரு முறை தருவதுதான், ஷங்கரின் ஸ்பெஷல்!

குறிப்பா, மாணவர்களை கவலைக்கிடமாக்கும் கல்வி முறையின் அவலங்களை தனக்கே உரிய நக்கல் நடை வசனங்களில் வெளிப்படுத்தும் விதம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவருக்குமே நல்ல பாடம் ('மாணவர்களுக்கு சும்மா பிரஷர் ஏத்திக்கிட்டே இருக்கிறீங்க... காலேஜ் என்ன பிரஷர் குக்கரா?!').

பிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா. அதிக மார்க், முதலிடம், நல்ல வேலைதான் வாழ்க்கை என்பதை அழுத்தமாக நம்பும் பிடிவாத கல்லூரி முதல்வர் சத்யராஜ். இந்த மார்க் சிஸ்டத்தையே அடியோடு வெறுக்கும் விஜய், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், இது எத்தனை தவறான கல்வி முறை என்பதை அம்பலப்படுத்த, தன் மாணவனிடம் தோற்ற கோபத்தில், விஜய் மற்றும் நண்பர்களைப் பழிவாங்கும் அளவுக்குப் போகிறார்.

ஒரு கட்டத்தில் தனது சிஸ்டமே தவறு என சத்யராஜைப் புரிந்து கொள்ள வைக்கிறார் விஜய். இடையில் சத்யராஜ் மகள் இலியானாவுடன் காதல்.

கல்லூரி முடிந்த பிறகு திடீரென காணாமல் போகிறார். பத்து வருடங்களுக்குப் பிறகு அவரைத் தேடி, அவர் கொடுத்த முகவரிக்குப் போகிறார்கள் உடன்படித்த நண்பர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் விஜய்யுடன் சவால் விட்டு ஜெயித்த சத்யன். அங்கே விஜய்யின் பெயரில் வேறு யாரோ இருக்கிறார்கள்.

விஜய் என்ன ஆனார்... ஏன் காணாமல் போனார் என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் புறப்படுகிறார்கள் நண்பர்கள்.

3 இடியட்ஸ் பார்க்காமல், இந்தப் படத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய நிறைவைத் தரும் வகையில் அமைந்துள்ளது ஷங்கரின் அழகான மேக்கிங். ஹீரோயிஸம் எதுவும் இல்லாமல், இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்து, தனக்குள் இருந்த நல்ல நடிகருக்கு வேலை கொடுத்திருக்கிறார் விஜய். இருவருக்குமே பாராட்டுக்கள்!

தமிழில் வந்துள்ள முதல் மல்டி - ஹீரோ படம் இதுதான் எனலாம். விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா என அனைவருமே தங்களுக்குரிய வேடங்களை மிக நிறைவாகச் செய்துள்ளனர்.

குறிப்பாக விஜய், இந்தப் படத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் அழகு. ஷங்கர் சொன்னமாதிரி இனி 'விஜய் விமர்சகர்களு'க்கும் அவரைப் பிடிக்கும்! நம்புங்கள்.... படத்தில் ஒரு காட்சியில் கூட பஞ்ச் இல்லை... சண்டை இல்லை... சக நண்பர்களிடம் அடி வாங்குகிறார். ஹீரோயின் அக்காவிடம் கூட அடி வாங்குகிறார்... பிரசவம் பார்க்கிறார்... அனைத்தையுமே ரசிக்கும்படி செய்திருப்பதால் எந்தக் காட்சியும் உறுத்தலாகவே இல்லை!

எப்போதும் ஜிப்பாவும் சிரிப்பற்ற முகமுமாகக் காட்சி தரும் ஜீவாவைவிட, தன் நண்பன் விஜய்யின் செயல்களை சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீகாந்தின் பாத்திரம் அழகு. இருவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

சத்யனுக்கு இந்தப் படம் ஒரு மறுஜென்மம். அவரை வெறும் காமெடியனாக இனி ஒதுக்கிவிட முடியாது. குறிப்பாக அந்த கல்லூரி விழா மேடைப் பேச்சுக்கு தியேட்டர் அதிர்கிறது.

கல்லூரி முதல்வர் வேடத்தில் சத்யராஜ் கலக்கியிருக்கிறார்.

