இயக்குநர் ஷங்கரின் 'நண்பன்' படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலன்று வெளியாகிறது. தமிழில் 'நண்பனாகவும்' தெலுங்கில் '3 ராஸ்கல்ஸ்' ஆகவும் வெளியாகிறது. 'வேலாயுதம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இளைய தளபதி விஜய்க்கு அடுத்த பெரிய படம் 'நண்பன்'. 'வேலாயுதம்' அரங்குகள் நிறைந்து வெற்றி நடைபோடுகிறது. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து பொங்கலன்று வெளியாகும் 'நண்பன்'. திருநாளில் ரிலீசுக்காக காத்திருக்கிறது 'நண்பன்', அதே நாளன்று தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கிலும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது '3 ராஸ்கல்ஸ்'. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இலியானா முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர். தெலுங்கில் இலியானா நன்கு அறிமுகமானவர், நிறைய வெற்றிபடங்களை கொடுத்திருக்கிறார். விஜய் மற்றும் ஜீவாவிற்கும் நல்ல மார்கெட் இருக்கிறது. ஸ்ரீகாந்த் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் இந்த படத்திற்குப் பின் அதை எதிர்பார்க்கலாம். 'நண்பன்' திரைப்படம் ஏற்கனவே அமீர்கான் - கரீனா கபூர் நடித்த '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்
Tuesday, November 15
விஜய்யின் தமிழில் நண்பன் தெலுங்கில் '3 ராஸ்கல்ஸ்
6:21:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment