இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, November 30

துப்பாக்கியில் இளைய தளபதி விஜய் போலிஸ்..?



டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடக்க விழா இல்லாமல் பத்திரிகை விளம்பரத்தோடு ‘துப்பாக்கி படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது

ஏ.ஆர்.முருகதாஸ்- இளையதளபதி விஜய் கூட்டணி. முதல்முறையாக இந்தக் கூட்டணி ஒன்றினைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருகிறது.

ஆனால் இன்னும் துப்பாக்கி படம் பற்றிய தகவல்கள் சூடு பிடிக்க வில்லை. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரீஸ் ஜயராஜ் இசையமைக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்தப் படத்தில் விஜய் ஏற்க இருக்கும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் முருகதாஸ் வட்டாரத்தில் இருந்து அனல் பறக்கும் தகவல் கசிகிறது. துப்பாக்கி படத்தில் விஜய் இளம் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்தான் அது.

ஏற்கனவே போக்கிரி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய். ஆனால் அதில் முழுமையான போலீஸ் அதிகாரி கேரக்டர் அமைய வில்லை. ஆனால் துப்பாக்கி ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியின் கதை என்கிறார்கள். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முப்பைக்கு தூக்கி அடிக்கப் படும் ஒரு தமிழ் திகாரியின் கதை என்கிறார்கள். முருகதாஸுடன் சந்தோஷ் சிவன் மட்டுமல்ல, முதல் முறையாக எழுத்தாளர் ஜெயமோகனும் இணைய இருகிறார். இந்தபடத்துக்கு ஜெயமோகனே வசனம் எழுதுகிறார்.

இதற்கிடையில் தமிழ்தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரேநேரத்தில் எடுக்க திட்டமிட்ட முருகதாஸுக்கு ஒரு சிறு பின்னடைவாம். தெலுங்கிலும் ‘ துப்பாக்கி என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிட விரும்பி, தெலுங்கு பிலிம் சேம்பரில் இந்த தலைப்பை பதிவு செய்யச் சென்றாராம்.

ராஜபாட்டை திரையரங்குகள் அனைத்தும் நண்பன்' !



சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் படம் ' ராஜபாட்டை '. திக்ஷா சேத் நாயகியாக நடிக்க, 'சங்கராபரணம்' விஸ்வநாத் விக்ரமிற்கு அப்பாவாக நடித்து இருக்கிறார்.

யுவன்சங்கராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்தினை PVP CINEMAS பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.

முதலில் சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்து, பின்னர் திருப்பி கொடுத்து விட்டது. இந்நிலையில் இப்படத்தினை வெளியீட்டு உரிமையை தற்போது ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தின விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு வெளியிட இருக்கிறார்கள்.

சுசீந்திரன் மற்றும் விக்ரம் இருவருக்குமே ஆந்திராவில் நல்ல ஒப்பனிங் இருப்பதால் இப்படத்தில் தெலுங்கில் ' VEEDINTHE ' என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

டிசம்பரில் இப்படத்தினை ரிலீஸ் செய்து விட்டு 2012 பொங்கல் சமயத்தில் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்த அனைத்து திரையரங்குகளிலும் தாங்கள் தயாரித்த ' நண்பன் ' படத்தினை வெளியிட

Sunday, November 27

விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை பிரியங்கா சோப்ரா


நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுக்கவில்லை என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். பர்பி என்ற இந்தி படபிடிப்பிற்காக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

அப்போது பிரியங்கா கூறியதாவது: விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்திருக்கிறேன். அதன் படபிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது.

கிட்டத்தட்ட அதே இடங்களில்தான் பர்பி படபிடிப்பு நடந்தது. இதில் பங்கேற்ற போது பழைய நினைவுகள் என் மனதில் நிழலாடியது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிக்க மறுத்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் விஜய் படம் மூலம்தான் அறிமுகமானேன்.

முருகதாஸ் மற்றும் விஜய்யுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கால்ஷீட் கேட்கவில்லை. நல்ல வாய்ப்பாக வந்தால் மீண்டும் தமிழ் படத்தில் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார்

Friday, November 25

விஜய் அடுத்து நடிக்கும் துப்பாக்கி !


ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில்எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.

நண்பன் படத்தை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் விஜய் நடிக்கும் இந்த படத்திற்க்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது

நண்பண் புதிய டிரைலேர்..!



Wednesday, November 23

சீமான் பகலவன் படத்தினை கேள்விக்குறியாக்கி உள்ளது?

விஜய் ' வேலாயுதம் ' படத்தினை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தினை ஜெமினி நிறுவனத்துடன் இணைந்து விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பதாக இருந்தது.

இந்நிலையில் இப்படம் ஜெமினி நிறுவனத்திடம் இருந்து கலைப்புலி தாணுவிற்கு கை மாற இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விஜய், ஜெனிலியா நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்தவர் தாணு.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நவம்பர் 26-ம் தேதி துவங்கும் என்றும், அங்கு தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

படத்திற்கான காஜல் அகர்வால், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தினை தயாரிக்க இருந்த தாணு இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறி இருப்பது சீமான் படத்தினை கேள்விக்குறியாக்கி உள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்

Tuesday, November 22

விஜய் படம் கைமாறியது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்!!

Vijay and Kajal Agarwalவேலாயுதம்' படத்துக்குப் பிறகு விஜய்யை வைத்து, ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படம் இயக்குகிறார்.

இந்த படத்தை ஜெமினி நிறுவனமும் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும் தயாரிப்பதாக இருந்தது. படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தனர். இந்த படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

படத்தின் பெயர் துப்பாக்கி???. படப்பிடிப்பு, மும்பையில் 26-ந் தேதி தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படம் ஜெமினி நிறுவனத்திடம் இருந்து எஸ்.தாணுவுக்கு கை மாறியிருக்கிறது.

இதுபற்றி எஸ்.தாணுவிடம் கேட்டபோது, "செய்தி உண்மைதான். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது'' என்றார்

அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்த காஜல்

விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாகிவிடலாம் என்று எண்ணியிருந்த அனுஷ்காவுக்கு பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து, ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாலை நேர மழைத்துளி. இந்த படத்தில் ஏஞ்சலா ஜான்சன் என்ற மாடல் அழகிதான் நாயகியாக நடிப்பதாக இருந்தது.

ஆனால் போட்டோ செஷன் நடத்திய முருகதாஸ், அவர் இந்த கதைக்கு பொருந்த மாட்டார் என்று நீக்கிவிட்டு, வேறு நடிகை தேடி வந்தார். இதையறிந்த அனுஷ்கா ஏற்கனவே தான் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்திருப்பதால் தனக்கு தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அப்ளிகேசன் போட்டு வைத்திருந்தார்

முருகன் துனையோடு திருச்செந்தூரில் படம் தொடக்கம்


வேலாயுதம் ஹிட் ஆனதில் இருந்து நடிகர் விஜய் முருகன் சென்டிமெண்ட் நம்ப ஆரம்பித்து விட்டார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் சூட்டிங்கை திருச்செந்தூரில் இருந்து தொடங்கும்படி கூறியிருக்கிறாராம்.

வேலாயுதம் படம் ஹிட் ஆனதால் வேலாயுதக்கடவுள் முருகன் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய்.

படத்தின் தொடக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம். சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.

எ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ். திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய், அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்

Monday, November 21

வேலாயுதம்' படத்தின் வரவேற்பிற்கு கிடைத்த உற்சாகத்தால் 'வல்லினம்

'ஈரம்' படத்தினை தொடர்ந்து 'வல்லினம்' என்னும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் அறிவழகன். நகுல் நாயகனாக நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பதாக இருந்தது.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த 'வேலாயுதம்' பட வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு வந்ததால் 'வல்லினம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது 'வேலாயுதம்' படத்தின் வரவேற்பிற்கு கிடைத்த உற்சாகத்தால் 'வல்லினம்' படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கமுடிவு செய்து இருக்கிறார்களாம்.
'வல்லினம்' படத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்ததோடு பட நாயகனாக ஜெய்யை ஒப்பந்தம் செய்து படத்தினை தொடரலாம் என்று முடிவு செய்து இருப்பதாக கூறுகிறார்கள் படக்குழுவினர்.
'எங்கேயும் எப்போதும்' படத்தினை தொடர்ந்து, நல்ல இயக்குனர், பெரிய படக் கம்பெனி தயாரிப்பில் வாய்ப்பு கிடைத்து இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறாராம் ஜெய்

Saturday, November 19

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி?






7 ஆம் அறிவு படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படத்திற்கு துப்பாக்கி என்ற பெயர் வைத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார்.படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஷூட்டிங் வரும் 23ம் தேதி மும்பையில் தொடங்குகிறது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVlllspP8ajuZhQ6DlNj6OM9aJ1AqcjxMPWyDyREYQzKCbyFcHn_iPt_m5a5Wy9xep5WfFxv79HR1f5X4PKyPyfiscVDa9_oAeuDJNPPjYe3KzaSue8E2iUc8TiQ1ome8h9JZFS7duaYQ/
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் ஷூட்டிங் வரும் 23ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.
இதில் விஜய் ஜோடியாக நடிக்க, பிரபல மாடல் ஏஞ்சலா, ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருந்தார். விஜய்யுடன் போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டது. கால்ஷீட் பிரச்னை காரணமாக, அவர் நடிக்கவில்லை. இதையடுத்து இந்தி நடிகை சோனம் கபூர் நடிப்பார் எனக் கூறப்பட்டது. இப்போது, அவரும் நடிக்கவில்லை. காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருக்கிறார் என பட யூனிட் தெரிவித்தது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இளைய தளபதி விஜய் மகிழ்ச்சியுடன் பேட்டி


விஜய்யின் வேலாயுதம் பாக்ஸ் ஆஃபிஸில் பெ‌ரிய ஹிட்டாகியிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் வெளியான விஜய்யின் எந்தப் படத்தைவிடவும் வேலாயுதத்தின் ஓபனிங் மிகப் பிரமாதம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

விஜய்யின் மாஸ் வேல்யூவை இப்படம் உறுதி செய்திருப்பதால் மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் விஜய். வேலாயுதம் வெற்றிக்குப் பிறகு மீடியாவை சந்திப்பது மகிழ்ச்சியா இருக்கு என்ற பூ‌ரிப்பான பேச்சுடன் உரையாடலை தொடங்கினார் விஜய்.

என்னுடைய 52 படங்களில் வேலாயுதம்தான் பெஸ்டுன்னு எல்லோரும் சொல்றாங்க. கேட்க சந்தோஷமாக இருக்கு. தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனையும் இந்தப் படம் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கு. இப்போதான் அவரை சந்திச்சிட்டு வர்றேன். ஹேப்பியா சார்னு கேட்டேன். கவலையே இல்லை, படம் சூப்பர்ஹிட். இனி நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார்.

நீங்க எம்‌ஜிஆர் பாணியில் நடிச்ச படம் இதுதானே?

எம்‌ஜிஆர் பாணியில் நடிக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது? அது தப்பும் கிடையாது. எம்‌ஜிஆர் பாணியில் படம் பண்ணுறது ரொம்ப கஷ்டம். முதல்ல நல்ல கதை வேணும். அது வேலாயுதம் படத்தில் இருக்கு.

நடிக்க வந்த புதிதில் ர‌ஜினி பாணியில் நடிப்பதா சொன்னீங்க?



எம்‌ஜிஆர், ர‌ஜினி ரெண்டு பே‌ரின் பாணியுமே எவர்கி‌‌ரீன். நான் ஆரம்பத்திலிருந்தே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதை பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அதை நான் மறுக்கலை.

படத்தோட இசை…?

பாடல்கள் எல்லாமே ஹிட். ரொம்ப முக்கியமா விஜய் ஆண்டனியோட ‌ரீரெக்கார்டிங். அது படத்துக்கு பெ‌ரிய பலம். இந்த நேரத்தில் ஜெயம் ரவிக்கு நன்றி சொல்லணும். அவரும் இந்தப் படத்தோட கதை விவாதத்துல பங்கேற்றார். அப்புறம் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் சார். அவரும் பல ஆலோசனைகள் தந்தார். தயா‌ரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏன் எதுக்குன்னு கேட்காம கேட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். இப்படியொரு அருமையான வெற்றியை தந்த இயக்குனர் ராஜாவுக்கு என்னோட நன்றி

Thursday, November 17

விஜய் ரசிகர்கள் இப்பொழுது தமிழ் நாட்டின் சேவகர்கள் விஜய் பெருமிதம்


விஜய் ரசிகர்கள் இப்பொழுது தமிழ் நாட்டின் சேவகர்கள் விஜய் பெருமிதம்

விஜய் நடித்து வெளிவந்த வேலாயுதம் அவருக்கு 52 -வது படம் இதையொட்டி அவருடைய ரசிகர்களான 52 கல்லூரி மாணவர்கள் உடல் உறுப்பு தானம் செய்தார்கள் இந்த நிகழ்ச்சிள் விஜய் கலந்துகொண்டு 52 மாணவர்களையும் பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்தார் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி உண்மையான வேலாயுதம் விஜய்யின் ரசிகர்கள் தாங்களும் வேலாயுதம் பாணியில் மக்களுக்கு நல்லது செய்ய போவதாக அறிவித்து உள்ளார்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாகும் காஜல்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்திற்கு ஏஞ்சலா ஜான்சனை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள்.

விஜய் - ஏஞ்சலா ஜான்சனை வைத்து ஒரு போட்டோ ஷுட் நடத்தினார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தில் இருந்து தேதிகள் பிரச்னை காரணமாக விலகி விட்டாராம் ஏஞ்சலா ஜான்சன்.

இதனால் வேறு ஒரு நாயகியை தேடி வந்தார்கள். இந்தியில் முன்னனி நாயகியாக இருக்கும் சோனம் கபூரை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வலம் வந்தன.

இந்நிலையில் விஜய் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். டிசம்பர் 1ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறவர் காஜல். தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக மாற்றான், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் மற்றும் ராம் சரண் தேஜா உடன் ஒரு படம் என நடித்து வருபவர் விஜய் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'மாலை நேர மழைத்துளி' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

தல-தளபதி மீண்டும் இணையும் சோலே..??


இந்தியில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்க வைக்கும் படம் ‘சோலே’. 1975ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பும், தர்மேந்திராவும் நடித்திருந்தனர். தற்போது அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும், இளைய தளபதி விஜய்யும், அல்டிமேட் ஸ்டார் அஜித்தையும் வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சுமார் 16 வருடங்களுக்கு முன் அஜித்-விஜய்யும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அதற்கு பிறகு, மீண்டும் இவர்கள் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தை யார் இயக்கப் போகிறார்கள், அஜித்தும்-விஜய்யும் இணைவார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அப்படி இருவரும் இணைந்தால் தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளியாக இந்த படம் அமையும் என்பதில் ஆச்சர்யமில்லை.

Tuesday, November 15

விஜய்யின் தமிழில் நண்பன் தெலுங்கில் '3 ராஸ்கல்ஸ்

'Nanban' as '3 Rascals' in Teluguஇயக்குநர் ஷங்கரின் 'நண்பன்' படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலன்று வெளியாகிறது. தமிழில் 'நண்பனாகவும்' தெலுங்கில் '3 ராஸ்கல்ஸ்' ஆகவும் வெளியாகிறது. 'வேலாயுதம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இளைய தளபதி விஜய்க்கு அடுத்த பெரிய படம் 'நண்பன்'. 'வேலாயுதம்' அரங்குகள் நிறைந்து வெற்றி நடைபோடுகிறது. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து பொங்கலன்று வெளியாகும் 'நண்பன்'. திருநாளில் ரிலீசுக்காக காத்திருக்கிறது 'நண்பன்', அதே நாளன்று தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கிலும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது '3 ராஸ்கல்ஸ்'. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இலியானா முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர். தெலுங்கில் இலியானா நன்கு அறிமுகமானவர், நிறைய வெற்றிபடங்களை கொடுத்திருக்கிறார். விஜய் மற்றும் ஜீவாவிற்கும் நல்ல மார்கெட் இருக்கிறது. ஸ்ரீகாந்த் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் இந்த படத்திற்குப் பின் அதை எதிர்பார்க்கலாம். 'நண்பன்' திரைப்படம் ஏற்கனவே அமீர்கான் - கரீனா கபூர் நடித்த '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்

விதவிதமாக படையெடுக்கும் விஜய் !

ஆரம்பகாலத்தில் காதலை மையமாகக் கொண்ட கதைக்களங்களில் நடித்து வந்தார் விஜய். 'பூவே உனக்காக' , ' காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் நடித்து வந்தவரை கமர்ஷியல் பாதையில் முழுமையாக திரும்பிய படம் 'திருமலை'. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

'திருமலை' படத்தினை தொடர்ந்து 'கில்லி', 'மதுர', 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'ஆதி', 'போக்கிரி', 'குருவி', 'வில்லு', 'வேட்டைக்காரன்', 'சுறா', 'வேலாயுதம்' என நடித்த பல படங்கள் கமர்ஷியல் படங்கள். இடையில் 'சச்சின்', 'காவலன்' என சில படங்கள் மட்டுமே வேறு கதை களங்களில் நடித்தார்.

விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படங்கள் அனைத்துமே விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக, விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கும் 'நண்பன்' படத்தில் விஜய்க்கு சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல் முழுக்க காமெடியில் பட்டைய கிளப்பி இருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் கூட இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம் என்கிறது படக்குழு.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தினை முடித்துவிட்டு கெளதம் மேனன் இயக்கும் 'யோஹன்' படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தில் இன்டர்நேஷனல் ஏஜென்ட்டாக நடிக்க இருக்கிறார்.

விஜய்யை வெவ்வேறு பரிமாணங்களில் அடுத்த அடுத்த படங்களில் பார்க்க இருப்பதால், வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதுகுறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்று வருகிறது

Monday, November 14

விஜய் வெளியிடும் தமிழில் 'உருமி' இசை!


மலையாளத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றுள்ள உருமி படத்தின் தமிழ் வடிவ இசையை நாளை வெளியிடுகிறார் நடிகர் விஜய்.

பிருத்விராஜ் பிரபு தேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன் நடிக்கும் படம் உருமி. மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் தமிழ் வடிவம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் குறித்து ஜெனிலியா கூறுகையில், "நான் நடித்த படங்களில் மிக வித்தியாசமானது, புதிய அனுபவத்தைத் தந்தது உருமி. சரித்திரக் கதையில் நடிப்பது சாதாரணமானதல்ல என்பதை இந்தப் படத்தில் புரிந்து கொண்டேன். அற்புதமாக வந்துள்ளது," என்றார்.

சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம், மலையாளத்தில் விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது. பல்வேறு படவிழாக்களிலும் பங்கேற்று வருகிறது. தீபக் தேவ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

உருமி தமிழ் படத்தின் பாடல்கள் நாளை சத்யம் திரையரங்கில் வெளியிடப்படுகிறது. நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.

பதினைந்தாம் நூற்றாண்டில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது உருமி

Saturday, November 12

வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய்-இலியானா ஜோடி

நண்பன் படத்திற்காக ரஜினி, கமலை மையமாக வைத்த காட்சிகள் இடம்பெறுவதாக படக்குழு செய்திகள் தெரிவித்துள்ளன.

இயக்குனர் ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் இளைய தளபதி விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நண்பன் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ரஜினி காந்த்,கமல் ஹாசன் இருவருக்கும் புகழ் மரியாதை சூட்டுகிற காட்சி இருப்பதாக பட உலகில் பரபரப்பான பேச்சு இருந்தது.

நாயகி இலியானாவுடன் நாயகன் விஜய் எந்திரன் ரஜினி, இந்தியன் கமல் இருவரையும் நினைவு படுத்துகிற மாதிரியான காட்சியை நண்பனில் இயக்குனர் ஷங்கர் வைத்திருப்பதாக பட உலகில் பேசப்பட்டது. இதையெல்லாம் கேள்விப்பட்ட இயக்குனர் ஷங்கர் சிரித்தாராம்.

நண்பன் படத்தின் பாடல் காட்சியில் விஜய்-இலியானா ஜோடி நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நண்பன் பட ஜோடி தோன்றவில்லை. விஜய்-இலியானா இருவரும் பாடலுக்கு பொருத்தமான வகையில் நடித்துள்ளார்கள் என்கிறது பட வட்டாரம்.