இலியானா இந்தப் படத்தில்தான் இப்படியா... அல்லது எப்போதுமே இப்படித்தானா (தோற்றத்தைச் சொல்கிறோம்) பாடல் காட்சிகளில் மட்டும் பரவாயில்லை... மற்ற காட்சிகளைப் பார்க்கும்போது, 'இலியானா இனி வேணா' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு காட்சி என்றாலும் கதைக்கு முக்கிய திருப்பம் தருகிறது எஸ் ஜே சூர்யாவின் பாத்திரம். கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

பாஸிடிவான இந்தப் படத்தின் 'நெகடிவ் பக்கம்' என்று பார்த்தால்... பிற்பகுதியில் வரும் பாடல்கள். இரண்டாம் பாதியை தொய்வடைய வைப்பதில் இந்தப் பாடல்களின் பங்கு பெரிது.

அடுத்து அந்த பிரசவக் காட்சி. என்னதான் லாஜிக்காக பல விஷயங்களை அதில் சேர்த்திருந்தாலும்... நம்ப கஷ்ஷ்ட்டமாக இருக்கிறது. அதேபோல நேர்முகத் தேர்வில் ஜீவா தன் கதை சொல்வதெல்லாம் இந்தப் படத்தில் மட்டும்தான் சாத்தியம். அந்த நேர்முகத் தேர்வில் உண்மையைப் பேச ஆரம்பிக்கும்போதே, காட்சியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

நேரம் ஆக ஆக, இயக்குநரும் பொறுமை இழந்துவிட்டாரோ என்று எண்ண வைக்கும் அளவு படு செயற்கையான அந்த திருமணக் காட்சி...

இந்தப் படத்தின் பாதிக் காட்சிகள் ஏற்கெனவே பல தமிழ்ப் படங்கள் அல்லது ரீமேக் படங்களில் பார்த்த சமாச்சாரங்கள் (வசூல் ராஜா, ஏப்ரல் மாதத்தில், பறவைகள் பலவிதம்...) என்பது இன்னொரு மைனஸ். .

'இவையெல்லாம் இயக்குநரின் தவறில்லை. காரணம் ஒரிஜினல் படத்தை அவர் அப்படியே எடுத்திருக்கிறார்' என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. ஷங்கர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். காரணம் அவர் மீது அப்படியொரு அபார நம்பிக்கை இருக்கிறது தமிழ் ரசிகர்களுக்கு!

'அஸ்கு லஸ்கு...' பாடலில் இயக்குநரின் குறும்பு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் மனோஜும், இசையமைப்பாளர் ஹாரிஸும் அபாரமாக உழைத்திருக்கிறார்கள்.

வசனங்களில் ஷங்கரின் பிராண்ட் அடிக்கடி எட்டிப் பார்கிறது. கல்லூரியில் பாடம் நடத்தும் காட்சிகளில் கார்க்கியின் பங்களிப்பும் புரிகிறது.

நண்பன் படம் அறிவித்த போது, 'ஷங்கருமா ரீமேக் பக்கம் போய்விட்டார்' என்று நிறையப் பேர் குறைப்பட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களும், ஆஹா நல்லாருக்கே எனும் அளவுக்கு படத்தை உருவாக்கியிருப்பது ஷங்கரின் செய்நேர்த்திக்கு சான்று. மூன்று மணிநேரம் மாணவர் உலகத்தில் ஒரு நெருக்கமான பார்வையாளனாக கூடவே பயணிக்கும் உணர்வைத் தந்திருப்பது, சாதாரண விஷயமா என்ன...

எல்லாம் நன்மைக்கே ஷங்கர்!

Thursday, January 12

விஜய்யின் நண்பன் படம் ரிலீஸ் கோயில்களில் பூஜை பால்-பீரபிஷேகம்!!

Nanban Movie Release

நடிகர் விஜய்யின் நண்பன் படம் ரிலீஸ் ஆனதை அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இன்று கொண்டாடினர். கோயில்களில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இன்று சிறப்பு பூஜை செய்தார்.

ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் மற்றும் பீரபிஷேகம் செய்து கொண்டாடினர்!

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'நண்பன்' திரைப்படம் இன்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பாலிவுட்டின் 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர்.

பாட்டில் பாட்டிலாக பீர் வாங்கி பேனர்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரசிகர்களுடன்...

தேவி தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட நண்பன் பட குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம் திரையரங்கில் 'நண்பன்' படத்தை பார்த்து ரசித்தனர்.

ஜீவா ரசிகர்களுடம் கொண்டாட்டம்

சத்யம் திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக நண்பன் படக் குழுவினர்


இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'நண்பன்' திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பாலிவுட்டில் அபார வெற்றி பெற்ற 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
ஆல்பர்ட் தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நான்கு நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை ரிசர்வ் செய்த ரசிகர்கள் இன்று கூட்டமாய் தியேட்டரில் படம்பார்க்க வந்திருந்தனர்.
தேவி தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய், ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட நண்பன் படக் குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம் திரையரங்கில் 'நண்பன்' படத்தை பார்த்து ரசித்தனர்.

Wednesday, January 11

நண்பன்' ஒரு கலக்கல் முன்னோட்டம்


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நண்பன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஜெமினி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் இந்த 'நண்பன்'. இதுவரை கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்துவந்த விஜய் இப்படத்தில் வித்தியாசமான் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

முதன் முதலாக ஷங்கர் - விஜய் இணைந்து இருக்கிறார்கள்
முதலில் படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கப் போவதாக பேச்சு இருந்தது. இறுதியில் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2011ம் ஆண்டே இப்படம் முடிவடைந்தாலும் ' வேலாயுதம் ' படம் தாமதமானதால் 2012ல் முதல் விஜய் படமாக ' நண்பன் ' படம் வெளிவர இருக்கிறது.

இப்படம் குறித்து ஷங்கர் " 'எந்திரன்’ ஷூட்டிங்கிங் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு.

'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்.. வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!

விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும் " என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.

படத்தின் முதல் TEASER வெளியான போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியது. படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது கூடுதல் பலம்.

இப்படம் குறித்து விஜய் " நான் பிறந்தது சென்னைன்னாலும் கோயம்புத்தூர் பாஷை எனக்கு நல்லா வருதுங்ணா..! ஷங்கர் ஒரு அற்புதமான மனிதர். அவரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம்! இந்த படத்துல ஸ்ரீகாந்த் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்க வெக்கறது ஜீவா அண்ணன் தான்..! எல்லாரும் டயலாக் எல்லாம் பாத்துகிட்டு சீன் எடுக்க தயாரா இருக்கும்போது, எதையாவது சொல்லி சிரிக்க வெச்சிடுவார்.. செய்யறதை செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு நடிப்புல கவனமா இருப்பார்.. எனக்கு நடிக்கும்போது சிரிப்பு வந்துடும்.. 'நண்பன்' பட ஷூட்டிங்ல ஜீவா என்னுடைய நல்ல நண்பன் ஆகிட்டார்.. இந்த படத்தின் மூலமா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.. படத்துல எல்லா பாட்டுமே நல்லா வந்திருக்கு !" என்று பேசினார்..

இசை வெளியீட்டு விழா அன்று வெளியிடப்பட்ட தியேட்டர் டிரெய்லரில் விஜய் பேசும் " " ஏ.ஆர்.ரஹ்மான் கிட்ட அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரன் ஆகணும்னு சொல்லி இருந்தாலும், சச்சின் கிட்ட அவங்கப்பா நீ பெரிய இசையமைப்பாளரா வரணும்னு சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்ற வசனம் போடப்பட்டபோது ரசிகர்கள் அதனை வெகுவாக ரசித்தனர்.

' நண்பன் ' நாளை 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் முன்பதிவு ஆரம்பமான சிறிது நேரத்தில் முக்கிய திரையரங்குகள் அனைத்திலும் முதல் 2 நாட்களுக்கான டிக்கெட் விற்பனை சில மணித்துளிகளில் முடிவுற்றது.


லிங்குசாமியை பாராட்டிய : ஷங்கர்


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் நண்பன், ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். ஜெமினி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.

நண்பன் படம் 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012ல் பொங்கல் அன்று வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிப்பில் லிங்குசாமி இயக்கி இருக்கும் படம் வேட்டை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறது. இப்படமும் 2011ம் ஆண்டே தயாரானாலும் பாடல் காட்சிகள் பாக்கி இருந்ததால் 2012ல் பொங்கலுக்கு வெளியீடு என்று தீர்மானிக்கப்பட்டது.

நண்பன், வேட்டை மட்டுமே பொங்கல் விடுமுறைக்கு போட்டியிடுகிறது. தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் இரண்டு படங்களுக்குமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

வேட்டை படத்தின் இசையை வெளியிட்டது நண்பன் படத்தினை இயக்கிய ஷங்கர். அப்போது பேசிய ஷங்கர் " லிங்குசாமி இயக்கிய படங்கள் எப்போது மாஸ் + கிளாஸ் இணைந்து இருக்கும். அது தான் அவரது படத்தின் சிறப்பு. ' வேட்டை ' படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது 'ரன்', 'பையா' இணைந்து இருக்கும் " என்று வாழ்த்தினார்.

இயக்குனர் லிங்குசாமி பேசும் போது " ' வேட்டை' படத்துடன் இணைந்து ஷங்கர் சாரின் ' நண்பன் ' படமும் வருகிறது. ' வேட்டை ' படத்தினை விட வசூலிலும் சரி, ஓடும் நாட்களிலும் சரி 'நண்பன்' முதலாவதாக இருக்கும். " என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாது புதுவருட பிறப்பு அன்று ஷங்கர் லிங்குசாமிக்கு போன் செய்து வேட்டை படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இரண்டு பேருமே தங்களது படங்கள் வசூலில் முதலாவதாக இருக்கும் என்று கூறி ஒன்றிணைந்து இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் மத்தியிலோ நண்பனா வேட்டையா என்ற போட்டி தான் நிலவி வருகிறது

விஜய்க்காக உருவாக்கி வரும் பாடல் ' தளபதி ANTHEM ' !


தனுஷ் WHY THIS KOLAVERI பாடல் மூலம் பிரபலமாகி விட்டார். சிம்பு A LOVE ANTHEM FOR WORLD PEACE என 96 மொழிகளில் காதல் என்ற வார்த்தைகளை கோர்த்து ஒரு பாடலாக தொகுத்து வெளியிட இருக்கிறார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்க்காக 'THALAPATHY ANTHEM' என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.

'எங்கேயும் எப்போதும்' படத்தில் வரும் பஸ் காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டிவிட்டர் இணையத்தில் இது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்

Tuesday, January 10

நண்பன் டிக்கெட் புக்கிங் அபாரம்!


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் நண்பன், ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். ஜெமினி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.

நண்பன் படம் 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய் நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012ல் பொங்கல் அன்று வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக், நாயகனாக விஜய், ஷங்கர் இயக்கம், ஹாரிஸ் இசை என இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியீட தீர்மானித்து இருக்கிறார்கள். படத்திற்கு டிக்கெட் புக்கிங் ஆரம்பான சிறிது நேரத்திலேயே பெரிய தியேட்டர்கள் அனைத்திலும் முதல் 2 நாட்களுக்கு டிக்கெட் விற்பனை முடிந்துள்ளது.

ரசிகர்களின் இந்த வரவேற்பால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு

Sunday, January 8

2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு தான் பெஸ்ட் : சந்தானம்

2011ல் அதிக படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். விஜய்யுடன் ' வேலாயுதம் ', கார்த்தியுடன் ' சிறுத்தை ' ஆகிய இரண்டு படங்களும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

'சந்தானம் நடித்து இருக்கிறார் என்றால் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்' என்கிற அளவுக்கு தன் ரசிகர்களிடையே பெயர் பெற்று இருக்கிறார்.

2012ம் ஆண்டில் என்னென்ன படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தொடர்பு கொண்டபோது " 2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு தான் என்னை பொருத்தவரை சிறந்ததாக அமையப் போகிறது.

பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறேன். கார்த்தியுடன் 'சகுனி', உதயநிதி ஸ்டாலினுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி', சூர்யாவுடன் 'சிங்கம்-2', கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்', சேரன் இயக்கும் படம், சிம்புவுடன் இணைந்து ' போடா போடி ', ' வேட்டை மன்னன் ' என வரிசையாக 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன்.. நடிக்கவும் இருக்கிறேன்.

