![]() | |||||||||||||||||||||||||||||||||||||||
| Jilla |
நேசன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் ‘ஜில்லா’. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.
விஜய்யுடன் காஜல் அகர்வால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் , சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து , செனசாருக்கு அனுப்புவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 25ல் 'ஜில்லா' டிரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.
'ஜில்லா' படத்தின் ரிலீஸ் தேதியும் நாளிதழ் விளம்பரங்களில் உறுதி செய்யப்படவில்லை. இதனால் எப்போது 'ஜில்லா' ரிலீஸ் ஆகும்?
ஒரு வேளை ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா? என்ற சந்தேகம் எழுந்தது. 'ஜில்லா' டீமுடன் விசாரித்துப் பார்த்ததில். அப்படி எல்லாம் நடப்பதற்கான வாய்பு இல்லையாம்.
டிசம்பர் 31ல் டிரெய்லர் வெளியிடப்படுமாம். ஜனவரி 10ல் 'ஜில்லா' வெளியாவது உறுதியாம்













0 Comments:
Post a Comment