Thursday, November 10

விஜய்யின் நண்பன் படத்துக்கு சிக்கல...??

தமிழ் டப்பிங் படங்களை வெளியிட ஆந்திராவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த கட்டுப்பாடால் ஷங்கர் இயக்கியுள்ள 'நண்பன்' படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னணி ஹீரோ நடித்த அல்லது பிரபல இயக்குனர்கள் இயக்கிய தமிழ் டப்பிங் படங்கள், நேரடி தெலுங்கு படங்களை விட ஆந்திராவில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இதனால் தெலுங்கு பட வியாபாரம் பாதிப்படைவதாக ஆந்திர மாநில விநியோகஸ்தர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். வரும் பொங்கலன்று (தெலுங்கில் சங்கராந்தி) ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'நண்பன்' படம், '3 ராஸ்கல்ஸ்' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்கள் ஆந்திராவில் வசூலில் சக்கைப்போடு போடுவது வழக்கம். அதனால் அன்று வெளியாகும் நேரடி தெலுங்கு படங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆந்திர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆந்திர மாநில பிலிம் சேம்பர் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவில், சுரேஷ் பாபு, தில் ராஜு, நாட்டிகுமார், உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் பூபால், ராம சுப்பா ரெட்டி, விஜயேந்தர் ரெட்டி உட்பட விநியோகஸ்தர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, டப்பிங் படங்களுக்கான வரியை தற்போது இருக்கும் 20லிருந்து 50 சதவிகிதமாக உயர்த்துவது, சங்கராந்தி, விநாயக சதுர்த்தி, தசாரா உட்பட முக்கியமான விழாக் காலங்களில் நேரடி தெலுங்கு படங்களைத் தவிர மற்ற படங்களை வெளியிடாமல் இருப்பது, டப்பிங் படங்களுக்கான தியேட்டர்களை குறைப்பது, இவற்றை ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கும். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் அரசாணை வெளியிட, ஆந்திர அரசுக்கு பரிந்துரைக்கப்படும். ''டப்பிங் படங்களுக்கு நாங்கள் எதிரியல்ல. ஆனால், தமிழ் நாட்டில் டப்பிங் படங்களுக்கு அதிக வரி விதிப்பு இருப்பதை போல இங்கும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்'' என்று தயாரிப்பாளர் சுரேஷ் பாபு கூறினார். இந்த விஷயங்களை ஆந்திர அரசு ஏற்றுக்கொண்டால், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் 'நண்பன்' படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பார்ட்டியில் விஜயும் கமலும் சேர்ந்து டான்ஸ்

விஸ்வரூபம் தாடி கெட்-அப் லீக் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே,
தனது மகள் ஸ்ருதிஹாசன் அறிமுகமான 7-ஆம் அறிவு இசை வெளியீட்டுக்குக் கூட வரவில்லை கலைஞானி கமல்.
விஸ்வரூபம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தபிறகே க்ளீன் ஷேவ் செய்து வெளிநடமாட ஆரம்பித்தார்.
வெளிவிழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்த பிறகு செம உற்சாக மூடில் இருந்த கமல் இம்முறை தனது பிறந்த நாளை முழு புத்துணர்ச்சியுடன் கொண்டாடி இருக்கிறார். கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஹைலைட்டாக கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் ஆகியிருகிறது, கமல் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து ஆடியிருக்கும் கலக்கல் நடனம்.

கமல் பிறந்தநாள் பார்ட்டியில்தான் விஜயும் கமலும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அந்த டான்ஸ் பார்ட்டி புகைப்படத்தை விஜயின் உதவியாளர் தனது மொபைல் போனில் படமெடுத்து கோலிவுட் செய்தியாளர்களுடன் பகிர்ந்துள்ளார். பொதுவாக
மாஸ் ஹீரோக்கள் தங்கள் ஈகோவை தூரமாக தூக்கி வைத்து விட்டு இப்படி சேர்ந்து நடனமாடுவது பாலிவுட் வழக்கம். இந்த நல்ல விஷயத்துக்கு கமலும் விஜயும் பிள்ளையார் சுழி போட்டிருகிறார்கள்

முருகதாஸ், விஜய்யும் இணையும் படம் திருச்செந்தூ‌ரில் விரைவில்

'வேலாயுதம்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் விஜய். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் பெயர், நாயகி, எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

படத்தின் நாயகியாக ப்ரியங்கா சோப்ரா இருக்கலாம் என்கிறது படக்குழு.

கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் வேண்டுமாம். ப்ரியங்கா சோப்ராவுடன் '180' படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் இன்னொரு நாயகியாக நடிக்கலாம் என்கிறார்கள்

Wednesday, November 9

ஸ்டார் டாக்'கில் விஜய்யின் 'பிக்' டாக்

வேலாயுதம்' கொடுத்த வெற்றியால் விஜய், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதில் ஒன்றாக பிக் எப்.எம் மற்றும் பிபிஸி இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'பிக் பிபிஸி ஸ்டார் டாக்' என்ற நிகழ்ச்சி. இதில் விஜய்யின் 52ஆவது படமான 'வேலாயுதம்' வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும், கல்லூரி மாணவர்களுமான 52 பேர் உடலுறுப்பு தானம் செய்தனர். அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ததற்கான அடையாள அட்டையை விஜய் அவர்களுக்கு வழங்கினார். மோகன் பவுண்டேஷன் அமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்தது. மேலும் லிட்டில் ஆர்.ஜே என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஆர்.ஜே தேர்வு போட்டி நிகழ்ச்சியையும் விஜய் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 52 மாணவர்களும் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒருவர், "உங்களிடம் உள்ள குணங்களில் எது உங்களுக்கு அதிகம் பிடிக்கும்? என்று கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், "என்னிடம் மற்றவர்களுக்கு பிடிக்காத ஒன்று எனக்கு அதிகம் பிடிக்கும். அதுதான் அமைதி." என்று கூறினார்.

வெங்கட்பிரபுவை வாழ்த்திய தல.. தளபதி..!

நவம்பர் 7 திரையுலகை பொருத்தவரை 'பிறந்த நாள் ஸ்பெஷல்' நாள் !

கமல், அனுஷ்கா, பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோருக்கு நவம்பர் 7 பிறந்த நாள்.

தனது பிறந்த நாளை எப்போதும் சந்தோஷமாக நண்பர்களுடன் கொண்டாடும் பழக்கம் உடையவர் வெங்கட்பிரபு. இந்த முறை தனது பிறந்த நாளை அமைதியாக வீட்டிலேயே கொண்டாடினார்.

ஆனாலும் அஜீத், விஜய், சிம்பு என அனைவரும் வாழ்த்தியதில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இது குறித்து வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் " உங்களது அனைத்து வாழ்த்துகளுக்கும் நன்றி. மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறேன்.

தல அஜீத், தளபதி விஜய் இருவரும் வாழ்த்தினார்கள். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.

எஸ்.டி.ஆர் இரவு 12 மணிக்கு எனது நண்பர்களுடன் வந்து வாழ்த்து சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். ஆகையால் அவருக்கும் எனக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எனது பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை. ஆனால் உங்களால் கொண்டாடிவிட்டேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tuesday, November 8

ஹன்சிகா மிகவும் அழகாக நடித்து இருக்கிறார் நடிகை குஷ்பு


விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வெளி வந்த படம் வேலாயுதம் இந்த படம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றது.
இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று இருந்தாலும் அதனை கொண்டாடும் முடிவில் இல்லையாம் ஹன்சிகா.

ஹன்சிகா பரீட்சைக்கு இரவு பகல் பாரமால் படித்து வருகிறாராம்.

சமீபத்தில் ஹான்சிகாவை பாராட்டி வந்த செய்தி ஒன்று அவருக்கும் அளவு கடந்த சந்தோஷத்தை கொடுத்த இருக்கின்றது.

வேலாயுதம் படத்தை பார்த்த குஷ்பு தனது டிவிட்டர் இணையத்தில் வேலாயுதம் படம் பார்த்தேன் ஹன்சிகா மிகவும் அழகாக நடித்து இருக்கிறார்.

அவரை என்னுடன் ஒப்பிட்டு பேசுவது நன்றாக இருக்காது. எனது ஆரம்ப கால படங்கள் நான் நடித்ததை விட அருமையாக நடித்து இருக்கிறார் ஹன்சிகா என்று தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் இந்த செய்தியை ஹன்சிகா கேட்டதும் தமிழ் திரையுலகம் ஒரு காலத்தில் கொண்டாடிய நடிகை தன்னை பற்றி இவ்வாறு கூறியிருப்பது அவரை அளவு கடந்த சந்தோஷத்தை கொடுத்து இருக்கின்றது என்று கூறினார்.

வேலாயுதம் படத்தை முதலில் பார்க்க விரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினி


7ஆம் அறிவு பார்த்த சில தினங்களில் வேலாயுதம் படத்தையும் பார்க்க பிரியப்பட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இத்தனைக்கும் 7 ஆம் அறிவு பார்க்க வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தவர் சூர்யாவின் மனைவி ஜோதிகாதான்.

ஆனால் வேலாயுதத்தை ரஜினியே விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம். உடனே ஒரு திகதியையும் முடிவு செய்து ப்ரீவியூ தியேட்டரையும் தயாராக வைத்திருந்தார்கள்.

இந்த நேரத்தில் கன்னடர்களில் சிலர் கூட்டமாக சேர்ந்து வேலாயுதம் தியேட்டர்களில் கலாட்டா செய்தனர்.

கன்னட ரக்சண வேதிகே என்ற அமைப்பின் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போனார்கள் வேலாயுதம் படத்தின் விநியோகஸ்தர்கள்.

இந்த நேரத்தில் வேலாயுதம் படத்தை பார்க்கப் போனால், அதுவும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் என்பதை புரிந்து கொண்டு, சட்டென்று படம் பார்க்க வருகிற நிகழ்ச்சியை கேன்சல் செய்தாராம் சூப்பர் ஸ்டா

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம்

vijay-ar-murugadossநண்பன் போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகள் படு சுறுசுறுப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. அடுத்து கௌதம்மேனனின் யோகன் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளையதளபதி யோகன் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்யை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் காதல்கதை ஒன்றை அவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த கதை விஜய்க்கு ரொம்பபே பிடித்திருக்கிறதாம். ‘இந்த கதை நிச்சயம் பெரிய அளவுக்கு ஹிட்டாகும்… படத்தை எப்போ துவக்கலாம்..’ என்று ஏ.ஆர்.முருகதாஸிடமே திருப்பி கேட்டிருக்கிறார் விஜய். பொங்கலுக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது

Saturday, November 5

அமீரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கண்ணபிரான்



ஆதி பகவான்” படத்தை தொடர்ந்து டைரக்டர் அமீர் அடுத்து விஜய்யை வைத்து “கண்ணபிரான்” என்ற படத்தை இயக்க போகிறாராம்.
“ராம்”, “மெளம் ‌பேசியதே”, “பருத்திவீரன்” போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய டைரக்டர் அமீர், தற்போது “ஜெயம்” ரவியை வைத்து “ஆதி பகவான்” என்ற படத்தை இயக்கி வருகிறார். “எங்கேயும் காதல்” படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் இந்தபடத்தில் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து வருகிறாராம். இந்தபடத்தை முடித்த பின்னர் அமீர், அடுத்து “கண்ணபிரான்” என்ற படத்தை இயக்க இருக்கிறர்.
அதிலும் இப்படத்தின் நாயகனாக நமது இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது

ஏழாம் அறிவை மிஞ்சும் வேலாயுதம் !

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்து அளித்தார் விஜய்.

'வேலாயுதம்' குறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

'வேலாயுதம்' படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கி வெளியிட்டது ஐங்கரன் நிறுவனம்.

இங்கிலாந்தில் 'வேலாயுதம்' 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் 'ஏழாம் அறிவு' திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'நண்பன்' படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.

'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய் - ஜெயம் ராஜா கூட்டணி சேர்த்தாலும சேரும் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்

Friday, November 4

குஷ்புவே சொல்லிட்டாங்க.! : ஹன்சிகா பூரிப்பு

விஜய்க்கு நாயகியாக ஹன்சிகா நடித்து வெளிவந்துள்ள படம் 'வேலாயுதம்'. இப்படம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ரசிகர்களிடையே படம் வரவேற்பை பெற்று இருந்தாலும் அதனை கொண்டாடும் முடிவில் இல்லையாம் ஹன்சிகா. காரணம் தனது பரீட்சைக்கு இரவு - பகல் பாராமல் படித்து வருகிறாராம்.

'வேலாயுதம்' படத்தை பார்த்த குஷ்பு தனது டிவிட்டர் இணையத்தில் " வேலாயுதம் படம் பார்த்தேன். ஹன்சிகா மிகவும் க்யூட்டாக நடித்து இருக்கிறார். அவரை என்னுடன் ஒப்பிட்டு பேசுவது நன்றாக இருக்காது. எனது ஆரம்ப கால படங்களில் நான் நடித்ததை விட அருமையாக நடித்து இருக்கிறார் ஹன்சிகா " என்று தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் இந்த செய்தியை ஹன்சிகா கேட்டதும் மேலும் பூரித்து போனாராம். தமிழ் திரையுலகம் ஒரு காலத்தில் கொண்டாடிய நடிகை தன்னை பற்றி இவ்வாறு கூறியிருப்பது அவருக்கு அளவு கடந்த சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது.

Thursday, November 3

வேலாயுதம் படம் மூலம் முதல் முறை வெற்றியை ருசித்துள்ளார் ஹன்சிகா

Vijay and Hansikaமுதல் முறை வெற்றியை ருசித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி, வேலாயுதம் படம் மூலம்!