எனது திரையுலக வாழ்வில் 2011ஐ விட 2012ம் ஆண்டு தான் சிறந்தது " என்று தெரிவித்தார்.

Friday, January 6

பேரரசு விஜய் கூட்டணியில் புதிய படம்..! பரபரப்பு தகவல்!!

பேரரசு படம் என்றாலே ஒரு ஸ்பெஷல். பஞ்ச் டயலாக்களுக்கு குறைவிருக்காது. அதோடு இவரது படங்களுக்கு ஊர் பெயரையே டைட்டிலாக வைப்பார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய படங்கள் எல்லாமே ஓவர் சென்டிமென்ட் கம் ஆக்க்ஷன் என்றாலும் அந்த படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தவை.

மற்ற நடிகர்களுடன் பேரரசு இணைந்த படங்கள் எல்லாம் பஞ்ச் டயலாக்குகள் இருந்தும் பிஞ்சுபோனதுதான் மிச்சம். பேரரசு மீண்டும் விஜய்யுடன் இணையப் போகிறார். விஜய்யிடம் ஒன்லைன் ஸ்டோரி ஒன்றை சொல்லியிருக்கிறார் பேரரசு. அதைக் கேட்ட விஜய் கதை நல்லாயிருக்கு. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிந்ததும் ஆரம்பிச்சிரலாம் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த படம் பேரரசு விஜய் கூட்டணியில் ஹிட்டான சிவகாசி, திருப்பாச்சி வரிசையில் இடம் பிடிக்கும் என்கிறார்கள் அந்த ஒன்லைன் ஸ்டோரியைக் காதால் கேட்டவர்கள். அப்படி அந்த ஒன்லைன் ஸ்டோரி என்னவாக இருக்கும்... அதே தங்கச்சி சென்டிமென்ட்தான்

Thursday, January 5

நண்பனின் புதிய லேட்டஸ்ட் ஸ்டில்







நண்பன் படத்தின் டிரெய்லர் சூப்பர் : சிம்பு



கே.வி.ஆனந்த இயக்கிய ' கோ ' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்பு. ஆனால் பல்வேறு காரணங்களால் சிம்பு படத்திலிருந்து விலகிக் கொள்ள அப்படத்தில் ஜீவா நடித்தார்.

அதன் பின், ஜீவா சிம்பு இருவருமே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசினர். இதனால் இருவரும் எதிரும் புதிருமாகி விட்டனர் என ரசிகர்களிடையே கருத்து பரவியது.

இந்நிலையில், சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் 'நண்பன்' டிரெய்லர் குறித்து " நண்பன் படத்தின் டிரெய்லர் அருமையாக இருக்கிறது. நண்பன் படத்தில் நடிக்காதது குறித்து வருத்தம் அடைகிறேன். ஷங்கர் சார் மற்றும் விஜய் அண்ணா இருவரோடும் பணியாற்றும் வாய்ப்பை தவறியதில் வருத்தம். ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவருமே அழகாக இருக்கிறார்கள். " என்று தெரிவித்துள்ளார்.

அதோடு நேற்று (ஜனவரி 4) ஜீவாவின் பிறந்தநாள் அன்று டிவிட்டர் இணையத்தில் சிம்பு " பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதர்.. 'நண்பன்' டிரெய்லர் அருமையாக இருக்கிறது. நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள். படம் வெற்றியடைய வாழ்த்துகள் " என்று தெரிவித்துள்ளார்.

சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்துக்கு ஜீவா " வாழ்த்துக்கு நன்றி.. உங்களுக்கு டிரெய்லர் பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்

தமிழ் திரையுலகில் 2011-னில் பிரகாசித்த 'டாப் 10' நடிகர்கள்



தமிழ் திரையுலகில் 2011-ல் விஜய், விக்ரம், அஜீத்,சூர்யா, தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரின் ஆதிக்கம் பலமாக இருந்தது. புதுமுக நடிகர்கள் படங்கள் கால் ஊன்றவில்லை. ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த வருடம் படங்கள் ரிலீசாகவில்லை. ஆனாலும் இருவர் மார்க்கெட்டும் உச்ச நிலையலேயே உள்ளது.

