வேலாயுதம்' படத்துக்குப் பிறகு விஜய்யை வைத்து, ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படம் இயக்குகிறார்.
இந்த படத்தை ஜெமினி நிறுவனமும் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும் தயாரிப்பதாக இருந்தது. படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தனர். இந்த படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
படத்தின் பெயர் துப்பாக்கி???. படப்பிடிப்பு, மும்பையில் 26-ந் தேதி தொடங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படம் ஜெமினி நிறுவனத்திடம் இருந்து எஸ்.தாணுவுக்கு கை மாறியிருக்கிறது.
இதுபற்றி எஸ்.தாணுவிடம் கேட்டபோது, "செய்தி உண்மைதான். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது'' என்றார்













0 Comments:
Post a Comment