ஹன்ஸிகா ஏதோ இப்போதுதான் ப்ரஷ்ஷாக பீல்டுக்கு வந்தது போலத் தெரிந்தாலும், உண்மையில் அவர் 5 ஆண்டுகள் 'பழைய' நடிகை!

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், கன்னடத்தில் புனித் ராஜ்குமார், இந்தியில் ஹிமேஷ் ரேஷம்மியா என ஒரு பெரிய ரவுண்ட் அடித்து எதிலும் ஜெயிக்க முடியாமல், தமிழுக்கு வந்தார். இவரது தள தள தோற்றத்தில் தோல்விகளை மறந்து போன தமிழ் சினிமாக்காரர்கள், உடனே வாய்ப்புகளை தந்தனர்.

முதல் படம் தனுஷுடன், அடுத்த படம் ஜெயம் ரவியுடன். இரண்டுமே தோல்விகள்தான். அதைத் தொடர்ந்து வந்ததுதான் வேலாயுதம்.

இதிலும் அவருக்கு பெரிய வேடம் என்று சொல்ல முடியாது. முக்கிய வேடத்தை ஜெனிலியா செய்தாலும், ரசிகர்களை தூண்டில் போட்டு இழுக்கும் கவர்ச்சி நாயகியாக வந்தார் ஹன்சிகா. இந்த கவர்ச்சி ஒளிவெள்ளத்தில் ஜெனிலியா மங்கிப் போனார்.

இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஹன்ஸிகா புராணம்தான். அம்மணியின் தாராளம், தயாரிப்பாளர்களிடம் அனுசரணையாகப் போவது, சம்பளத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் என நிறைய புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த வெற்றிப்படம் வந்த பிறகு இது தொடருமா என்பது வேறு விஷயம்.

வேலாயுதம் தந்த சந்தோஷத்தில் மிதக்கும் ஹன்ஸிகா, இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லையாம்.

ஏன்?

"நான் என் படத்தை பெரிய திரையில் பார்க்கவே மாட்டேன். இதுவரை நான் நடித்த எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்க மாட்ட்ன். வேலாயுதம் படத்தையும் பார்ப்பதாக இல்லை. நான் மிகப் பெரிய விமர்சகர். என்னைப் பார்த்து நானே கோபப்படும்படி ஆகிவிட்டால்... அதான்.

ஆனால் என் அம்மா, நண்பர்கள் பார்த்துவிட்டு ஓஹோ என்று பாராட்டினார்கள்.

இந்தப்படத்தின் விமர்சனங்களைப் படித்துவருகிறேன் (ஜெயிச்சாதான் படிப்பீக போல!). என்னை இந்த அளவு திறமையாக பயன்படுத்திய ஜெயம் ராஜா, விஜய்க்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

ஆக்சுவலா, முதல்நாள் ஸ்பாட்டுக்குப் போகும்வரை எனக்கு ராஜா, விஜய் இருவரையுமே தெரியாது. ஆனால் ஒரே நாள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சி எனக்கும் விஜய்க்கும். நாங்க நல்ல பிரண்ட்ஸாயிட்டோம்," என்கிறார் ஹன்ஸிகா.

அடுத்து உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிம்புவுடன் வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார் ஹன்ஸிகா. இவை இரண்டுமே நிச்சயம் வெற்றிப் படங்கள் என்கிறார் உறுதியாக.

ஓ... இப்பவே கோடீஸ்வர நடிகைகள் லிஸ்டுக்கு வந்தாச்சா!

அண்ணன் எடுக்கும் அவதாரமே வேலாயுதம்!

நகரத்தில் நடக் கும் அநீதியை அழிக்க, ஒரு பாசக்காரக் கிராமத்து அண்ணன் எடுக் கும் அவதாரமே வேலாயுதம்! (எங்கேயோ கேட்ட கதை!) நிச்சயமாக இது விஜய் ரசிகர்களுக்கு விட்டதைப் பிடிக்கும் விருந்து. தெலுங்கில் ஹிட் அடித்த 'ஆசாத்’ கதையின் 'அலேக்’தான். ஆனால், பக்கா டிங்கரிங் பார்த்து, காமெடிக் கபடி சேர்த்து விஜய்க்கான மாஸ் மசாலா பேக்கேஜுடன் களம் இறங்கி இருக்கிறார் இயக்குநர் எம்.ராஜா.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஜே...ஜே...எனக் கூட்டம் கூடி, ஒவ்வொரு கேரக்டரும் அலப்பறை பண்ணுவதுதான் படத்தின் முதல் பலம். 'துண்டு போட்டு மட்டும் இல்லை... அருவா போட்டும் சீட்டு புடிப்போம்ல...’ என்று வேலாயுதம் அறிமுகமாகிற காட்சியிலேயே படத்துக் கான எனர்ஜி ஏற்றிவிடுகிறார் விஜய். ஆட்டம் பாட்டம், ஆக்ஷன், சென்டிமென்ட் என எல்லா ஏரியாவிலும் ஃபுல் சார்ஜ் பேட்டரியாகச் சுழல்வ தில்... விசில் விஜய்!

நியூயார்க் டைம்ஸ்’-ல் கிடைக்கும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு, நம் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முனைகிற பத்திரிகையாளர் கேரக்டர் ஜெனிலியாவுக்கு. இருந்தாலும் மாஸ் ஹீரோ படத்தில் வரும் பவுடர் டின் ஹீரோயின்தான் இவரும். விஜய்யின் முறைப்பெண்ணாக ஹன்சிகா மோத்வானி. மசாலா குருமாவுக்குத் தளதளவென மிதக்கும் கிளாமர் தக்காளி. மத்தபடி மேடம் கிராமத்துப் பொண்ணாமாம்... தாவணி கட்டியிருக்காங்க!

முன் பாதியில் காமெடி குத்தகை எடுத்திருக்கும் சந்தானம் தியேட்டரை அதிரடிக்கிறார். அப்பாவித் திருடனாக பொசுக்கு பொசுக்கென்று படுத்துக்கொண்டு 'என் பொணத்தைத் தாண்டித்தான் நீ போகணும்’ என அவர் அடிக்கிற லூட்டி... பக்கா காமெடி மேளா!

இன்னும் எத்தனை படங்களுக்குத்தான் தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்களையே காட்டிக்கொண்டு இருப்பார்களோ? அதுவும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து கிராமத்தில் பார்சல் குண்டுவைப்பது எல்லாம் விஜய காந்த்தே வி.ஆர்.எஸ். வாங்கிய ஏரியா!

ரசாயன உலையில் மோதப்போகும் ரயிலை ஏகப்பட்ட ஆக்ஷனுக்குப் பிறகு விஜய் தடுப்பதே க்ளைமாக்ஸ்தான். அதன் பிறகு வருவது எல்லாம் 'வேலாயுதம் பார்ட் டூ!’