விஜய் தனது மார்க்கெட்டை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறார். அவர் நடிப்பில் காவலன், வேலாயுதம் என இரு படங்கள் கடந்த வருடம் வந்தன. இரண்டுமே வசூல் ஈட்டியது. ரசிகர்களையும் கவர்ந்தன. அவரது நண்பன் படம் பொங்கலுக்கு வருகிறது.

துப்பாக்கி, யோஹன் என மேலும் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வருகின்றன.

ரஜினிக்கு 'ராணா' படப்பிடிப்பில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். 'ராணா' படம் கைவிடப்பட்டு உள்ளது. சென்ற வருட இறுதியில் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. இவ்வருடம் இறுதி யில் அப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். கமலின் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பு வெளிநாடு களில் நடந்து வருகிறது. ரூ.120 கோடி மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது.

விக்ரமுக்கு தெய்வத்திருமகள், ராஜபாட்டை என இரு படங்கள் 2011-ல் வெளியாகின. தெய்வத் திருமகள் படத்தில் மனநிலை குன்றியவராக நடித்தார். இந்த வருடம் கரிகாலன், தாண்டவம் என இரு படங்கள் விக்ரம் நடிப்பில் வர உள்ளது.

அஜீத்துக்கு மங்காத்தா படம் கடந்த வருடம் வந்தது. அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. தற்போது அவர் நடித்து வரும் 'பில்லா 2' படம் இவ்வருடம் ரிலீசாகிறது.
சூர்யா 7 ஆம் அறிவு படம் மூலமும் கார்த்தி சிறுத்தை படம் மூலமும் சென்ற வருடம் முன்னணி வரிசையில் இருந்தனர். கார்த்திக்கு இவ்வருடம் சகுனி மற்றும் சூராஜ் இயக்கத்தில் ஒரு படம் என இரு படங்கள் வருகின்றன.

தனுசுக்கு 2011 மறக்க முடியாத வருடம் ஆகும். 'ஆடுகளம்' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. அவர் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. மயக்கம் என்ன படமும் சென்ற வருடம் வந்தது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் '3' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. ஜீவா 'கோ' படம் ஹிட்டால் பேசப்பட்டார். 'ரௌத்திரம்', வந்தான் வென்றான் என மேலும் இரு படங்களும் அவர் நடிப்பில் வந்தன. ஜெய்க்கு எங்கேயும் எப்போதும் சிறந்த படமாக அமைந்தது.

விஷாலுக்கு அவன் இவன், வெடி, ஜெயம்ரவிக்கு எங்கேயும் காதல், பரத்துக்கு வானம், யுவன் யுவதி, சிம்புக்கு வானம், ஓஸ்தி, கரணுக்கு தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்கள் சென்ற வருடம் வந்தன.தமிழ் திரையுலகில் 2011-ல் விக்ரம், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரின் ஆதிக்கம் பலமாக இருந்தது. புதுமுக நடிகர்கள் படங்கள் கால் ஊன்றவில்லை. ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த வருடம் படங்கள் ரிலீசாகவில்லை. ஆனாலும் இருவர் மார்க்கெட்டும் உச்ச நிலையலேயே உள்ளது.

ரஜினிக்கு 'ராணா' படப்பிடிப்பில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். 'ராணா' படம் கைவிடப்பட்டு உள்ளது. சென்ற வருட இறுதியில் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. இவ்வருடம் இறுதி யில் அப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். கமலின் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பு வெளிநாடு களில் நடந்து வருகிறது. ரூ.120 கோடி மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது.

விக்ரமுக்கு தெய்வத்திருமகள், ராஜபாட்டை என இரு படங்கள் 2011-ல் வெளியாகின. தெய்வத் திருமகள் படத்தில் மனநிலை குன்றியவராக நடித்தார். இந்த வருடம் கரிகாலன், தாண்டவம் என இரு படங்கள் விக்ரம் நடிப்பில் வர உள்ளது.

அஜீத்துக்கு மங்காத்தா படம் கடந்த வருடம் வந்தது. அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. தற்போது அவர் நடித்து வரும் 'பில்லா 2' படம் இவ்வருடம் ரிலீசாகிறது.

விஜய் தனது மார்க்கெட்டை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறார். அவர் நடிப்பில் காவலன், வேலாயுதம் என இரு படங்கள் கடந்த வருடம் வந்தன. இரண்டுமே வசூல் ஈட்டியது. ரசிகர்களையும் கவர்ந்தன. அவரது நண்பன் படம் பொங்கலுக்கு வருகிறது.

துப்பாக்கி, யோஹன் என மேலும் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வருகின்றன. சூர்யா 7 ஆம் அறிவு படம் மூலமும் கார்த்தி சிறுத்தை படம் மூலமும் சென்ற வருடம் முன்னணி வரிசையில் இருந்தனர். கார்த்திக்கு இவ்வருடம் சகுனி மற்றும் சூராஜ் இயக்கத்தில் ஒரு படம் என இரு படங்கள் வருகின்றன.

தனுசுக்கு 2011 மறக்க முடியாத வருடம் ஆகும். 'ஆடுகளம்' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. அவர் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. மயக்கம் என்ன படமும் சென்ற வருடம் வந்தது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் '3' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. ஜீவா 'கோ' படம் ஹிட்டால் பேசப்பட்டார். 'ரௌத்திரம்', வந்தான் வென்றான் என மேலும் இரு படங்களும் அவர் நடிப்பில் வந்தன. ஜெய்க்கு எங்கேயும் எப்போதும் சிறந்த படமாக அமைந்தது.

விஷாலுக்கு அவன் இவன், வெடி, ஜெயம்ரவிக்கு எங்கேயும் காதல், பரத்துக்கு வானம், யுவன் யுவதி, சிம்புக்கு வானம், ஓஸ்தி, கரணுக்கு தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்கள் சென்ற வருடம் வந்தன

Tuesday, January 3

பொங்கல் விருந்தாக நண்பனும் வேட்டையும்


2012ம் ஆண்டில் முதல் படமாக 12ம் தேதி வெளிவர இருக்கிறது 'நண்பன்'. ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடித்து இருக்கும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்று இருக்கின்றன.

'நண்பன்' படத்துடன் போட்டியிட இருக்கிறது ' வேட்டை '. ஆனால் ஜனவரி 14ம் தேதி ' வேட்டை ' வெளியிட தீர்மானித்து இருக்கிறது யு.டிவி நிறுவனம்.

'வேட்டை' லிங்குசாமியின் இயக்கத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலாபால் நடித்து இருக்கும் படம். ரன் படத்தினை அடுத்து லிங்குசாமி - மாதவன் இணைந்து இருப்பதால் படத்தின் எதிர்ப்பார்ப்பிற்கு பஞ்சமில்லை. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் வரவேற்பை பெற்று இருக்கின்றன

2012-ல் எதிர்பார்க்க வைக்கும் படங்கள் !

Vijay Thuppaki Shooting Spot Stills

2011ம் ஆண்டு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளிவரவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தயாரிப்புகள் வெளிவர இருக்கின்றன. அவ்வாறு வெளிவர இருக்கும் சில படங்கள் பற்றிய தகவல் துளிகள் :

ரஜினி : கோச்சடையான் 3D

கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் படம். போன ஆண்டு 'ராணா' படம் தொடங்கப்பட்ட போது ஏற்பட்ட உடல்நிலை கோளாறால் அப்படம் நிறுத்தப்ப்பட்டது.

ஆகையால் 'கோச்சடையான்' படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. MOTION CAPTURE TECHNOLOGY மூலம் ரஜினியை நடிக்க வைக்க இருக்கிறார்கள். 3Dல் இப்படம் வெளிவர இருக்கிறது.

விஜய் :நண்பன் & துப்பாக்கி

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் 'நண்பன்'. 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக், ஷங்கர் இயக்கம் , விஜய் நடிப்பு, ஹாரிஸ் இசை என பல விஷயங்கள் இப்படத்தில் இணைந்து இருக்கின்றன. 2012ல் விஜய் ரசிகர்களுக்கு முதல் விருந்தாக ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்தினை பார்த்துவிட்டு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

'ஏழாம் அறிவு'க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' யில் இப்போது நடித்து வருகிறார் விஜய் . முதன் முறையாக விஜய் இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கமல் : விஸ்வரூபம்

கமல் இயக்கி நடித்து வரும் படம். செல்வராகவன் இயக்க, கமல் நடிப்பதாக துவங்கப்பட்ட படம். செல்வராகவனால் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போக, தற்போது கமலே இயக்குனர் பொறுப்பேற்று இப்படத்தினை இயக்கி வருகிறார்.