திரைக்கதையோடு சேர்ந்து பயணித்து பரபரப்பு கியர் தட்டுகிறது ப்ரியனின் ஒளிப்பதிவு. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் தியேட்டருக்குள் இருக்கும் வரை மாஸ் ஏற்றுகிறது.

வழக்கமான மசாலாதான். ஆனால், அரைத்த விதத்தில் காமெடியும் காரமுமாகத் திகட்டாத ருசி!


நன்றி விகடன்..!

Wednesday, November 2

கமலா தியேட்டரும் வேலாயுதமும்!

7 aam Arivu and Velayuthamகமலா திரையரங்கில்

தீபாவளியை முன்னிட்டு ஏழாம் அறிவு படம் வெளியானது. அதற்கு போட்டி என்று சொல்லும் வகையில் விஜய் நடித்த வேலாயுதம் வெளியானது.

இந்த நிலையில் ஏழாம் அறிவு படத்தை கமலா தியேட்டரில் எடுத்துவிட்டு, வேலாயுதம் திரையிடப்பட்டதாகவும், இதனால் விஜய் ரசிகர்கள் மொட்டை போட்டு காவடி தூக்கி ஊர்வலம் நடத்தி அதைக் கொண்டாடியதாகவும் செய்தி வெளியானது.

இதை மறுத்து கமலா தியேட்டர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "எங்கள் கமலா திரையரங்கில் 7ஆம் அறிவு படம் முதல் வாரத்தின் 2 திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் செய்திருந்தோம். 3-ம் வாரத்தில் இருந்து “ஒப்பந்தப்படி ஸ்கிரீன் 1-ல் 7 ஆம் அறிவும், ஸ்கிரீன் 2-ல் வேலாயுதம் திரையிடப்படமும் திரையிடப்பட்டு 2 படங்களும் எங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது,

இலங்கையில் வசனங்கள் நீக்கம்

இதற்கிடையே, ஏழாம் அறிவு படத்தில் தமிழருக்கு ஆதரவாக வரும் வசனங்களை நீக்கிவிட்டு இலங்கையில் படம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம் சில நாடுகளின் கூட்டு சதிதான் என்பன போன்ற வசனங்கள் இடம்பெற்று உள்ளன. ஒருத்தனை ஒன்பது நாடுகளஷ் சேர்ந்து தாக்குவது வீரமா என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியது. அங்கு இப்படத்தை வெளியிட அனுமதி மறுத்து மறு தணிக்கைக்கு அனுப்பினர்.

சிங்களர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்த வசனங்களை நீக்கிய பிறகே படத்தை இலங்கையில் வெளியிட அனுமதித்தனர்.

விஜய் அம்மாவுக்கு ஜெயலலிதா கொடுத்த புதிய பதவி!

Shoba Chandrasekaranநடிகர் விஜய்யின் அம்மாவும் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனின் மனைவியுமான ஷோபாவுக்கு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு இசைப் பள்ளிகளின் கலை இயல் அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரனை நியமித்துள்ளார் ஜெயலலிதா.

கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருச்சி, நெல்லை, திருவாரூர், காஞ்சிபுரம், சேலம், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, சீர்காழி, ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கும் 17 அரசு இசைப்பள்ளிகளுக்கும் இனி ஷோபா சந்திரசோகரன் அறிவுரைஞராக செயல்படுவார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தப் பதவியை அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஷோபா சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணியாற்றியது விஜய்யின் மக்கள் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஷன் வியாபாரத்தில் களமிறங்கும் இலியானா


தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் இலியானா ஆவார். இவர் இப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜயுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

நாயகி இலியானா தனது சொந்த ஊரான கோவாவில் இருந்தாலும் படப்பிடிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் ஃபேஷன் வேட்டை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளாராம்.

ஃபேஷன் டிசைனிங் படித்த தனது அம்மாவிற்கு இலியானா ஷோரூம் வைத்து கொடுத்துள்ளார். அதற்காக நவீன உடைகளை வகை, வகையாக வாங்கி குவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு செல்லும் போது நவீன ரக ஆடைகள் பற்றி விசாரித்து விடுவார்.

இன்றைய இளசுகளுக்கு பிடித்தமான ஆடைகளை ஷோரூமுக்கு கொண்டு வந்து விடுவார். படங்களில் நடித்துக் கொண்டே ஃபேஷன் வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார் என்கிறது சினிமா வட்டாரம்.

தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களைத் திரையிடுவதை எதிர்த்து கன்னட அமைப்பு போராட்டம்

பெங்களூர்: கர்நாடக மாநிலம் உதயமான ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களைத் திரையிடுவதை எதிர்த்து பெங்களூரில் நேற்று கன்னட ரட்சண வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். வேலாயுதம் படம் திரையிடப்பட்ட தியேட்டரை முற்றுகையிட்டு பேனர்களைக் கிழித்ததால் அங்கு படம் நிறுத்தப்பட்டது.

பெங்களூரில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் விஜய் நடித்துள்ள வேலாயுதம் படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று கர்நாடகத்தில் அந்த மாநிலம் உருவான நாள் ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து அங்கு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேலாயுதம் திரையிடப்பட்டிருந்த ராதாகிருஷ்ணா என்ற தியேட்டருக்கு 100க்கும் மேற்பட்ட கன்னட ரட்சண வேதிகே என்ற அமைப்பினர் வந்தனர். தியேட்டரை முற்றுகையிட்ட அவர்கள் பட பேனர்களை கிழித்தெறிந்தனர்.

இன்று ராஜ்யோத்சவா தினம். இந்த நாளில் கன்னடப் படங்களை மட்டுமே திரையிட வேண்டும். இன்றுமட்டுமல்ல இன்னும் ஒரு மாதத்திற்கு கன்னடப் படங்களை மட்டுமே திரையிட வேண்டும் என்று அவர்கள் மிரட்டினர். இதையடுத்து படக் காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் படம் பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழ்ப் படம் திரையிடப்படுவதை தடுத்து நிறுத்தி கன்னட அமைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை

Tuesday, November 1

விஜய் அஜீத் போன்ற தோற்றம் உடைய இருவர் நடிக்கும் புதிய படம்!!

தமிழ்ப் படம்.... இந்தப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள்.

ரஜினி, கமல், அஜீத், ராமராஜன் என சகட்டுமேனிக்கு அனைவரின் படங்களையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம் இது (Spoof). 2010-ம் ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றான இந்தப் படத்தை சி எஸ் அமுதன் எடுத்திருந்தார்.

மக்கள் இந்தப் படத்தை ரசித்தாலும் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் கடுப்பிலிருந்தார்கள்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு மகா நக்கலான திரைக்கதையுடன் அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார் சிஎஸ் அமுதன்.

இந்தப் புதிய படத்துக்கு அவர் வைத்துள்ள பெயர் 'தலவலி'!

இந்தப் படத்தின் நாயகர்கள் அஜீத் - விஜய். அதாவது இந்த இருவரைப் போன்ற தோற்றம் உடைய இருவர் நடிக்கப் போகிறார்கள். படம் முழுக்க அஜீத் - விஜய் பற்றிய நக்கல்தான் பிரதானமாக இருக்குமாம்.

அதை சிம்பாலிக்காக சொல்வதுபோலத்தான் தலவலி என்று தலைப்பிட்டுள்ளாராம் அமுதன்.

ரசிகர்கள் தங்கள் அபிமான நாயகன் அஜீத்தை 'தல' என்றும், விஜய்யை இளைய'தளபதி' என்றும் அழைத்து மகிழ்வது தெரிந்ததுதானே!

வேலாயுதம் வெள்ளி விழா காண மொட்டை போட்ட விஜய் ரசிகர்கள்!

Vijay Fansவிஜய் நடித்த வேலாயுதம் வெள்ளி விழா காண அவரது ரசிகர்களும் ரசிகைகளும் நேற்று மொட்டை போட்டுக் கொண்டு வடபழனியில் ஊர்வலம் போனார்கள்.

தீபாவளிக்கு வெளியான வேலாயுதம் படம், கூடுதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருவதாக விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றியை பார்ட்டி கொடுத்து கொண்டாடி வருகிறார் விஜய். இந்த நிலையில், அவரது ரசிகர்களோ இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாட மொட்டை போட்டு, ஊர்வலம் போகத் தொடங்கியுள்ளனர்.

சென்னை வட பழனி முருகன் கோயிலில் மொட்டை போட்டுக் கொண்ட இந்த ரசிக ரசிகைகள், அங்கிருந்து கமலா திரையரங்கம் வரை ஆட்டம் பாட்டம் என ஊர்வலமாக நடந்து வந்தனர்.

இந்த மொட்டைக்கு இன்னொரு பின்னணியும் உள்ளது. வழக்கமாக விஜய் படம் வெளியாகும் அரங்கம் கமலா. ஆனால் தீபாவளிக்கு இங்கு வெளியான படம் ஏழாம் அறிவு. இப்போது, வேலாயுதத்தை கூடுதலாக வெளியிட்டுள்ளது அந்த அரங்கம். அதைக் கொண்டாடவs இப்படி ஊர்வலம் போனார்களாம்!

ஏ எம் ரத்னத்துக்கு உதவும் விஜய்!





விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர்.

ஆனால்…. அவருக்கும் அடி சறுக்கியது. தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட, வட்டியாக மட்டுமே மாதம் ரூ 10 கோடி வரை அவர் கட்டுவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் அன்பாலயா பிரபாகரன் தெரிவித்தார்.


இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து சற்றே மீள அவருக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.


ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கியவர்.


சில தினங்களுக்கு முன் விஜய்யிடம் ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா கதையைச் சொன்னாராம். கில்லி மாதிரி விறுவிறுவென திரைக்கதை இருக்க வேண்டும் என விஜய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அப்படியே ஆகட்டும் என்று சொன்ன விக்ரம், சாலிகிராமத்தில் உள்ள ரத்னம் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஸ்க்ரிட்டை பக்காவாக உருவாக்கி வருகிறாராம்.


த்ரீ இடியட்ஸ் ரீமேக் பற்றி தெளிவான ஒரு அறிவிப்பு வந்ததும், இந்தப் படத்தை அறிவித்துவிடலாம் என்று ரத்னத்துக்கு வாக்களித்துள்ளாராம் விஜய்!

வேலாயுதமும் நாங்கு நாட்களில் 40 கோடியும் !

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார்.

'ஏழாம் அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

'ஏழாம் அறிவு' நேற்று வரை ( அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'நாங்கு நாட்களில் வேலாயுதம்' 40 கோடியும் வசூல் செய்துள்ளன. குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் இதற்காக தனது வீட்டில் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம் அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில் 'ஏழாம் அறிவு'க்கு பதிலாக 'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாம் வாரத்தில் நிறைய தியேட்டர்களில் 'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை அடுத்து கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்.

Box officeINR40 crore (US$8.92 million)
(four days)


http://en.wikipedia.org/wiki/7aum_Arivu
Box officeINR40.25 crore (US$8.98 million)
(six days)


டிரெய்லர் 'ஒஸ்தி'யா இருக்கு ! : விஜய், விக்ரம்

சிம்பு, ரிச்சா நடித்து வரும் படம் 'ஒஸ்தி'. தரணி இயக்க, தமன் இசையமைத்து வருகிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து வருகிறது. 'டபாங்' இந்தி படத்தின் ரீமேக் தான் 'ஒஸ்தி'.

இப்படத்தின் பாடல்கள் இசை விமர்சகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள், சிம்பு நடிப்பில் ஒரு கமர்ஷியல் காக்டெய்ல் காத்திருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை பார்த்த இயக்குனர் தரணியின் நெருங்கிய நண்பர்களான விஜய் மற்றும் விக்ரம் இருவரும் தரணியை பாராட்டியுள்ளனர்.

இது குறித்து இயக்குனர் தரணி " விஜய், விக்ரம் இருவருமே 'ஒஸ்தி' படத்தின் டிரெய்லரை பார்த்து விட்டு என்னை பாராட்டினார்கள். அவர்கள் இருவருமே பட டிரெய்லர் மிக பிரம்மாண்டமாகவும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் அமைந்து இருப்பதாகவும் கூறினர். அவ்வளவு பெரிய நடிகர்கள் எனது படத்தை பாராட்டியது என்னை வியக்கவைத்தது " என்று தெரிவித்துள்ளார்.

விஜய், விக்ரம் இருவருக்குமே படத்தின் டிரெய்லர் பிடித்து இருப்பதால் கண்டிப்பாக தமிழக மக்களிடையே படம் வரவேற்பை பெறும் என்று மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார் இயக்குனர் தரணி.

வேலாயுதம் குழுவினருக்கு விஜய் வீட்டில் விருந்து!

வேலாயுதம் படக்குழுவினருக்கு நேற்று இரவு தனது வீட்டில் விருந்து கொடுத்தார் நடிகர் விஜய்.

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடித்த வேலாயுதம் படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றிகரமாக ஓடுவதாக விஜய் தெரிவித்தார். கூடுதல் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளதாகவும், வசூல் அதிகரித்துள்ளதாகவும் இந்தப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வேலாயுதம் பட இயக்குநர் ராஜா, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட குழுவினர் மற்றும் நண்பர்களுக்கு தனது நீலாங்கரை வீட்டில் பெரும் விருந்து அளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம்ரவியும் விருந்துக்கு வந்திருந்தார்.

படத்தின் உதவி இயக்குநர்கள் அத்தனை பேருடனும் நெருக்கமாகப் பழகிய விஜய், தானே அவர்களுக்குப் பரிமாறினாராம்.

Related Posts Plugin for WordPress, Blogger...