கமல் இப்படத்தில் ஒரு தீவிரவாதியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல் ரசிகர்கள் அவரை வித்தியாசமான வேடத்தில் பார்க்க இருக்கிறார்கள்


அஜீத் : பில்லா- 2

மங்காத்தா' படத்தின் வரவேற்பிற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் 'பில்லா 2'. பில்லா படத்தின் SEQUEL-யாக இல்லாமல் PREQUEL- ஆக பில்லா 2 வெளிவர இருக்கிறது.

இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் அஜீத். உடம்பு இளைத்து, சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து இருக்கிறார்.

2011-ல் மங்காத்தா வசூலைத் 2012-ல் 'பில்லா 2' அமைய வேண்டும் என்ற உறுதியுடன் உழைத்து வருகிறார்கள்..

சூர்யா : மாற்றான்

அயன்' படக்குழு மீண்டும் இணைந்திருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யா இப்படத்தில் ஒர் உடல் இரு தலை உடையவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. கே.வி.ஆனந்த சூர்யா இப்படத்தில் ஐந்து வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து இருப்பதாக கூறியுள்ளார்.

ஆர்யா & மாதவன் : வேட்டை

லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் இணைந்து இருக்கும் படம் 'வேட்டை'. ரன் படத்தினை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து இருக்கிறார் லிங்குசாமி.

லிங்குசாமி இயக்கம், ஆர்யா, மாதவன் இணைந்திருக்கும் படம், சமீரா ரெட்டி, அமலா பால் என இரண்டு நாயகிகள், இப்படி கலகல, பளபள கூட்டணியில் வருவதால் 'வேட்டை'க்கு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஜனவரி 14ம் தேதி வெளிவர இருக்கிறது வேட்டை

சிம்பு : போடா போடி

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'போடா போடி'. விக்னேஷ் சிவா இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் வரலெட்சுமி சரத்குமார். இப்படம் இசையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் காமெடி படமாம்.

தனுஷ் : 3

2011ல் WHY THIS KOLAVERI என்ற பாடலின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தனுஷ் நடித்து இருக்கும் படம். இப்படத்தின் பாடல்களால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது. ரஜினி மகள் இயக்கம், கமல் மகள் ஜோடி, ரஜினியின் மருமகன் நாயகன் என ஒரு சேர இணைந்து வெளிவரும் படம்

கெளதம் மேனன் : நீதானே என் பொன்வசந்தம்

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை தொடர்ந்து இப்படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை தெரியாமலேயே இருந்து வருகிறது. காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இப்படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்

வசந்த பாலன் : அரவான்

அங்காடி தெரு' படத்தினை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.

2011ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்ற 'காவல் கோட்டம்' நாவலில் வரும் ஒரு சிறு பகுதியை, திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லரே படத்திற்கு எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

Monday, January 2

நண்பன், வேட்டை படங்களுக்கு தியேட்டர்கள் அறிவிப்பு!


பொங்கலுக்கு வரும் படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என்று தெரிகிறது. விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடித்துள்ள ஷங்கரின் நண்பன், ஆர்யா, மாதவன் நடித்துள்ள வேட்டை ஆகியவைதான் அந்த இரு படங்களும்.

வரும் 12-ம் தேதி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது நண்பன். இதற்கான அறிவிப்பினை நேற்றுமுதல் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

.
இதற்கிடையே இந்தப் படம் நேற்று முன்தினம் தணிக்கை செய்யப்பட்டது. படத்துக்கு அனைவரும் பார்க்கக்கூடிய படம் என யு சான்றிதழ் அளித்துள்ளனர் சென்னை தணிக்கைப் பிரிவினர்.

பொங்கலுக்கு வெளியாகும் இன்னொரு படம் வேட்டை. லிங்குசாமி இயக்கியுள்ள இந்தப் படமும் ஜனவரி 12-ம் தேதிதான் வெளியாகிறது. இந்தப் படமும் 20 அரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த முறை பொங்கல் சீஸன் ஜனவரி 12லேயே தொடங்கிவிடுவதால், கிட்டத்தட்ட ஒருவாரம் வரை புதிய படங்களுக்கு ஓபனிங் இருக்கும் என நம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...